மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று கரும்புலிகளால் மூழ்கடிப்பட்ட சிறிலங்கா கடற்படையின் சாகரவர்த்தனா” போர்க்கப்பலிலிருந்து கைப்பற்றபப்ட்ட ஆயுதங்களைப் பார்வையிடும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்.





கடற்புலிகளின் வரலாற்றில் ஒருமைல்கல்லாக பதிவாகிவிட்ட இலங்கை கடற்படையின் சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பல் மீதான கடற் கரும்புலித் தாக்குதல் ஒரு பார்வை.

வடமராட்சிக் கடற்பகுதியில் கடலில் வலைவீசி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீதானதாக்குலுக்குப் பதிலடியாக கடலில் ஒருதாக்குதல் நடாத்துமாறு .தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதற்கமைவாக கடற்புலிகளின் அணிகள் பிரிக்கப்பட்டு சிறப்புத்தளபதி சூசை அவர்கள் தளபதி கங்கைஅமரன் அவர்கள் துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்கள் தலைமையில் வேவு நடவடிக்கைகளுக்கு நாலாபுறமும் அனுப்பப்டடன வேவு வீரர்களின் கண்களில் சிக்கிக்கொண்டது
சாகரவர்த்தனா இலங்கை கடற்படையின் நான்கு பெரிய ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களில் சாகராவர்த்தனாவும் ஒன்றாகும். இது 39.8m நீளமும் 7m அகலமும் கொண்டதாகும் .இதன் பிரதான ஆயுதங்களான ஒரு 40mmL/70 பீரங்கியும் இரண்டு 25mm கனோனும் இரண்டு 14.5mm கனரகத்துப்பாக்கி இரண்டும் ஐம்பது கலிபர் துப்பாக்கிகள் பி.கே ரகத் துப்பாக்கிகள்
ஏ.கே ரகத் துப்பாக்கிகளும் உள்ளடக்கிய இக் கப்பல்15 knots வேகத்தில் செல்லும் (மணித்தியாலத்தில் பதினைந்து கடல்மைல்வேகத்தில் செல்லும்) இக்கப்பலில் கட்டளை அதிகாரியாக கப்டன் தர அதிகாரியும் அவரின் கீழ் ஐம்பத்தியிரண்டு கடற்படையினர் பணியிலிருந்தார்கள் .
இப்பாரிய கப்பல் பற்றிய தகவல்கள் தலைவர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும் என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக இந்த பாரியஆழ்கடல் கப்பலுக்கான தாக்குதற் திட்டம் மிகவும் நேர்த்தியான முறையில் கப்பலின் எந்தப்பகுதி பலவீனம் என்பதை இணங்கண்டு அதற்கேற்ப தாக்குதல் திட்டம் தலைவர் அவர்களால் வடிவமைக்கப்பட்டு கடற்புலிகளுக்கு கொடுக்கப்பட்டது. மட்டுமன்றி இப்பாரிய கப்பல் தப்பக்கூடாது என்று உறுதியாகவும் தெளிவாகவும் கூறி கடற்புலிகளை வழியனுப்பிவைத்தார்.இத்தாக்குதல் திட்டத்தின்படி கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலிகள் தமது படகுகளால் மோதி கப்பலை மூழ்கடிப்பார்கள்.
அதற்கமைவாக 19.09.1994 அன்று மன்னார் கற்பிட்டிக்கடடலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்புக் கட்டளைக் கப்பல் மீது லெப் கேணல் டேவிற் தலைமையிலான சண்டைப் படகுகள் முறையே மாவீரர்களான லெப் கேணல் நிமல் லெப் கேணல் சலீம் கடற்கரும்புலி லெப்.கேணல் ரதீஸ் மேஐர் கண்ணன் கடற்கரும்புலி மேஐர் சுடரொளி கடற்கரும்புலி கப்டன் தணிகை கப்டன் தாயகி மேஐர் சிங்கன் மேஐர் கனியன் கடற்கரும்புலி மேஐர் வினோதா கப்டன் வில்வம்.ஆகியோர் தமது படகுகளால் தாக்கி கடற்கரும்புலிகளுக்கு வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலிகளான




லெப்.கேணல் நளாயினி மேஐர் மங்கை கப்டன் வாமன் கப்டன் லக்ஸ்மன் ஆகியோர் தமது கரும்புலிப்படகுகளால் மோதி கப்பலை மூழ்கடித்து கற்பிட்டக்கடலில் காவியமானார்கள்.
இதுவே கடற்புலிகளால் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக தாக்கி மூழ்கடிக்கப்பட்ட முதலாவது பாரிய கப்பலாகும் .அது மட்டுமன்றி கடற்புலிகளின் கடற்தாக்குதல் படையனியான சாள்ஸ் படையனியின் முதலாவது தாக்குதலாகும்.அந்தநேரம் ஆண் பெண் போராளிகளை இணைத்து உருவாக்கப்பட்டதே சாள்ஸ் படையணியாகும். இந்நடவடிக்கையில் கடற்புலிகளின் நீரடிநீச்சல் பிரிவின் பங்கும் மிகவும் அளப்பரியது.மேஐர் இன்பநிலா கடற்கரும்புலி மேஐர் பரன் தலைமையிலானஅணியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியையும் செவ்வனவே செய்திருந்தார்கள்.
இந்நடவடிக்கைகளை தலைவர் அவர்களின் நேரடிநெறிப்படுத்தலில் சிறப்புத்தளபதி சூசை அவர்களும் தளபதி கங்கைஅமரன் அவர்களும் துணைத்தளபதி பிருந்தன் மாஸ்ரரும் செவ்வனவே வழிநடாத்தியிருந்தர்கள்.இத்தாக்குதலில் பல நவீனரக ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டன.இக்கப்பல் கப்டன் கடற்புலிகளால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி
முள்ளியான், யாழ்ப்பாணம்
16.12.1965 – 19.09.1994
19.09.1994 அன்று கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்க் கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: எள்ளங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்
கடற்புலிகள் மகளிர் படையணியின் அனேகமான போராளிகளுக்கு அவள் நீச்சல் பழக்கியிருந்தாள். இரவு, பகல் பாராது பிழைகளோடு ஒருத்தியாக மங்கை நிற்ப்பாள். எங்களின் “மங்கை அக்கா எந்தக் கஸ்ரமான பயிற்சிகளையும் தான் முன்மாதிரியாகச் செய்து காட்டித்தான் எங்களைச் செய்யச் சொல்லுவா. எங்களுக்கு கஸ்ரமாக இருந்தாலும் மங்கை அக்காவே செய்கின்றா. எங்களால இயலாதோ” என்று செய்து முடிப்பம்.
எப்போதுமே முன்மாதிரியான போராளியாகவே நாம் அவளைக் கண்டோம். பிள்ளைகள் 04:30க்கு நித்திரை விட்டு எழும்பும்பெதேல்லாம் அவள் 04:00க்கே எழுந்து விடுவாள். எந்தப் பிழையும் நீந்தத் தெரியாமல் இருக்கக்கூடாது, குறைந்தது ஐந்து கடல் மைல்கலாவது நீந்திப் பழகியிருக்க வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.
அதற்காக வெயிலென்றும் மழையென்றும் பாராது பிள்ளைகளுடன் நனைந்தும் காய்ந்தும் நின்றாள். பிள்ளைகளை நீந்தப் பழகுவதற்கென கடலில் இறக்கி விட்டு அலைகளில் நனைந்தபடி அவள் நிற்ப்பாள். கால்கள் விறைத்தாலும் கண்கள் மட்டும் தூரத்தே புள்ளியாய்த் தெரியும் எதிரியின் விசைப்படகின் அசைவினைப் பார்த்தபடி நிற்கும்.

ஒரு முறை வடமராட்சி கிழக்குப் பிரதேசத்துக்கு மங்கை அலுவலாகச் சென்றிருந்தாள். அங்கிருந்து நான்கு படகுகள் இவர்களது பக்கம் வருவதாகச் செய்தி வந்தது. பிள்ளையால் நீந்துவதற்குப் போவார்களே , நான்கு படகுகளும் தாக்குதலை நிகழ்த்தலாம் , பிழைகள் கடலுக்குள் இறங்கினால் ஆபத்து. விடியுமுன்னரே அவள் சைக்கிளில் நீண்டமைல்கள் கடந்து கண்களில் சிவப்போடு வந்து சேர்ந்தாள். அவ்வளவு தூரம் ஒவ்வொரு போராலியாகளியும் கண்ணுக்குள் வைத்துப் பேணினாள்.
போராளிகள் வீணாக இறங்கக் கூடாது. இந்தப் போராட்டத்தில் நிறையச் சாதிக்க வேன்றும் என்பதில் தீவிரமாக நின்றாள். ஒவ்வொரு போராளிக்கும் படகு இயந்திர உதிரிப் பாகங்களிலிருந்து படகு ஓட்டுவது வரை சகல துறைகளையும் கற்றுக் கொடுத்தாள். கட்டுமரம் ஒடப்பழக்கி குல்லா வலிக்கக் கற்றுக்கொடுத்தது வரை அவள் சாதித்தவை ஏராளம்.
கடலலைப் பற்றித் தெரியாது. நீச்சல் பற்றி அடி தலை தெரியாது வந்த போராளிகளே அனேகம்.
ஐயோ….! நான் தளப்போறேன் எனக்குப் ‘ போஜா ‘ தாங்கோ என்று மூச்சுமுட்டி நிற்கும் போராளிகளுக்கெல்லாம் அண்ணையை (தலைவரை) நினைத்துக் கொண்டு பயிற்சி எடுங்கோ, கஷ்டம் தெரியாது என்று நம்பிக்கையூட்டி தைரியமளித்து பிள்ளைகளோடு எப்போதும் தானும் ஒரு பயிற்சியாளராகவே நின்றாள். எப்போதும் தலைவரின் வளர்ப்புப் பற்றியும் போராட்டம் பற்றியும் சொல்லிச்சொல்லி வாழ்ந்த போராளி அவள்.
அவளது முதர்சண்டை ஆனையிறவு ஆகாய கடல் வெளித் தாக்குதலாக அமைந்தது. அதற்க்கு அவள் விநியோகக் குழுவில் ஒருத்தியாகச் சென்றாள். அந்தச் சண்டையில் தான் திரும்பி வருவேன் என்ற உறுதியோடு தான் சென்றாள். கையில் சிறிய காயத்தோடு வந்தவளிடம் நிறையக் கனவுகள் இருந்தன. கரும்புலியாய்ப் பாயவேனும் என்ற கனவையே நெஞ்சமேல்லாம் நிறைத்து அதற்காகவே தன்னைத் தயார்ப்படுத்தினாள்.
