முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (03-05-2026) மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட போதும் அவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை
சனிக்கிழமை (02) காலை பத்து மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்காகச் சென்ற குறித்த இரு மீனவர்களும், சனிக்கிழமை (02) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலையாவது கரை திரும்பியிருக்க வேண்டும் ஆனாலும் நீண்ட நேரமாகியும் குறித்த இரு மீனவர்களும் படகும் கரை திரும்பவில்லை. இந்நிலையில் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (03) மாலை வரை நான்கு படகுகளில் சென்று தேடியும் இதுவரை அவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.
காணாமல் போன மீனவர்களையும் அவர்களது படகினையும் தேடும் நோக்கில், முல்லைத்தீவு கடற்பரப்பில் திங்கட்கிழமை காலை மீனவர்கள் பல படகுகளில் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்
இவ்விடயம் தொடர்பாக கடற்படையினர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்பினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அகவை வாழ்த்து – நவம்பர் 10
- புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கன மழையால் 9 ஆயிரம் ஹெக்டரில் இளம் சம்பா தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
- மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பல வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர், மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.
- “இஸ்ரேல்-ஹமாஸ் ‘முதல் கட்ட’ ஒப்பந்தம்: இரண்டரை ஆண்டுகளுக்கு பின் நம்பிக்கையின் குரல்கள் — செயல்படுத்தப்படாத சவால்கள்”
- அகவை வாழ்த்து | ஜனவரி 02
- திருச்சிராப்பள்ளி விவசாயிகள் அதிரடி போராட்டம்: நிறைவேறாத வாக்குறுதிகள், அரசு புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் தீவிரம்