Tuesday, November 3, 2026
Home செய்திகள்இலங்கை‘துபாய் தனுஷ்கா’வின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய நபர் கைது

‘துபாய் தனுஷ்கா’வின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய நபர் கைது

by Amizhthu

கொழும்பு | 03.11.2026

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைப்பக்கப்பட்ட குற்றவாளியும் போதைப் பொருள் கடத்தல்காரருமான ‘துபாய் தனுஷ்க’ வின் உள்நாட்டு போதைப் பொருள் வலையமைப்பை நிர்வகிக்கும் ‘சுபா’ என்பவரின் சகா ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு திங்கட்கிழமை  (02) கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சல்கேன வீதியில் உள்ள வீடொன்றின் முன்பாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து  சுமார் 1  கிலோகிராம் 30 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பன்சல்கேன பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார்.

வெளிநாட்டிலிருந்து போதைப் பொருட்களை இரகசியமாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ‘துபாய் தனுஷ்க’ ஏற்பாடு செய்வதாகவும் இலங்கைக்கு அந்தப் போதைப் பொருட்களை பாதுகாப்பாக விநியோகிக்கும் பொறுப்பை ‘சுபா’ என்ற பெண் கையாள்வதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுபாவிற்கு சொந்தமான போதைப் பொருட்களை பாதுகாப்பாக மறைத்து வைத்து விநியோகிக்கும் பிரதான முகவராகச் செயற்பட்டு வந்துள்ளார். சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

You may also like

Leave a Reply