பூநகரிச் சண்டைக்கும் அவள் லெப் கேணல் பாமாவுடனே சென்றாள். அலைகளில் நனைந்து நனைந்து படகோட்டியபடி கண்காணிப்பு படகின் ஓட்டியாக நின்றாள். லெப் கேணல் பாமா நீருந்து விசைப்படகை எடுக்கும்போது படகுக்கு ஓட்டியாக நின்று அதைக்கொண்டு வந்து சேர்த்து பெரிய வெற்றிப் பூரிப்போடு திரும்பவும் சென்றாள். எதிரியின் ஆயுதங்கள் அள்ளி “50 கலிபர்” தாங்கி கழற்றி இலக்குபிசகாமல் வந்து கரைசேர்த்த அந்தச் சண்டையில் அவளது பங்கு கணிசமானது.
கடைசியாக கற்பிட்டிக் கடலில் கரும்புலியாய்ச் செல்வதற்கு முன் அவள் படகு துறைத் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாக நின்றாள். ஒவ்வொரு போராளிக்கும் நுட்பமாக விளங்கப்படுத்தி உற்சாகமூட்டி தானே அருகிருந்து ஒவ்வொரு தேவைகளையும் கவனித்துச் சென்றாள். மங்கையக்கா தனக்கு என்ன தெரியாது என்றாலும் எந்தப் போராளியிடமும் கேட்டு அறிந்து கொள்ளும் திறன், எதையும் துருவித் துருவி நுட்பமாக கேட்டறிவது அவளிடம் எப்போதுமே இருந்தது. அப்படி என்றால் என்ன….? இப்படி செய்தால் சரிவருமா….? என்று அவளுக்குப் புதிய புதிய நுட்பமான் யோசனைகளை தோன்றும். அத்தாணிச் செயலிற் காட்டும் பொது மூக்கில் விரலைவைக்கத் தோன்றும்.
அங்கையற்கண்ணியின் தாக்குதலுக்குப் பின்னெல்லாம் அவளுக்குப் பொறுமை எல்லை கடந்துவிட்டது. எப்ப சர்ந்தப்பம் கிடைக்கும் என்று ஒவொரு நாளும் எதிர்பார்த்தாள். மனம் சலித்து ஓய்ந்ததில்லை, அந்த இடைப்பட்ட கணங்களிலெல்லாம் இயலுமானவரை போராளிகளுக்கு நீச்சல் பழக்கி, படகு ஓட்டப் பயிற்சி அளித்து அவற்றில் தன்னைத் தீவிரப்படுத்திக் கொண்டாள்.
கற்ப்பிட்டித்தாக்குதலுக்கு நெஞ்சிலே சாவை சுமந்தபடி வாய் ஓயாமல் அண்ணையைப் பற்றியே கதைத்தபடி சென்றாள். இலக்குச் சரிவராவிட்டால் காட்டுக்குள்ளையே இருந்திடுவன் கரையில் நின்ற போராளிகளுக்கு கைகளை அசைத்தபடி சொன்னாளாம்.
கற்பிட்டிக் கடலில் சிங்களக் கடற்படையின் கடலைரசனை தாக்கியழித்த கடற்கரும்புலிகள்
இரவு 11:45 மணி உச்ச நிலவு பொங்கித் தணிந்தது. மன்னார் கற்பிட்டிக் கடலில் ஓயாத அலைச்சத்தத்தின் மத்தியில் கடலரசன் விரித்தபடி நின்றது. நளாயினி தலைமையில் மங்கையின் படகு மின்னலாய் உயரக்கிளம்பிய அலைகளை கிழித்தபடி முன்னே சென்று மோதி வெடித்தது. லக்ஸ்மனும், வாமனும் சென்றபடகு கப்பலின் அடுத்தபுறம் மோதிவெடிக்க கடலரசன் தீப்பற்றிய படி கற்பிட்டிக் கடலடித் தளத்தோடு மெல்ல மெல்ல தாழ்ந்துபோனது.
நான் வெடித்ததன் பிறகு வீட்டிலை என்னுடைய உடுப்புகளோடு இருக்கிற மஞ்சள் சீலையை அம்மாவுக்கு உடுத்திவிடுங்கோ என்று கூறிச் சென்ற மங்கை சத்தமிட்ட கற்ப்பிட்டிக் கடலலையோடு கரைந்து போனாள். பிள்ளைகள் திருந்துறத்துக்குத் தானே அப்படிச் செய்தான். கிச்சினிலை விடப்போரியளோ..? அப்ப நல்லாப் பனங்காய்ப் பிட்டுச் செய்து சாப்பிடலாம் என்று கண்கள் விரிய வாயைச் சப்புக் கொட்டியபடி சொன்ன மங்கை வரவேயில்லை.
கண்கள் வழித்து மீண்டன. அவள் சிரித்தபடி….. சிதறிப்போன உடலைச் சுமந்தபடி அலைகுமுறி எழுந்தது.
– உயிராயுதம்

குகதாசன் பிரணவன்
நல்லூர், யாழ்ப்பாணம்
05.07.1974 – 19.09.1994
19.09.1994 அன்று கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்க் கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: கோப்பாய்
துயிலும் நிலை: நினைவுக்கல்
அவனில்லாமல் போனால் அடிப்பதற்கு வேருவீரர்கள் தயாராய் இருந்தனர். ஆனால்………
வெடிவாயன் பொருத்தமான பெயர்.
கூப்பிட்டால் செல்லமாகக் கோபித்து, ஒற்றைக் காலில் கலைப்பான்.
தச்சன்காட்டில், பலாலிப் பெருந்தளத்தின் ஒரு பகுதிக் காவல் வியூகத்தை உடைத்தெறிய முனைந்த ஒரு தாக்குதல்.
கை எலும்புகளையும் நொறுக்கி, வாய்ப் பகுதியையும் பிய்த்துக்கொண்டு போய்விட்டன துப்பாக்கிச் சன்னங்கள்.
ஒரு தண்டு இல்லாமல்போய், ஒரு பக்கமாய் இழுபட்டு, நெளிந்துபோயிருந்த வாயால் அவன் பேசும்போது, பார்க்கா அழகாய்த்தான் இருக்கும்.
அது மழலைக் குரல்.
பண்டத்தரிப்புக்குப் பகைவன் நகர்ந்த சண்டையில் காலை இழந்தவன், ‘பலவேகய – 02’ சண்டை துவங்கியபோது பொய்க்கால் பொருத்திக்கொண்டு ஆனையிறவுக்கு ஓடினான்.
இயக்கச்சியில் வைத்து, அடிக்காத குறையாய் துரத்திக் கலைத்த தளபதியோடு சண்டை பிடித்துக்கொண்டுதான் அவன் திரும்பி வந்தான்.
‘மணியந்தோட்டம் – 02’ பயிற்சி முகாம், நான்காண்டுகளுக்கு முன்னர் லக்ஸ்மனை போரிற்குத் தயாராக்கியது.
யாழ்ப்பாணக் கோட்டைதான் அந்த வீரனின் முதற்களம்.
மாங்குளம், சிலாபத்துறை, ஆனையிறவு, மணலாறு, காரைநகர், பலாலி; பகைவன் கூடாரமடித்த இடங்களிலெல்லாம் அந்த வீரன் போர்தொடுத்தான்.
குடிமகனொருவன் தன் தாய்மண்ணுக்குகாகச் செய்யக்கூடிய அதியுயர் தியாகத்தைத் தான் செய்யவேண்டுமென்ற வேட்கையை, சுவாசப் பகல் சுமந்துகொண்டு திரிந்தான் அந்தக் கரும்புலி.
அந்த சர்ந்தப்பத்திற்காக அவன் கடல்மடியில் தவம் கிடந்த நாட்கள் ஏராளம்.
சதுரங்கப் பலகையில், தனது சேனையை மதிநுட்பத்தோடு வழிநடாத்தி, எதிராளிகளின் அரசர்களை முற்றுகையிட்டு, முறியடித்து வீழ்த்துகிற அந்த சதுரங்க வீரன்.
கற்பிட்டிக் கடலில், ஒரு கரும்புலியாய் எதிரியின் “கடல் அரசனைத்” தகர்த்து மூழ்கடித்தான்.
‘ஆசீர்’ கடற்பயிற்சிப் பாசறையில் தளபதி சாள்ஸ் வனைந்தெடுத்த கடற்புலி வீரர்களுள், லக்ஸ்மனும் ஒருவன்.
கிளாலிக் கடற்தளத்தில் அந்த வீரத் தளபதி வீழ்ந்தபோது, அவனது கைகளில் வளர்ந்த இந்தக் கரும்புலிக் குழந்தைகள் வெகுண்டெழுந்தார்கள்.
சுட்டெரித்துச் சாம்பராக்க எங்கள் கடலெங்கும் பகைவனைத் தேடியலைந்தார்கள்.
பருத்தித்துறையில் ‘சுப்பர் டோறா’ வைத் தகர்த்தபோதும், இதயத்தில் விழுந்த அந்த ஆழமான காயம் ஆறவேயில்லை.
அந்தத் தளபதியின் நினைவோடு ஆரம்பிக்கப்பட்ட பயிற்சிக் கல்லூரியில் பயின்று வெளியேறிய மாணவர்கள்தான்.
சிலாபத்துறையில், பகைவனின் மடியில் நெருப்பு மூட்டினார்கள்;
‘சாகரவர்த்தனா’ வைச் சாகடித்துச் சாதனை படைத்தார்கள்.
லக்ஸ்மன் இயல்பாகவே கெட்டிக்காரன். விஷயம் தெரிந்தவன்.
அநேகமாக, பொதுவான எல்லா விடயங்களைப் பற்றியும் அவனது மூளைக்குள் பதிவுகள் இருந்தன.
முகாமிற்குப் பொருள்கள் ஏற்றிவரும் உழவுப்பொறி ஐயாவைப் பார்த்து, “நடுப்பெரிய சில்லு ரெண்டுக்கும் எத்தினை கிலோ காத்து?” என்பான்.
ஐயா தலைசொறிந்து நிற்க, “பெரிய சில்லுகள்தானே, எப்படியும் 150, 200 கிலோவரும்” என நாங்கள் நினைக்க….
“40 கிலோதானய்யா……….. கணக்கா இல்ல” மேதாவியாய் பதில் சொல்லுவான்.
பள்ளிக்கூட மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் பையன்களைக் கைதட்டிக் கூப்பிட்டு,
“கிரிக்கற் பந்து எவ்வளவு நிறை இருக்க வேண்டும்?” என்பான்.
பதில் தெரியாமல் முழித்து, அப்பாவித்தனமாய்ச் சிரிக்கும் பையன்களைப் பார்த்து “110 கிராம் தம்பி” சொல்லிவிட்டு வருவான்.
அவனைப் பெரிய அறிவாளி என்று சொல்வதற்கில்லை: ஆனால், எவரோடும் எதைப்பற்றியும் கதைக்கக்கூடிய அளவுக்கு அவன் இருந்தான்.
