நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 03/05/2026 ஞாயிற்றுக்கிழமை. Alkmaar என்னும் இடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுமார் காலை ஒன்பது மணி அளவில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளரான மயூரன் அவர்கள் ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து தேசிய கொடியினை திரு ஜெயம் அவர்களும் ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து நமது தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நெதர்லாந்து பொறுப்பாளர் திரு ஜெயா அவர்களும் ஈகைச்சுடரினை நெதர்லாந்து கிளைச் செயற்பாட்டாளர்கள் திரு சசிதரன் மற்றும் சுதா அவர்களும் ஏற்றி வைத்தனர். பின்னர் அகவணக்கம் மலர் வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து அனைத்து பிரிவுகளுக்குமான உதைப்பந்தாட்ட போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்று போட்டிகளில்.
13 வயதுக்குட்பட்டோரில்.
- முதலாம் இடத்தை YMTA விளையாட்டுக் கழகமும்.
- இரண்டாம் இடத்தை அம்ஸ்டர்டம் விளையாட்டுக் கழகமும்.
17 வயதுக்குட்பட்டோரில்.
- முதலாம் இடத்தை YMTA விளையாட்டுக் கழகமும்.
- இரண்டாம் இடத்தை ஸ்காகன் விளையாட்டுக் கழகமும்.
வளர்ந்தோரில்
- முதலாம் இடத்தை YMTA விளையாட்டுக் கழகமும்.
- இரண்டாம் இடத்தை ரோட்டர்டம் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன.
மக்களின் ஆரவாரத்துடன் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டிகள் வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வெற்றி பதக்கங்களும் வழங்கப்பட்டு பின் தேசியக்கொடி கையேட்டலைத் தொடர்ந்து சுமார் 6:00 மணி அளவில் தமிழரின் தாகம் தமிழின தாயகம் என்ற எமது தாரக மந்திரத்துடன் இனிதே நிறைவடைந்தது.

















