உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக அவை நடைபெற்றது. அவற்றை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.




📩 Contact Us For questions about refunds or returns, reach out to our support team: Email: amizhthu.com@gmail.com Dismiss
இன்றைய தினம் காலை உடல் நலப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவர் நோய்வாய்ப்பட்டு கரந்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

47 வயதான முனசிங்க, கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்டு பிரதேச சபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் ஆவார்.
இவர் உயிரிழந்தமைக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று சனிக்கிழமை (20.09.2025) மாலை 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிபார்க்க, அதனை செலுத்திய சாரதி சென்ற நிலையிலேயே இந்த முச்சக்கர வண்டி இவ்வாறு தீ பிடித்து எரிந்துள்ளது.
எனினும் முச்சக்கர வண்டியில் தீ பற்றி எரிவதை அவதானித்த பிரதேசவாசிகள்,பொலிஸார் ஒன்றிணைந்து நீர் ஊற்றி அணைக்க முயன்ற போது முச்சக்கர வண்டியின் முழுப் பகுதியிலும் தீ பரவி முற்றிலும் சேதமடைந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது முச்சக்கர வண்டியில் இரண்டு பேர் பயணித்திருந்ததாகவும் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

இலங்கை மின்சாரசபைத் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் 25 அமைச்சுக்களின் செயலாளர்களும் மூன்று தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்ற நிலையில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் பங்கேற்றிருந்தமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மின்சாரத் தொழிலாளர்களின் சட்டப் படி வேலை செய்யும் போராட்டம் 21 ஆம் திகதி வரை தொடரவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து எதிர்வரும் 24 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாகவும் மின்சார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடுத்த ஜனவரி மாதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

25 பஸ் நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பஸ் நிலையங்களில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு அதிக ஊதியம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இந்த நிறுவனங்கள் மக்களுக்கு முழுமையாக சேவை செய்யும் திறமையான நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையில் பெண் ஊழியர்கள் உட்பட 450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான நேர்காணல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெண்களை பணியமர்த்துவதற்கு முன்பு அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பேருந்துகளில் பெண் ஊழியர்களை பணியமர்த்துவதே ஆரம்ப திட்டம் என்றும், இது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
டந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யா மீதான மிக மோசமான உக்ரைன் பதிலடி தாக்குதல்களில் இந்தத் தாக்குதல் ஒன்றாகும். இதனால் உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டு வருகிறது.

இந்த சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது 19வது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்புகிறார். இது குறித்து ஜெலன்ஸ்கி கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனின் நலனுக்காக செய்த பல்வேறு விஷயங்களுக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கையை அமெரிக்கா செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம் அதன் பங்கை செய்கிறது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். சமீபகாலமாக ரஷ்ய அதிபர் புடின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் புடின் தன்னை ஏமாற்றியதாக டிரம்ப் கூறி வருவதால், ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை 03 பகுதியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சனிக்கிழமை ( செப்டெம்பர் 20) சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரினால் முற்றுகையிடப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது, வீரமுனை 03 பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 60,000 மில்லிலிட்டர் கோடா கசிப்பு, 4000 மில்லிலிட்டர் ஏ சி கேஸ் சிலிண்டர் 2 ஒரு தொகை ரப்பர் மற்றும் செப்பு குழாய் என்பன மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.பிரதிப்குமார தலைமையிலான குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வருகிறது.உக்ரைன் மீது ரஷ்யா நேற்றிரவு முழுவதும் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் சிலர் பலத்த காயமுற்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உக்ரைன் முழுவதும் பல்வேறு இடங்களில் 600க்கு மேற்பட்ட டிரான்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. சமீபத்திய வாரங்களில் உக்ரைன் மீதான அதன் வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சமாரா கவர்னர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிரிகளின் டிரோன் தாக்குதலில் நான்கு பேர் பலியானதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 149 டிரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தினோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா மீதான மிக மோசமான உக்ரைன் பதிலடி தாக்குதல்களில் இந்தத் தாக்குதல் ஒன்றாகும்.
ரஷ்ய டிரோன்கள் தங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக போலந்து மற்றும் ருமேனியா கூறியதைத் தொடர்ந்து, சமீப காலமாக பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று (21.09.2025) 49 ஆவது நாளாக தொடர்ந்து செல்கின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவினர் சனிக்கிழமை (20.09.2025) மாலை வருகை தந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளையோர் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாளாந்தம் மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிராம மக்கள்,பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றனர்.








நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையும் காற்றுடனான வானிலையும் தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
சிலாபம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேற்காசிய நாடான இஸ்ரேல், காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. கடந்த, 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

பிணைக்கைதிகளை மீட்க தான் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போரை துவங்கியது.பிணைக் கைதிகளில் பலர் இறந்து விட்டனர்; பலர் மீட்கப்பட்டனர். இன்னும் 47 பேர் ஹமாஸ் வசம் இருக்கின்றனர். ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்போம் என்று கூறி இஸ்ரேல் ராணுவம், கடந்த சில நாட்களாக காசாவில் தரைவழி தாக்குதலை தீவிரப் படுத்தியுள்ளது.
இந்த நிலையில், 47 இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் படங்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு பிணைக் கைதிக்கும் 1986ல் பிடிபட்டு கொல்லப்பட்ட இஸ்ரேலிய விமானப்படை அதிகாரியான ‘ரான் ஆராட்’ என்று பெயரிடப்பட்டு, அதனுடன், ஒரு எண்ணும் வழங்கப் பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்ததற்கும், எதிர்ப்பை மீறி காசாவை கைப் பற்றும் நோக்கில் படை யெடுப்பதற்கும் கண்டனம் தெரிவித்து வாசகம் எழுதப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலின் ஒவ்வொரு நடவடிக்கையும் , உயிருடனோ அல்லது இறந்த பிணைக் கைதியையோ பெற முடியாத அளவுக்கு இருப்பதாக ஹமாஸ் பயங்கரவாதிகள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் தலைவிதி, ரான் ஆராட் போலவே இருக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
“மும்பை – ஆமதாபாத் வழித்தடத்தில் சூரத் – பிலிமோரா இடையிலான முதற்கட்ட ‘புல்லட் ரயில்’ சேவை 2027, டிசம்பரில் துவங்கும்,” என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாத் வரை, நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டதை அடுத்து, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய இந்த அதிவேக ரயில் சேவை ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 1.08 லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் தயாராகி வருகிறது.
இந்த அதிவேக ரயில், மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் இருந்து புறப்பட்டு, குஜராத்தின் வாபி, சூரத், ஆனந்த், வதோதரா, ஆமதாபாத் நகரங்களை இணைக்க உள்ளது. இதுவரை 321 கி.மீ., துாரத்துக்கான பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், ரயில் செல்வதற்கான சுரங்கம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
பாந்த்ரா குர்லா வளாகம் மற்றும் ஷில்பாட்டா இடையில் 21 கி.மீ., துாரம் சுரங்கப் பாதை அமைக்கும் பணியை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பார்வையிட்டார்.
மும்பை அருகே கன்சோலியில், கடைசி 5 கி.மீ., துாரத்துக்கான சுரங்கப் பாதை துளையிடும் பணி நேற்று நிறைவடைந்தது. இதை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிறைவு செய்து வைத்தார்.
பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நம் நாட்டில், அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில் சேவை, 2027, டிசம்பரில் துவங்கும். முதற்கட்டமாக சூரத் – பிலிமோரா இடையில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது, 2028ல் தானேவையும், 2029ல் பாந்த்ரா குர்லா வளாகத்தையும் இணைக்கும். நடுத்தர வர்க்கத்தினருக்கான போக்குவரத்தாக இருக்கும் புல்லட் ரயில் சேவையின் கட்டணம் குறைவாகவே இருக்கும்.
மும்பை – ஆமதாபாத் இடையிலான பயண துாரம் ஒன்பது மணி நேரமாக இருக்கும் நிலையில், புல்லட் ரயில் சேவை அதை 2 மணி நேரம் 7 நிமிடங்களாக குறைக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு ரயில் புறப்படும் வகையில் சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முழு வலையமைப்பும் நிறைவு பெற்றவுடன், அலுவலக நேரங்களில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இருக்கும். மும்பை மற்றும் ஆமதாபாத் இடையேயான பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை; பயணியர் ரயில் நிலையத்திற்கு வந்து ஏறலாம். – இவ்வாறு அவர் கூறினார்.