அது அவனது சிறப்பு இயல்புகளில் ஒன்று. வீட்டுக்கு வெளியில், நாட்டுக்கு வெளியில், பூமிக்கு வெளியில், எங்கள் ஞாயிற்றுத் தொகுதிக்கு வெளியில், எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தின் வெளியில் மானிடன் கண்டுபிடித்த எல்லாவற்றையும் பற்றித் தானும் அறிந்திருக்க வேண்டும் என்ற முனைப்பும் முயற்சியும் கொண்டவன் லக்ஸ்மன்.
அந்த ஆர்வத்தினால்.
எல்லாவற்றையும் பற்றித் துருவித் துருவி ஆராய்வான்.
‘றாடர்’ படிப்பிக்க வந்தவர் குழம்பியே போனார். அவன் குடைந்த குடையலுக்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு,
“பிரண்டவன்”
‘பிரணவன்’ என்ற அவனது இயற்பெயரை நாங்கள் தான் இப்படி மாற்றினோம்!
பிறந்தது 05.07.1974இல்.
ஊர் நல்லூர்; சங்கிலி மன்னனின் பழைய இராசதானி.
படித்தது யாழ்ப்பாணம் ‘ஸ்ரான்லி கல்லூரி’யில் கிரிக்கற் பைத்தியம்.
வீட்டில் துடுப்போடும் பந்தோடும்தான் படுக்கைக்குப் போவானாம்.
லக்ஸ்மனுக்கு தச்சன்காட்டுச் சண்டையில் வெடிபட்டு, ஒரு கையில் இயக்கம் இல்லாமல் போய்விட்டது.
பண்டத்தரிப்பில் மிதிவெடி வெடித்து ஒரு காலில் பாதம் சிதைந்துபோய்வ்ட்டது.
இருந்தபோதும், கடலில் இறங்கி, தோழர்களின் தோள்களைப் பற்றி மெல்ல மெல்ல நீந்தப் பழகியவன், கொஞ்சகாலத்திற்குப் பிறகு, தன்னந்தனியாக நீந்திக் கடந்த தூரம் 5 கடல் மைல்கள.
லக்ஸ்மன் நல்லதொரு படகோட்டி. நீண்டகால அனுபவம் பெற்றிருந்தவர்களை விடவும் குறுகிய காலத்திற்குள் அவன் பெற்றிருந்த திறமை, எங்களை ஆச்சரியப்பட வைத்தது. கடற்புலிகளின் சிறந்த படகோட்டிகளுள் ஒருவனென அவனைச் சொல்ல முடியும்.
இன்னதென்று இல்லாமல், என்னவிதமாக வடிவமைக்கப்பட்ட படகையும் தனது கைகளுக்குள் அவன் வசப்படுத்துவான். உருவாக்கப்படும் போது சமநிலை தவறிவிட்ட ஒரு படகை எல்லோரும் கைவிட்டுவிட, கிளாலியில் அவன் தான் கையிலெடுத்துக் கடலில் இறங்கினான்.
தாக்குப்பிடிக்க முடியாமல் தலைதெறிக்க ஓடினான் பகைவன்.
லக்ஸ்மனின் படகு உறுமிக்கொண்டு தண்ணீரில் ஓடும், ‘அக்சிலேற்றரை’ க் கூட்டி அவன் வேகமூட்டும்போது, அணியம் குத்தி நிமிரும், படகு தாவிக் கடந்து பாயும்.
உடலை சரித்து, ‘ஸ்ரியறிங்கை’ அவன் வளைத்துத் திருப்புகிற லாவகத்தில், படகு பக்கவாட்டில் சரிந்து வளையும், தண்ணீர் அள்ளித்தெறிக்கும்.
இயந்திர இயக்கத்தை அவன் உச்சப் பயன்பாட்டுக்கு உயர்த்த, படகு அசுர வேகத்தைப் பெரும். அலை கிழித்து வழிவிடும். கடல் பிளக்கும். நெளிந்த வாயை இன்னும் நெளித்து அவன் ஆனந்தமாய் சிரிப்ப்பான்.
அந்தி சாய்கிற செவ்வானப் பின்னணியில் ஆகா! அது ஒரு கண்கொள்ளாக் காட்சிதான்.
ஒரு கரும்புலி வீரன், வாழ்வில் எதற்குமே கவலைப்படமாட்டானாம்; ஒரே ஒரு விடயத்தைத் தவிர. தான் தாக்குகிற இலக்கு முக்கியத்துவம் குறைந்ததாக இருந்துவிடக்கூடாது என்பது மட்டும்தான், ஒரு கரும்புலி வீரனுக்குக் கவலையாக இருக்குமாம்.
ஒரு கரும்புலி வீரனென்ற வகையில் தனக்குள்ளிருந்த அந்தமன ஏக்கத்தை அந்த நண்பன் எங்களுக்கு இடைக்கிடை சொல்வதுண்டு.
நெடுநாளாய் அவர்கள் தேடிய பெரிய இலக்கு, வசதியாய்க் கடலில் வருவதாக வேவு வீரர்கள் தகவல் தந்த ஒரு மாலைப்பொழுது.
தனது அன்புத் தங்கையின் ‘சாமத்திய வீட்டுக்குப்’ போகப் புறப்பட்டுக்கொண்டிருந்தான் அந்த அண்ணன்.
ஆசைத் தங்கை, அதிலும் ஒரு நல்ல நாள்; அன்னான் வருவான் என்று அவள் காத்துக்கொண்டேயிருப்பாள்; இனி ஒருபோதும் பார்க்கக் கிடைக்காமலும் போகலாம்….. அங்கேயும் போகவேண்டும்.
பெற்றெடுத்த தேசம்; பிணங்களாய் தினம் ஒதுங்கும் எமதினிய மக்கள்; பகைவனின் ஆளுகையில் எம் கடல்; தேடி அலைந்த இலக்கு; தவறிவிட்டுவிடக்கூடாத ஒரு சர்ந்தப்பம்…… இங்கேயும் நிற்க வேண்டும்.
அவனில்லாமல் போனாலும் அடிப்பதற்கு வேறு வீரர்கள் தயாராகவும் இருந்தார்கள்.
ஆனாலும் அந்தத் தர்மசங்கடமான நிலைக்கு அவன் சுலபமாக முடிவெடுத்தான்.
படகைத் தயார்செய்து கடலில் இறக்கினான்.
நல்ல காலம்….. பகைவனுக்கும் அவனது தங்கைக்கும் நல்ல காலம், காலநிலை வாய்ப்பாக அமையாததாலும் வேறு காரணங்கள் தடையாக வந்ததாலும் பகைவன் தப்பிவிட்டான்.
மறுநாள்தான் தளபதிக்கு விஷயம் தெரிந்தபோது, அவனைத் துரத்துக் கலைத்தார் வீட்டுக்கு.
இதே போலவேதான்,
இன்னொரு நாள், இன்னொரு முறை, இன்னொரு இலக்கு, இன்னொரு தயார்ப்படுத்தல், இன்னொரு தங்கைக்குச் ‘சாமத்திய வீடு’
மீளவும் ஒரு இக்கட்டான நிலை,
புறப்படுவதற்கு முன்னாலிருந்த சின்ன இடைவெளிக்குள்,
ஓடோடி வீட்டுக்குச் சென்று, எல்லாரோடும் ஒன்றாயிருந்து, அன்புத் தங்கையை ஆரத் தழுவி முத்தமிட்டு விடைபெற்றுப் போனவன்…… போனதுதான்.
காத்துக்கொண்டிருந்தவர்க்ளுக்கு, சிலாபத்துறையில் கப்பலடித்த அந்த செய்திதான் வந்தது!
– விடுதலைப்புலிகள் இதழ்

மிக்கேல் ஜேசுதாசன்
பண்டிதர் குடியிருப்பு, கிளாலி, கிளிநொச்சி
முகவரி (கோவையில் இருந்தவாறு): பண்டிதர்குடியிருப்பு, கிளாலி, யாழ்ப்பாணம்.
05.12.1976 – 11.11.1993
11.11.1993 அன்று பூநகரி – நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: கொடிகாமம்
துயிலும் நிலை: வித்துடல்
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வீரவேங்கை எழிலருவி
அருள்தாஸ் புஸ்பமலர்
விநாயகபுரம், முழங்காவில், கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 26.09.1977
வீரச்சாவு: 29.09.1993
29.09.1993 அன்று புலோப்பளை பகுதியில் யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: முழங்காவில்
துயிலும் நிலை: நினைவுக்கல்

இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
மண்கிண்டிமலை முகாம் தகர்ப்பின் பின் மணலாற்றில் நின்ற யாழ்மாவட்ட தாக்குதலனியைச் சந்தித்த அப்போதைய விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் (1992ம் ஆண்டு மாவீரர் நாளன்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் அணிவகுப்பு மரியாதையை முதன் முறையாக விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதியாக ஏற்றார்.

இனி எங்கள் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நீங்கள் இங்கேயே நின்று காடு சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடுமாறு கூறினார்.எதற்க்கும் நாங்கள் தலைவரிடம் சென்று மேலதிக தகவல்களை உங்களுக்குச் சொல்வதாகவும் கூறி புறப்பட்டார்.அவர் சென்று நான்கு நாட்களின் பின் யாழ்மாவட்டத் தாக்குதலனியையும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியையும் உடனடியாக வெளிக்கிடுமாறும் பணிக்கப்பட்டது அதற்கமைவாக அவ் அணிகள் புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.அங்கு அணிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு பயிற்சிக்காக அனுப்ப்பட்டது.
அங்கே மிகக் கடுமையான வேகமான பயிற்சிகள் தொடர்ந்தன . 28.09.1993.அன்று இராணுவம் முன்னேறுவதாகவும் அதற்காக அணிகள் புறப்படுமாறு பணிக்கப்பட்டது. அதற்கமைவாக புறப்பட்ட அணிகள் பளையில் இறங்கினதும் அங்கு நின்ற போராளிகள் வந்த போராளிகளுக்கு களநிலவரங்களை விளங்கப்படுத்தியதும்.வந்த போராளிகளுக்கு அப்போது தான் விளங்கியது.இது ஒரு பாரிய நகர்வென்று.ஆகவே அப் பாரிய நடவடிக்கைக்கு எதிரான மறிப்புத்தாக்குதலை அங்கு நின்ற அணிகளுடன் இவ் அணிகள் தொடுத்தனர்.மாலையாகியதும் எதிரி நகர்வை நிறுத்தினான்.
அணிகள் தற்காலிக அரணமைத்துக் கொண்டிருக்க தளபதி பால்ராஜ் அவர்கள் கதைப்பதற்காக அணிகளை பின்னே வருமாறும் அதற்கமைவாக வேவு அணிகள் அவ்விடங்களுக்கு வந்தது.அணிகள் பின்னே வந்து நின்றன தளபதி பால்ராஜ் அவர்கள் 29.09.1993 அன்று அதிகாலையில் வந்து தாக்குதல் பற்றி கதைத்து விட்டு மன்னார் மாவட்ட தாக்குதலனியுடன் நின்று அவர்களுக்கு உதவுமாறும் கூறிவிட்டுச் சென்றார்.அவரின் திட்டப்படி இராணுவத்தின் நகர்வு கிளாளியை நோக்கி இருப்பதாகவும. முன்னேறும் படையினரை முன்பக்கமாக தாக்கும் வேளையில் சிலவேளை பக்கபாட்டாக நகர்ந்தால் அதற்கேற்ற வகையில் உங்களுடைய தாக்குதல்கள் நீங்கள்எடுத்துக் கொண்டிருந்த பயிற்சிகளுக்கு ஏற்ற மாதிரி மிக வேகமானதாக இருக்க வேண்டுமெனக்கூறினார்.
அதற்கமைவாக அனைத்து அணிகளும் தத்தமக்குரிய நிலைகளில் இருந்தன.இதனை சற்றும் எதிர்பார்க்காமல் முதல் நாள் மாதிரி இன்றும் தாங்கள்( 29.09.1993.) பெரிய எதிர்ப்பில்லாமல் இடங்களைப் பிடிக்கலாம் என்ற கனவுடன் பாரிய எறிகணைத் தாக்குதல் நடாத்தியவாறு வந்த படையினர் மீது பாரிய தாக்குதலை அதுவும் மிகக் கிட்டிய தூரத்தில் நடாத்தினர்.அத்தோடு கடும் பயிற்சியிலிருந்த போராளிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் ஒட்டமெடுத்த படையினர் மீது கலைத்து கலைத்து தாக்குதல் நடாத்தினர்.
படையினர் அவர்களது புல்லட் புறூவ் ஜக்கற்றை கழற்றி எறிந்து ஓடியவர்களும் சப்பாத்துக்களை ஆயுதங்களை எறிந்துவிட்டு ஓடியவர்களுமாக ஓட்டமெடுத்தனர்.இச் சமரில் ஒரு ராங்கியை ராங்கி எதிர்ப்புப் பிரிவினர் தாக்கி செயழிழக்கச் செய்தனர்.அவ் ராங்கியைக் கூட விட்டுவிட்டு ஓட்டமெடுத்தனர்.இதை வைத்தே எப்படி அடி என்று தெரியும்.இச் சண்டையில் விடுதலைப்புலிகளிடம் கனரக ஆயுத பலமோ மோட்டார் பலமோ இருக்கவில்லை அவர்களிடம் இருந்ததோ ஒரேயொரு பலம் அது தான் மனோபலம்.இச் சமர் என்பது யாழ் மாவட்ட அணிகள், மன்னார் மாவட்ட அணிகள், வன்னி மாவட்ட அணிகள், மணலாறு மாவட்ட அணிகள் மகளீர் அணிகள், கடற்புலிகளின் அணிகள், படைத்துறைச் செயலக அணிகள், இம்ரான் பாண்டியன் படையணி, சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி,அரசியற்துறை அணிகள் மற்றும் சிறப்பு வேவுப் பிரிவு ஆகிய அணிகள் இச்சமரில் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை மிகவும் சிறப்பாகச் செய்தன.
இவ் வெற்றிகர முறியடிப்புச் சமரை விடுதபை் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடாத்தினார்.பால்ராஜ் அவர்கள் பாரிய விழுப்புண்ணடைந்ததும்.
மூத்த தளபதி பொட்டு அவர்கள் தொடர்ந்து களமுனையை வழிநடாத்தினார்.இச் சமரில் ராங்கியில் இருந்த ஜம்பது கலிபர் ஆயுதத்தை கழற்றச் சென்ற மேஜர் பிறேம்நாத் அவர்கள் வீரச்சாவடைந்தர்.(1993 ஆண்டு முதன் முதலாக இயக்கத்தில் கனரக ஆயுதப்பிரிவு உருவாக்கப்பட்டது அதன் பொறுப்பாளராக மேஜர் பிறேம்நாத் அவர்கள் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். இவ் வெற்றிகர முறியடிப்பச் சமரில் லெப் கேணல் நாயகன் அவர்கள் உட்பட எண்பத்தி நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.இத் தாக்குதலுக்கு பழி தீர்க்குமுகமாக இலங்கை விமானப் படையினர் சங்கத்தானை மக்கள் குடியிருப்பு மீது தாக்குதல் நடாத்தி தனது பழியைத் தீர்த்துக் கொண்டது.

சதாசிவம் கிருஸ்ணகுமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 02.01.1960
வீரச்சாவு: 16.01.1993
16.01.1993 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பினூடாக தாயகம் நோக்கி வந்தவேளை இந்தியக் கடற்படையினர் வழிமறித்து சென்னை துறைமுகம் நோக்கி கொண்டு சென்று கைது செய்ய முயன்றபோது தாம் பயணித்த கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: எள்ளங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்
தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.
போராட்ட வரலாறு
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.
1983இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவில் கிட்டு இடம்பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9 இல் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். 1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.
1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் ‘குவேக்கர்ஸ்’ இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார்.
வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால், தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன. கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று.
கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்
அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமை களைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்று ணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரை யொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர் வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார்.
கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
1979ல் ஆரம்ப காலப் பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம், சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும், வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது.
எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார்.
1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர், தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது. வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில், துரதிஸ்ட வச மாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண் ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள்.
துப்பாக்கி ரவை களைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர, பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவற வில்லை. சாரதி காயப்பட வாகனம் செய லற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது.
1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல , ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவ வாண்டின் இறுதிக் காலத் தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண் டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார்.
பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவ முகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார்.
யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார்.
மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங் கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவ வாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரி வடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.
தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது.
1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்து ரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார்.
இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்துவைத் திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார்.
இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு அப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார்.
கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். ‘களத்தில்’, ‘எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு, விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார்.
விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்று றுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார்.
கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது.
சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது. தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.
கேணல் கிட்டுவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர்
கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப் புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப் பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார்.
“கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.
இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது.
சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில்கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.
கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரி யற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.
ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண் டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட் டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன.
தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம்.
சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.
எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றி ருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.
எனக்கூறும் தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களோடு ஒன்றிணைந்து கேணல் கிட்டுவை நெஞ்சிலேற்றுவோம். அவர் நினைவு தினத்தில் உறுதியெடுத்துக்கொள்வோம்

சதாசிவம் கிருஸ்ணகுமார்
வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம்
தீருவில்,
கடலென மக்கள் இந்திய அரசு தமிழீழத்தின் இதயத்தில்
அடித்து வருத்திய பழைய நினைவைச் சொல்லிக் கொண்டு
நிற்கும் பன்னிருவரின் நினைவுக் கோயிலைச் சுற்றியும் நிரவியும் மக்கள். நெஞ்சங்களில் கோபம், அழுகை, கண்ணீர். சோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் எழுந்த சினம் அன்புக்குரியவனை இழந்து விட்ட தவிப்பு.
இயத்தில் விழுந்துவிட்ட இரண்டாவது அடி.
அதே தீருவில்.
கிட்டண்ணையும் அவர் தோழர்களும் கப்பலில்… படமாக…. நம்பமுடியாத நிஜம். படத்திலும் கிட்டண்ணையின் முகத்தில் கனிவான பார்வை தன் தலைவனை வரவேற்கும் மகிழ்ச்சியான சிரிப்பு. அம்மா தன் இளைய மகனின் இழப்பைத் தாங்கமுடியாமல் முத்த மகனைக் கட்டியணைத்து அழுதாள் அவளுக்குத் தலைவரும் மகன்தான்.தேசம் அழுதது.
மக்கள் கூட்டம் தங்கள் நெஞ்சத்தில் வாழ்ந்தவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தலைவனைப் பார்த்து கையசைத்தது. உறுதியான அசைவு. கண்ணீர் அலைகளினுாடே பிறந்த நம்பிக்கை
தலைவன் இருக்கின்றான் கிட்டண்ணை அடிக்கடி சொன்ன வார்த்தைகள் அவை.
ஜந்து வருடங்களுக்கு முன்பு. சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். முகங்களில் தலைவனைக் கண்ட மகிழ்ச்சி
தலைவன் சொல்லப் போகும் வார்தைகளுக்காக ஏங்கி நிற்கும் நிமிடங்கள்
அடுத்ததாக தளபதி கிட்டு அவர்கள் பேசுவார். மக்களின் ஆரவாரம் ஆர்ப்பரிப்பு.
அவர்களின் தலைவனின் முன்பு அவர்களின் தளபதி. மகிழ்ச்சிப் பிரபாகம்.தங்கள் தளபதியில் தாங்கள் வைத்திருக்கும் அன்பைத் தலைவனுக்குக் காட்டும் துடிப்பு உற்சாகம் அந்த ஆர்ப்பரிப்புக்குள் வார்த்தைகள் தெளிவாக விழவில்லை. ஒன்றிரண்டு மனதில் விழுந்தது
அப்படியே பதிந்தது.தலைவர் இருக்கிறார் அவரை நம்புங்கள் ஒரு துாய உள்ளத்தில் இருந்து வந்த சத்தியாமான
வார்த்தைகள். இன்று கூட வார்த்தைகளுககுத்தான் எவ்வளவு உயிர்ப்பு இருக்கின்றது.
கிட்டண்ணை. மக்களின் இதயங்களில் கூடுகட்டி வாழ்ந்த பறவை அது. அது எப்படி முடிந்தது அதொன்றும் அதிசயமான தல்ல.
தங்களுக்காகச் சாவுக்கு முன்னால் நிற்க்கும் வீரன் ஒருவனை நேசிக்க எவருக்குமே காரணங்கள் தேவையில்லை.
கிட்டண்ணை சிறந்த ஒரு போராளி வீரன். அவரின் துணிவு வீரம் விவேகம் வேகமன செயல்….. எல்லாவற்றையுமே மக்கள் இரசித்தனர். விரும்பினார். தாய் நாடு தன் குழந்தையில் வைத்த பாசம் அது. மக்கள் பயந்து நடுங்கி உறக்கமற்ற விழித்த காலம். வீதிக்கு வீதி செத்தழிந்த காலம் எல்லாம் மாறிப்போனது கிட்டண்ணையின் காலத்தில்தான். கோட்டையில் இருந்து ஆழி வெளிக்கிடுறானாம் மறுகணம் பி. அவசரமாக மேற்சட்டையைக் குட ஒழுங்காக அணியாமல் கிட்டண்ணை அங்கு நிற்பார். கிட்டர் நிற்கிறார் இனிப்பயமில்லை; மக்களின் மனங்களில் துணிவு பிறக்கும் இராணுவத்தினர் திரும்பி ஓடியதும் ஊர் முழுவதும் வெற்றிக் களிப்பு மகிழ்ச்சிக் கொண்டாட்டம். அது அவர்களின் பெற்ற வெற்றி.
பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு என்று எங்கு இராணுவத்தினர் புறப்பட்டாலும் அங்கு கிட்டண்ணை நின்றார். இரவிலும் பகலிலும் ஒவ்வொரு நாளும் சண்டை .
அந்தக் காலங்களில்தான் கிட்டண்ணை மக்களின் மனங்களில் வாழத் தொடங்கினார். அது நிரந்தரமான – அழிவற்ற – வாழ்வு; கோபித்தா லும் சண்டையிட்டாலும் சாகாத வாழ்வு.
வீதிகளின் ஓரங்களில், வயது முதிர்ந்த கிழவர்களுக்கு அருகில் விரித்து வைத்திருக்கும் வெற்றிலைச் சரையிலிருந்து பாக்குச் சீவலை எடுத்துக் கடித்தபடி, கிட்டண்ணை நாட்டு நடப்புகளைப் பேசிக் கொண்டி ருப்பார். சில மாலை நேரங்களில் இது நடக்கும். கிழவர்களுக்கோ தாராளமாக நேரமிருந்தது. கிட்டண்ணைக்கோ அப்படியல்லை. ஆனாலும் அந்த மாலை நேரங்களை அவர் விரும்பினார்.
, அந்த முதியவர்களின் நிலையோ சொல்லத் தேவையில்லை. அவர் கள் பெரிதும் மதித்த வீரன் அவர்களுக்கு முன்னால்… உண்மையில் அந்த நேரங்களில் அவர்கள் மிகவும் பெருமைப்பட்டார்கள்.
வீட்டு முற்றங்களில், பின் கோடிகளில், வெற்றுடம்பில் இழுத்து முடியப்பட்ட காற்சட்டைகளுடன் “சிறிய கிட்டுகள்” நிற்பார்கள். இடுப்பில் கிட்டண்ணையின் ‘357 மக்னம்’ சுழற்துப்பாக்கியைப் போன்று இழு பட்டபடி வளைந்த தடி ஒன்று தொங்கும்.
கள்ளன் – பொலிஸ் விளையாட்டெல்லாம் மறைந்து புலிகள் – இராணுவ விளையாட்டுத் தொடங்கியிருந்தது.
விளையாட்டிலும் ‘சின்னக் கிட்டுகள்’ ஒரு நாளும் தோற்பதில்லை. வெற்றி என்றும் வெற்றிதான். விளையாட்டில் கூடக் கிட்டு மாமா தோற்பதை அவர்கள் விரும்புவதில்லை.
இப்படித்தான் கிட்டண்ணை எல்லாரின் நெஞ்சங்களிலும் வாழ்ந்தார். அதனால் தான் அவருக்கு ஆபத்து என்ற போது மக்கள் துடித்தனர்.
அது 1987 இன் ஆரம்பம். வடமராட்சியில் இராணுவத்தினருடன் நடந்த சண்டையொன்றில் கிட்டண்ணையின் கையில் பட்டிருந்த காயம் குண மாகிச் சில நாட்கள் சென்றிருந்தன.
அப்போதுதான் தேசவிரோதிகளால் கிட்டண்ணைக்குக் குண்டு எறியப்பட்டது.
குண்டு வெடித்தது தெரியும். ஆனால், கிட்டண்ணைக்கு என்ன நடந்தது என்பது மக்களுக்குச் சரியாகத் தெரியாது. தமிழீழம் எங்கும் அதிர்ச்சி பரவியது மக்கள் சிரிப்பை மறந்து சோகத்தில் ஆழ்ந்து போனார்கள். தமிழ் நிலம் எங்கும் கவலையில் தவித்தது.
உயிருக்கு ஆபத்தில்லையாம் என்ற பொழுது ஓரளவு ஆறுதலாக இருந்தது. ஆனாலும், கவலை முற்றாகத் தீரவில்லை . ஏனெனில் கிட்டண்ணை ஒருகாலை இழந்திருந்தார்.
1987 மே நாள், மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்
“கிட்டண்ணை பேசுவதற்கு வருகிறாராம்” மக்கள் முகங்களில் மகிழ்ச்சி கிட்டண்ணையைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல்.
கிட்டண்ணை பேசினார். தரமானதொரு பேச்சாளனுக்குரிய பேச்சு. அது மக்களின் பங்களிப்புக்குரிய பாராட்டு. ஒன்றிணைந்த மக்களை வாழ்த்திய பேச்சு.
அன்று மக்களிடையே உற்சாகமும் மகிழ்ச்சியும் கண்ணீரும் கரைபுரண்டு ஓடியது.
கிட்டண்ணையின் வீரத்தைப் போலத்தான் கோபமும் பிரசித்தமானது. ஒரு தாயின் கோபத்தைப் போல இரசித்து ஏற்றுக் கொள்ளும் கோபம். மறுகணம் எங்கென்று தெரியாது மறைந்துவிடும் கோபம்.
தோழர்களுக்கு அடியும் விழும். ஆனாலும், ஒருவரும் கோபிப்பதில்லை . கிட்டண் ணையில் உயிரையே வைத்திருக்கும் தன்மையைக் குறைப்பதுமில்லை. ஏனெனில் அவரின் கோபத்தினுள் இருக்கும் கனிவான இதயத்தை அவர்கள் அறிவார்கள்.
சண்டைகளின் பொழுது யாராவது ஒரு தோழன் காயமடைய நேரிட்டால் அந்த மனிதர் துடிக்கும் துடிப்பையும், யாராவது தோழனை இழந்துவிட்டால் முகம் கறுத்துத் தவித்து அழும் அழுகையையும் அவர்கள் கண்டவர்கள். அதனால் தான் கிட்டண்ணையில் யாரும் கோபிப்பதில்லை. அவரின் கோபம் தேவையானதே. இயக்கத்தின் ஒழுங்கையும் கட்டுப் பாட்டையும் பேணுவதற்கு அவசியமானது.
கோபத்தைவிட அவரின் உள்ளே இருந்த கனிவும் திறமையும் மனிதர்களை வென்றன.
குறிப்பார்த்துச் சுடுவதில் கிட்டண்ணை வல்லவர். இலக்கு பொதுவாகத் தவறு வதில்லை . அது அவருடைய எதிரிகளுக்குக் கூடத் தெரிந்த விடயம். எங்களூர்ப் பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பெருமை. ஆபத்தான வேளைகளில் கூட பதற்றமற்று, நிதானமாகத் துப்பாக்கியைக் கையாள்வார். சண்டைகளின் போது தேவையற்ற துப்பாக்கி இயக்கத்தை அவர் ஒரு போதும் செய்ததில்லை.
இதெல்லாவற்றிற்கும் அவருடைய முதலாவது தாக்குதலே சான்றாக நிற்கின்றது.
உமையாள்புரம். நிலக்கண்ணிகளைப் பொருத்தி விட்டு இராணுவத்தினரின் வருகைக்காக அவர்கள் பத்துப்பேர் காத்திருந்தார்கள். எல்லாம் சரி. இராணுவ வண்டிகள் வருவது தெரிந்தது.
கண்ணிவெடிகளைக் கையாளும் தொழில்நுட்ப அறிவைப் பெறாத காலம். இராணுவ வண்டிகளைப் பார்த்து மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் பாய்ச்சலுக்குக் கண்ணிகள் வெடித்தன.
புலிகள் வெவ்வேறு திசைகளால் பின்வாங்கினார்கள், அல்லது தப்பி ஓடினார்கள்.
வீதிக்கு அருகாகத் தண்டவாளம் இருந்தது. அதன் இரு பக்கமும் வெட்டை.
கவச வாகனங்கள் இரண்டு; துப்பாக்கி ரவைகளை அள்ளி வீசிக் கொண்டு நெருங்கி வந்தன.
ஒரு சிலர் விழலாம் என்ற நிலை. கிட்டண்ணை . தண்டவாளத்தில் நின்று திரும்பி தனது G 3 துப்பாக்கியால் கவசவாகனத்தை நோக்கிச் சுட்டார். தவறாத குறி. கவசவாகனத்தின் சாரதி காயப்பட்டான். அவ்வாகனம் துரத்தி வந்த வேகத்திற்குச் சரிந்து புரண்டது.
அவரது முதலாவது களமும் சாதனைதான்.
அதன் பின்பு, கிட்டண்ணை கண்ட ஒவ்வொரு கணமும் அவரது வீரத்தை வெளிப்படுத்தி நின்றது பகைவர்களைக் கலங்கடித்தது.
கிட்டண்ணை சிறந்ததொரு வீரன். அதைப் போன்றுதான், கமராவைத் தூக்கினால் சிறந்ததொரு படப்பிடிப்பாளன். அது தொலைக் காட்சிக் கமராவாக இருந்தாலும் சரி….. சிறந்ததொரு இலக்கியவாதி – எழுத்தாளன் – ஓவியன்.
போராளிகள் தொடர்பாக, போர்முனையில் அவர்களின் வாழ்க்கை தொடர்பாக உள்ளத்தைத் தொட்டுவிடும் உணர்வோடு அவரின் எழுத் துக்கள் வெளிப்படும்.
போராட்ட வாழ்வின் தத்துவமும் நிதர்சன தரிசனமும் அவர் எழுத்துக் களில் பரவிவிழும். எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் உயிர் போன்ற மக்கள் மீதான நேசம் அவர் எழுத்துக்களில் பரிணமிக்கும்.
சரி, இதெல்லாம் போக கிட்டண்ணையை நாங்கள் இழந்துதான்
போனோமா? உண்மைதான். ஏற்றுக்கொள்ளமுடியாத தெளிவான உண்மை .
“நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம் தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரிச்சயமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்திக்க போது எம் இதயம் உருக்குலைந்தது, தளர்ந்து….எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிப்படுத்த முடியும்?” – மேஐர் அல்பேட்டின் இழப்பை அடுத்து அவரைப்பற்றிய நினை வுக் குறிப்பில் கிட்டண்ணை இதை எழுதினார்.
நாங்கள் கூட ஒவ்வொரு போராளியின் இழப்பின் பின்பும் அழுது முடிய இதைத்தான் சொன்னோம் கிட்டண்ணை இதை எழுதுகையில் எம்மில் சில நூறு பேரைத்தான் நாம் இழந்திருந்தோம். இன்று ஆயிரக் கணக்கான தோழர்களை நாம் இழந்துவிட்டோம். எங்கள் இதயங்கள் பல முறை வெந்து தணிந்து விட்டன. ஆனாலும் இன்றுகூட எம்மால் இழப்பு களைத் தாங்க முடிவதில்லையே! அதிலும் கிட்டண்ணையை…!
| “கிட்டண்ணையும் அவர் தோழர்களும் வந்த கப்பலை இந்தியர்கள் வழிமறித்துவிட்டார்களாம்”- நெஞ்சில் அடித்தது போன்ற செய்தி. “இந்தியர்கள் விடமாட்டார்கள். அதுவும் கிட்டண்ணயை நிச்சயமாக விட மாட்டார்கள்”. ‘அணு அணுவாகத் திலீபன் சாகும்வரை பார்த்துக்கொண்டிருந்த இந்தியா; தமிழர்கள் துடிக்கையிலும் புலேந்தி அம்மானையும் குமரப்பா வையும் சாகடித்த இந்தியா! தன் மரணவலைக்குள் சிக்கிவிட்ட கிட் டண்ணையை நிச்சயமாக விடாது தெரிந்த செய்திதான். ஒவ்வொருவரின் மனமும் சொன்ன செய்தி.
அவர்களுக்குத் தேவையெல்லாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் எதுவும் அமுக்கப்படவேண்டும், அழிக்கப்படவேண்டும். அதற்காக அவர்கள் என்னவும் செய்வார்கள்.
சர்வதேசச் சட்டங்களும் நடைமுறைகளும் இந்திய அரசிற்குத் தேவை யற்றன. அதை மாற்றவும் திரிக்கவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நேர்மையும் மனச்சான்றும் அந்தத் தேசத்தின் ஆளும் வர்க்கத்திற்கு இயல்பாகவே இல்லை.
சரணடைவதா! அது புலிகளின் மரபு இல்லை . அதுவும் கிட்டண்ணை ! தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதி – தமிழர்களின் மானச்சின்னம் – அவர்களின் மாபெரும் தளபதிகளில் ஒருவன் : தலைகுனிவது… சித்திரவதைப்பட்டு, அவமானப்பட்டு சாவது…
| “கிட்டண்ணை காப்பாற்றப்பட வேண்டும்”. தேசத்தின் இதயம் துடித்தது.. தமிழீழக்கரையெங்கும் ஆயிரமாயிரம் தோழர்கள் நின்று தவித்தார்கள்.
“எமது சிறிய படகு அலைகளால் தூக்கி மேலே மேலே வீசப்படவேகம் தடைப்படுகிறது. ஆனால், பாரிய நேவிப்படகுகள் கடல் அலைகளை வெட்டிக் கிழித்துக்கொண்டு பாய்ந்து வருகின்றன.
“அவற்றிலிருந்து சிவப்பு நிறமாகச் சீறிக்கொண்டு குண்டுகள் வரத்தொடங்கின.
“ஓட்டம், ஓட்டம், ஜீவ மரண ஓட்டம்.
“நேவிப்படகிலிருந்து பாய்ந்து வந்த ‘றேசர் ரவுண்ஸ்’ ஒன்று எமது படகின் எரிபொருள் தாங்கியைத் துளைக்க….படகு தீப்பற்றி, பின்பு வெடித்துச் சிதறுகிறது.
பருத்துத்துறையிலே இன்பருட்டிக்கு நேரே எம்படகு துரத்தப்படுவதை அறிந்து, எம் வீரர்கள் படகு தப்பி வரும் என்று பார்த்துக் கொண்டிருக்க, எம்படகு எம் கண் முன்பே வெடித்துத் தீப்பற்றி எரிவதைக் கண்டோம்.
“ஆனால், செல்லமுடியாது. ஏன்! அது தரையில்லை ; கடல்”
பல வருடங்களுக்கு முன்பு சிறீலங்கா கடற்படையால் எமது தோழர்கள் வந்த படகு மூழ்கடிக்கப்பட்டபொழுது, ‘திரை கடல் ஓடினோம்- திரவியம் தேடி அல்ல’ என்ற தலைப்பில், கிட்டண்ணை இப்படித்தான் எழுதினார். ஆனால் இன்று… நீண்ட தொலைவில், இந்திய வல்லாதிக்கப்பிடிக்குள் கிட் டண்ணை … நாங்கள் செல்லமுடியாது. ஏன்?
கடலில், புலிகளின் கப்பலைச் சுற்றி இந்தியப் போர்க் கப்பல்கள். சரணடைய வேண்டும் அல்லது அந்தப் பாரிய போர்க் கப்பல்கள், சமாதான நோக்கத்தோடு ஆயுதங்களற்று வந்த புலிகளின் கப்பலை மூழ்கடிக்கும். பின்பு, தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்து தமது போர்க் கப்பலைத் தாக்க வந்த புலிகளின் கப்பலை மூழ்கடித்ததாகக் கதையினை உருவாக்கும்.
இந்திய அதிகாரிகளும் செய்தி நிறுவனங்களும் பொய் சொல்வதில் வல்லவர்கள். புலிகளின் மீது இலகுவாகப் பழி சுமத்தப்படும்.
“சரணடையப் போவதில்லை ‘ சாவு நிச்சயமாகிப்போனது. ஆனால், அந்தச் சாவு எதிரிகள் தலைகுனியும் சாவாக இருக்க வேண்டும். சரித்திரம் படைக்க வேண்டும். தாய் நிலத்தைத் தலைநிமிரச் செய்ய வேண்டும்.
சண்டைக்களங்களில் எல்லாம் கிட்டண்ணையைக் காப்பாற்ற நூற்றுக் கணக்கான தோழர்கள் நின்றார்கள். ஆனால், இன்று…
குட்டி சிறி அருகில் நின்றான். அவன் சின்ன வயதில் இயக்கத்தினுள் வந்தவன். அதனால்தான் அவனுக்கு அந்தப் பெயர். அவன் பெரிய ஆளாக வளர்ந்த பின்பும் அந்தப் பெயர் மாறவே இல்லை.
அவன் அழுதிருப்பான், தனக்காக அல்ல, கிட்டண்ணைக்காக. அவரில் அவன் உயிரையே வைத்திருந்தான். தன் சாவுக்காக அந்த உறுதி மிக்க வன் ஒரு போதும் கலங்கியவனில்லை .
இப்போது கலங்கி இருப்பான். மற்றத் தோழர்களும் கிட்டண்ணையைக் காப்பாற்ற முடியாமல் போகிறதே எனத் தவித்திருப்பார்கள். ஆனால் பிரச்சினை எல்லோரின் கைகளுக்கும் மேலே சென்றிருந்தது.
இந்திய வல்லாதிக்கப்பேய்கள் இறங்கி வரப்போவதில்லை.
எங்கள் தொலைத் தொடர்புக் கருவி கப்பலிலிருந்து வரும் செய்திக்காகக் காத்திருந்தது. தேசம் துடித்தது. தலைவர் தவித்துக் கொண்டிருந்தார். அவர் வளர்த்தெடுத்த தளபதி – கடினமான காலங்கள் எல்லாம் தோளோடு தோள் கொடுத்து ழைத்த தோழன்
சாவின் விளிம்பில்….
முடிவு உறுதியாகியது. ஒரு கணத்தில் கப்பல் சிதறும்; காணாமற் போகும்.
கப்பற் சிப்பந்திகள் வெளியேறினார்கள்.
தேசம், அம்மா, அண்ணன், அன்பான மனைவி, தன்னில் உயிரை வைத்திருக்கும் தலைவன் எல்லோருமே கிட்டண்ணையின் நெஞ்சில் ஒரு கணம் வந்து விட்டுச் சென்றிருக்கலாம், ஆனால் வெளித் தெரியாது.
விடைபெற்றிருப்பார்கள் – தேசத்திடமிருந்து, தோழர்களிடமிருந்து, தலைவனிடமிருந்து…
கடற்கரைக் கிராமத்து வீடொன்றில் கப்பலுடன் தொடர்பில் இருந்து தொலைத்தொடர்புக்கருவி நீண்ட நேரம் காத்திருந்தது. ஏதாவது செய்தி வராதா…வருகிறதா…
‘கிட்டண்ணையை இழந்து விட்டோம்’.
கடல் ஆர்ப்பரித்தது. அலைகள் எழுந்து இதயத்தில் அடித்தன. தேசத்தின் நெஞ்சு துடித்தது; தவித்தது; கதறி அழுதது; ஒரு கணம் தயங்கி நின்றது.
தாங்க முடியாத இழப்பு.
எங்கள் போராட்டப்படகு இப்படித்தான். தாங்க முடியாத இழப்புக்கள் வரும்போது ஒரு கணம் தயங்கி நிற்கும். பின் ‘தலைவன் இருக்கிறான்’ எனத் தொடர்ந்து செல்லும்.
அது கிட்டண்ணை சொல்லித் தந்த பாடம்.
மூலம்: விடுதலைப்புலிகள் (குரல் – 36)
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
யாழ். குடாநாட்டினையும் அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்துச் செல்லும் பிரதான தரைவழி மார்க்கம் ஆனையிறவு ஆகும். 1990ஆம் ஆண்டு ஏப்பிரலுக்கு முன்னர் யாழ். குடாநாட்டிலிலுள்ள எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் போக்குவரத்து, விநியோகப் பாதையாக ஆனையிறவு ஊடான தரை வழிப்பாதையே இருந்தது. 1990ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பமான போரின் விளைவால் தரைவழிப் பாதை மூடப்பட்டது.
இதன் பின்னர் யாழ் மக்களின் போக்குவரத்து நகர்வுகள், உணவு விநியோக மார்க்கங்கள் என்பன ஆனையிறவுக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள பூநகரி, கேரதீவு, சங்குப்பிட்டியினூடாக அமைந்தது.
இப்போக்குவரத்து மார்க்கம் கடல் நீரேரியூடாக இருந்தது. மக்கள் பெருஞ்சிரமங்களிற்கு மத்தியில் கேரதீவு, சங்குப்பிட்டியினூடான கடல்நீரேரியைக் கடப்பதற்கு “பயணப் படகு” (Ferry) ஒன்றைப் பயன்படுத்தினார்கள். இதன்மூலம் விநியோகப் பொருட்களைக் கொண்ட பாரவூர்திகள் பலமான வாகனங்கள் என்பன நகர்த்தப்பட்டன. மக்கள் பயணஞ்செய்த இப்பாதையும் 1991ஆம் ஆண்டில் பூநகரியை இராணுவத்தினர் கைப்பற்றியதனால் தடைப்பட்டது.
பின்னர் யாழ் குடாநாட்டு மக்களின் போக்குவரத்துப் பாதையாக வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஊடான கடற்கரையோரப் பாதை இருந்தது. இதுவும் 1991ஆம் ஆண்டு “ஒப்பறேசன் பலவேகயா 01” இராணுவ நடவடிக்கையின் மூலம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு மக்களின் போக்குவரத்தும் தடைப்பட்டது. போக்குவரத்து மார்க்கம் இன்றித்தவித்த இராணுவ வேலிகளாக அமைத்ததனால் மக்கள் பயணஞ்செய்த இக்கொம்படிப் பாதையும் தடைப்பட்டது.
குடாநாட்டு மக்கள் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஊடான கடற்கரையோரப் பாதைக்கும், ஆனையிறவுக்குமிடையில் அமைந்த கொம்படிப் பாதையினைப் பயன்படுத்தினர். இப்பாதை பிரயாணத்திற்கு ஒவ்வாத பாதையாக காணப்பட்டது. அப்படியிருந்தும் இதனூடாக மக்கள் பயணித்தார்கள். இயற்கையால் பிரயாணத்திற்கு ஒவ்வாத பாதையாக விளங்கிய கொம்படிப் பாதையினூடு கடுந்துன்பங்களுக்கு மத்தியில் மக்கள் பயணித்தார்கள். “பலவேகய 02” இராணுவ நடவடிக்கை மூலம் இராணுவ ம் ஆனையிறவு, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு போன்றவற்றில் இராணுவத் தளங்களை தொரடாக தொடர்ந்தன.
இதன் பின்னர் யாழ். குடாநாட்டிற்கும் ஏனைய இடங்களுக்குமான வெளித்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கான உணவு, மருந்து உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துச் செல்வதற்கான பாதை இல்லாது தவிதத் ஆயிரக்கணக்கான மக்கள், 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிளாலிக்கடல் நீரேரியினூடான கடற் போக்குவரத்தினை மேற்கொண்டார்கள்.
யாழ். குடாநாட்டையும், அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்து ஏறத்தாழ முப்பது மைல் உள்நுழைந்து, பொன்னாலைதொட்டு தலைமன்னார் வரை நீண்டு, பரந்த கடலால் நீரூட்டப்பட்டு இருந்தது யாழ்ப்பாணக் கடல் நீரேரி. கிளாலிக் கரையிலிருந்து மறுகரை செல்லும் ஆலங்கேணிவரை ஏறக்குறைய இருபது கடல்மைல் தூரங்கொண்ட இக்கடற்பிரதேசம் பயணங்களிற்கு, விநியோக மார்க்கங்களிற்கு ஒவ்வாததாக, அமைந்தாலும் பெருஞ்சிரமங்களின் மத்தியில் ஏறக்குறைய நான்கு மணித்தியாலம் பயணித்தே மறுகரையை அடைய முடியும். பகல் நேரங்களிற் பயணிக்க முடியாத நிலையிருந்து இரவு நேரங்களிலேயே பயணிக்கக்கூடியதாக எட்டு குதிரை வலுகொண்ட இயந்திரப் படகுகள் மூலம் தமது பிரயாணங்களை மக்கள் மேற்கொண்டனர்.
1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்போக்குவரத்து மார்க்கத்தை தடைசெய்யும் நோக்கில் தாக்குதல்களை கடல் நீரேரியின் இருபக்கமும் அமைத்திருந்த ஆனையிறவு இராணுவத்தளம் மற்றும் பூநகரி இராணுவத்தளம் ஆகியவற்றிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. மேலும் வான்படையும் இத் தடைநோக்கிற்கு உதவியது.
1993ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி கிளாலியிலிருந்து ஆலங்கேணிக்குச் சென்றுகொண்டிருந்த இயந்திரப் படகுகளில் இயந்திரப் பழுது காரணமாக நடுக்கடலில் நின்ற நான்கு படகுகளிலிருந்த பயணிகள் மீது மிக அண்மித்து வந்த கடற்படையினர் கூரிய ஆயுதங்களாலும், துப்பாகிகளாலும் தாக்கியதால் படகிற் பயணித்த அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உட்பட முப்பத்தைந்து பேர் வெட்டப்பட்டும், சுடப்பட்டும் உயிரிழந்தார்கள். ஐம்பது பேர் வரையானவர்கள் காயங்களுடன் மறுநாள் காலை கரையினை அடைந்தார்கள்.
இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்களில் ஒருவரான கந்தையா செல்லத்துரை (வயது 68) என்பவர் மறுநாள் கிளாலிக்கடலில் ஏற்பட்ட சம்பவங்கள் பற்றி ஊடகங்களுக்கு மறுநாள் அளித்த பேட்டியில் விரிவாக சம்பவத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
1993ஆம் ஆண்டு ஜனவரி இரண்டு, யூலை இருபத்தொண்பது எனப் பல்வேறுபட்ட காலப் பகுதியிலுமாக 1993ஆம் ஆண்டு டிசம்பர் வரைக்கும் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிளாலிக் கடற்பரப்பில் பயணித்தபோது, கடற்படையினரின் தாக்குதல்களினால் உயிரிழந்துள்ளதுடன் நூறிற்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனமானார்கள். மேலும் நூற்றிஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இச்சம்பவங்களில் கிளிநொச்சி மாவட்ட கல்வி அதிகாரி உட்பட யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், ஆசிரியர்கள், வெளிநாட்டிலிருந்து தமது உறவுகளைப் பார்வையிட வந்தவர்கள் எனப் பலதரப்பட்ட பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள்.
02.01.1993 – 29.07.1993 வரை கிளாலிப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
01. இ.இன்பராசா (வயது 47 – இ.மி.ச.ஊழியர்)
02. இ.ஜெராட் (வயது 26 – கடற்றொழில்)
03. இளையதம்பி மகேஸ்வரி (வயது 51 – வீட்டுப்பணி)
04. இளையதம்பி சிவசீலன் (வயது 25 – பல்கலை மாணவன்)
05. இரத்தினம் சிறீறஞ்சன் (வயது 29)
06. இரத்தினசிங்கம் எருமின் ஜசேக்இன்பராசா (வயது 47 – இ.மி.ச.ஊழியர்)
07. ந.இராசன் (வயது 28 – கமம்)
08. ந.கிளி (வயது 26 – கமம்)
09. ந.இராசலிங்கம் (வயது 32 – வியாபாரம்)
10. ந.நாகம்மா (வயது 60)
11. ந.துரை (வயது 36 – கமம்)
12. நா.பரிமளம் (வயது 37)
13. க.கமலதாசன் (வயது 17 – கடற்றொழில்)
14. க.செல்லத்துரை (வயது 46)
15. க.சிவானந்தன் (வயது 35 – வியாபாரம்)
16. க.ஏகாம்பரம் (வயது 45 – கமம்)
17. குப்புசாமி செல்லமுத்து (வயது 45)
18. கா.சின்னத்தம்பி (வயது 60 – கமம்)
19. கதிரமலை ஜெயந்தி (வயது 25 – மாணவி)
20. த.கமலராசன் (வயது 10 – மாணவன்)
21. த.பூபதி (வயது 28 – வீட்டுப்பணி)
22. த.றாகினி (வயது 17 – மாணவி)
23. தர்மராஜா பகீரதன்
24. தம்பிஐயா ராகினி (வயது 18)
25. தற்பரநாதன் முகுந்தன் (வயது 20 – மாணவன்)
26. ம.இராசையா (வயது 23 – கடற்றொழில்)
27. ம.யோசப்யூட் (வயது 18 – கடற்றொழில்)
28. முத்தையா சந்திரலீலா (வயது 35)
29. மதுரநாயகம் அமிர்தநாயகி (வயது 39)
30. மி.ஜேசுதாசன் (வயது 19 – மாணவன்)
31. மிக்கேல் ஜேசுதாசன் (வயது 19 – மாணவன்)
32. முருகேசு சடராசா (வயது 40 – கடற்றொழில்)
33. அ.அடைக்கலம் (வயது 63 – சாரதி)
34. அப்புக்குட்டி பரமசிங்கம் (வயது 38 – சாரதி)
35. யோசெப்யேசுராஜா யேசுநாயகம்தனிதாஸ் (வயது 18 – கடற்றொழில்)
36. தெ.கனகாம்பாள் (வயது 42 – வீட்டுப்பணி)
37. செ.ரூபன் ஞானசீலன் (வயது 19 – கடற்றொழில்)
38. செ.பாக்கியராசா (வயது 30 – கடற்றொழில்)
39. செ.அருளதாஸ் (வயது 21 – கடற்றொழில்)
40. செல்வராசா பாக்கியராசா (வயது 27)
41. செல்லத்துரை சாந்தலிங்கம் (வயது 50 – கடற்றொழில்)
42. ஞானசூரியர் வின்சன் நிக்கிளஸ் (வயது 22)
43. ஞானப்பிரகாசம் ஞானபாலன் (வயது 32 – படகோட்டி)
44. ஞானபாலன் (வயது 33 – படகோட்டி)
45. ச.பாலசுப்பிரமணியம் (வயது 54 – சுயதொழில்)
46. சந்திரன் அருணானந்தி (வயது 29 – கூலி)
47. சி.கனகலிங்கம் (வயது 45 – கடற்றொழில்)
48. சின்னவன் கதிரவேலு (வயது 44)
49. சிவலிங்கம் அன்னபூரணம் (வயது 40)
50. சிவலிங்கம் செல்லத்துரை (வயது 45 – நீதிமன்ற ஊழியர்)
51. சண்முகம் சபாநாதன் (வயது 65)
52. ரவீந்திரன் இந்திராவதனா (வயது 41)
53. ஏரம்பமூர்த்தி அசோகன் (வயது 36)
காயமடைந்தவர்களின் விபரம்:
01. க.கணேந்திரநாதன் (வயது 63 – முகாமையாளர்)
02. கந்தையா செல்லத்துரை (வயது 68)
03. கந்தசாமி மதியரசன் (வயது 20 – வியாபாரம்)
04. தவராசா தயாளினி (வயது 05 – மாணவி)
05. செல்வராசா குணசிங்கம் (வயது 40)
06. செல்வரத்தினம் ஐங்கரன் (வயது 27)
07. சின்னையா சந்திரகுமார் (வயது 20)
08. வி.இன்பநாதன் (வயது 37 – கடற்றொழில்)
09. விநாயகமூர்த்தி இன்பநாதன் (வயது 26)
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
– தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

மேஜர் அபயன்
கிருஸ்ணமூர்த்தி சிவகுமார்
தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 01.01.1961
வீரச்சாவு: 01.12.1992
01.12.1992 அன்று மகிழவெட்டுவான் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவு.
1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலத்தில், இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான். அதுதான் யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் பயணம் என்று உணர்ந்திருந்தானோ என்னவோ? உறவினர்கள், நண்பர்கள் என்று ஒருவரது வீட்டினையும் தவறவிடவில்லை இவன். அப்போது, பொதுவாக எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும் எதிர் பார்ப்பே இருந்தது, இவனது அன்னைக்கும். எனக்கு கொள்ளி வைக்கிற கடமை இருக்கடா உனக்கு” என்றார். இவன் அமைதியாகச் சிரித்தான். “ஏன் வேறை ஆரும் கொள்ளி வைச்சா இந்தக் கட்டை எரியாதோ”? பயணமாகிவிட்டான் மட்டக்களப்புக்கு. ஏனெனில் இந்தியப் படையுடன் போர்தொடங்கிவிட்டது. இனி யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்க முடியாது. மட்டக்களப்பு இவனை எதிர்பார்க்கிறது. அங்கு இவன் சென்ற நாளிலிருந்து, வீரச்சாவெய்திய நாளிற்கு இடைப்பட்ட இந்தக் காலத்தில், அவனிடமிருந்து வீட்டிற்கு வரும் கடிதங்களெல்லாம் “நான் சுகம். வீட்டிற்கு வரும் போராளிகளை நன்கு கவனிக்கவும்” என்றே இருக்கும்.
இந்தியப் படையினருடனான போர் நிகழ்ந்த காலத்தில் அபயனின் போராட்டப் பங்களிப்பை, மட்டக்களப்புப் போராளிகள் என்றுமே மறக்கமாட்டார்கள். எத்தனையோமுற்றுகைகள் ஆனாலும் இவன் உறுதியாக இருந்தான்.தொடர்ச்சியான முற்றுகைகள் போராளிகளைத் தளர்ச்சிகொள்ளச் செய்யும். அப்போதெல்லாம் இவன் அவர்களை உற்சாகப்படுத்துவான்.
“ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே வரும் காலமெல்லாம்
நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே”
இக் காலகட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் மகா ஓயாப் பகுதியில் பயிற்சி முகாம் ஒன்றையும் அமைத்திருந்தான் இவன். அங்கு போராளிகளுக்கு அடிப் படைப் பயிற்சியினை மட்டுமே வழங்க முடிந்தது. துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிக்குப் போதிய ரவைகள் இருக்கவில்லை. பயிற்சியின் அடுத்த கட்டம், ஒரு முகாமைத் தாக்குவது எப்படியென்பது பற்றிய செயல்முறை விளக்கம் -அது அடுத்தநாள் நடைபெறவிருந்தது. ஆனால், அன்று அதிகாலையில் இந்திய படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர்.
புதிய போராளிகள் அனுபவ மில்லாதவர்கள் எனினும், தான் கற்பித்த மாதிரியே அவர்களை நடக்கப் பண்ணினான். அங்கு நின்ற தோழன் ஒருவனிடம், அவர்களைக் கூட்டிக்கொண்டு ஆற்றின் வழியாக இறங்கித் தப் புமாறு கூறிவிட்டு, வேந்தன் என்ற போராளியுடன் இணைந்து இந்தியப் படையினரின் முன்னேற்றககைக் கடுத்துக் கொண்டிருந்தான். அபயன் சுட்டுக் கொண்டிருக்கும்போது வேந்தன் பின்வாங்குதல்; பின்பு, வேந்தன் சுட்டுக்கொண்டிருக்கஅபயன் பின்வாங்குதல் சுமார் 15 நிமிட நேரம் இச்சண்டை நீடித்தது. இதற்கிடையில், ஏனையவர்கள் தப்பிவிட்டனர். சண்டையின் இறுதியில், இறந்த தமது சகாக்களினது சடலங்களை மட்டும் தூக்கியவாறு இந்தியப்படை சென்றது.
அதன்பின் இவனது போராட்ட வாழ்வு தம்பிலுவில் திருக்கோயில் பகுதியில் தொடர்ந்தது. ஒரு மருத்துவனாக ஒரு தாதியாக ஒரு போர் வீரனாக குழுத் தலைவனாக இவனது வாழ்வு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் றொபேட் என்ற போராளிக்கு கையில் கண்ணிவெடி வெடித்து விட்டது. அப்போது. மயக்க ஊசியும் இல்லை; தேவையான மருத்துவ கருவிகளும் இருக்க வில்லை. தொடர்ச்சியான முற்றுகைகளில் பலவற்றை இழந்தாயிற்று. எனவே றொபேட்டிடம், “தம்பி! நோகுந்தான்; என்ன செய்யிறது? சமாளி” என்று கூறிவிட்டு, கம்பி வெட்டும் கருவியினாலேயே சிதறிய விரல்களை வெட்டியெடுத்தான். அந்தக் காலத்தில் மருத்துவம் தான் எத்தனையோ போராளிகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது.இவனது
இக்காலத்தில்,அன்ரனி தலைமையில்,வளத்தாப்பிட்டியில் மூன்று ‘ஜீப்’ புகளில் வந்த இந்தியப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில், இவன் பங்குகொண்டான். இந்தியப் படையரனி, ஏதாவது படை அம்பாறையை விட்டு வெளியேறியதும், திருக்கோயிலில் தேசவிரோதிகளின் முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்றினான். அப்போது அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய அன்ரனி “எனக்கு நடந்தா, அபயன் சொல்லுற மாதிரி நடவுங்கோ” என்று போராளிகளுக்கு அறிவுறுத்தினான். அத்தாக்குதல் மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இந்தியப் படையினரின் திட்டங்கள் தோல்வியைத் தழுவின.
மேலும் பல தாக்குதல்கள் அதிலும் நரிப்புல் தோட்டம் வழியாக வந்த தேசவிரோதிகளை, மிக குறைந்த எண்ணிக் போராளிகளுடன் கையான
நின்று வெற்றிகொண்ட தாக்குதல் குறிப்பிடத்தக்கது.
சிறீலங்கா அரசுடனான இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் இவன் களுவாஞ்சிக்குடி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்தான். இந்தக் காவல் நிலையத்தினைக் கைப் பற்றியதும் ஏனைய போராளிகளிடம் கூறினான்; 1984 ஆம் ஆண்டு இந்தப் பொலீஸ் ஸ்ரேசனை அடிக்க வந்துதான் பரம தேவாவையும் ரவியையும் இழந்தம். இண்டைக்கு இதைக் கைப் பற்றிக் காட்டியிருக்கிறம்”.
தொடர்ந்து பல தாக்குதல்கள் பல பொறுப்புக்கள். இப்போதெல்லாம் சிறீலங்காப் படையினர் தேடும் முக்கிய புள்ளிகளில் இவனும் ஒருவனாகி விட்டான். மட்டக்களப்பில் தேடப்படும் 12 பேரில் இவனது பெயரையும் சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது.
அப்போதெல்லாம் அங்குள்ள போராளிகள் இவனது குடும்பத்தைப் பற்றி விசாரிப்பார்கள். “எனக்கு வீடும் இல்லை; சொந்தமும் இல்லை. எல்லாமே நீங் கள் தான்ரா” என்பான். முகாமில், போராளிகளுக்குத் தேவையான எல்லா உணவு வகைகளையும் தேடிக் கொடுப்பான். தான் மட்டும் மரக்கறி வகைகளையே உண்பான். கேட்டால், “எனக்கு அதில விருப்பமில்லை” என்பான். ஆனால், அவன் வீரச்சாவெய்தியதும்தான் அவன் ஒரு பார்ப்பன (பிராமணன்) பையன் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களுக்குக் கூட இவன் இதைப் பற்றிக் கூறவில்லை. அன்று விளாவெட்டுவானில் சிறீலங்காப் படையினர் தாக்கிய போது, இவனை நாம் இழந்தோம். ஆயினும், அங்குள்ள போராளிகளுக்கு இவன் பாடும் பாடல்கள் நினைவில் உள்ளன. “வரும் காலமெல்லாம் நம்
நாம் பரம்பரைகள் அடிமையில்லை என்று முழங்கட்டுமே!”
-விடுதலைப் புலிகள் குரல்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வினாசித்தம்பி சுந்தரலிங்கம்
கள்ளியடி, இலுப்பைக்கடவை, மன்னார்
21.07.1965 – 25.09.1992
25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் சிறிலங்கா படைமினி முகாம்கள் மற்றும் 62 தொடர் காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி
துயிலும் நிலை: வித்துடல்
“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும்.
எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு கதைக்கும்.
வெளியிலை வேலை செய்யேக்கை சரியாச் செய்வம்; இல்லாட்டி சனம் சுபநிட்ட சொல்லிடும்.
நாங்கள் ஏதும் சொல்லால் உங்களோட என்ன பேச்சு. நாங்க தளபதிக்கிட்ட சொல்லிக்கிறோம் என்று சனம் சொல்லும்.
சுபன் செத்ததை அவங்களாலை தாங்கிக்க முடியலை.
மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் சுபன் காட்டிய கரிசனையையும், அவனுக்கும் மக்களுக்கும் இருந்த நெருக்கத்தையும் பரஞ்சோதி சொல்லிக் கொண்டிருந்தான்.
“குடுபங்கள் பிரிஞ்ச சிக்கல் எண்டால் சுபன் நேரடியாகவே தலையிடும். எவ்வளவு குடும்பங்களை சேர்த்து வைத்திருக்கும்.”
மன்னாரில் கள்ளியடியில் பிறந்த சுபனின் குடும்பம் பெரியது. ‘அண்ணே…… என்னை வளர்க்க எனது அப்பர் 100 மாடு வளர்த்தாராம்’ என்று சுபன் சொல்லிச் சிரிக்கும்.
மழைக்கு இருண்ட வானத்தில் மின்னல் வந்து சிறிது நேரம் தரும் வெளிச்சத்தில் இருட்டே தெரியாதது போல, சுபன் சிரிக்கும்போது அவனது பல்லின் வெண்மையில் அவன் கறுப்பு முகம் மறைந்து போகும். மாட்டில் பால் கறக்கும்போது ‘சர்’, ‘சர்’ என சீராக வரும் ஒளிபோலவே சுபன் கதையும் சீராக, மெல்லிய இசை நயத்துடன் ஒலிக்கும்.
“அப்பர் சொந்தமா மாடு வளர்த்தவரோ, இல்லை ஊரிலை இருக்கும் மாடுகளைப் பிடித்து வந்து அடைத்து வளர்த்தவரோ” என நாம் சுபனைக் கிண்டல் செய்வதுண்டு.
“இந்தியாவிலே பயிற்சி முகாமிலே, சுபனை மாட்டுக்குள்ளதான் காணலாம். சுகயீனமான பயிற்சிப் போராளிகளை பராமரிக்கப் பால் தேவைப்பட்டது. அதை சுபன் செய்தது.”
தமிழ்நாட்டில் ஒரு மலைப்பகுதியில் இந்த பயிற்சி முகாம் இருந்தது. அடிக்கடி கிழே வந்து பால் எடுத்துச் செல்லமுடியாது.
மன்னாரின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையை சுபன் காட்டினான்.
விதைக்காத நெல்வயல்களை விதைக்க முயற்சி செய்தான்.
மக்கள் குறை தீர்க்க அடிப்படை வசதிகளை அங்கே அமைக்க முயன்றான்.
‘உயிலங்குளத்திற்கும் அடம்பனுக்கும் இடையில்தான் மன்னார் நகரம் அமைய வேண்டும்’ என சுபன் அடிக்கடி கூறும். ‘தமிழீழத்தில் அப்படித்தான் இருக்கும்’ என சொல்லிக் கொள்ளும்.
மன்னார் மாவட்ட போராளிகளின் குடும்பங்களின் துன்பங்கள் துயரங்கள் அவனை மிகவும் வாட்டும்.
மன்னாரில் வீரச்சாவைச் சந்தித்த எல்லாப் போராளிகளின் நிழற்படங்களுடன் கூடிய ஒரு வீடு. முதன் முதலில் தமிழீழத்தில் மன்னாரில் தான் அமைக்கப்பட்டது.
“மாவீரர் துயிலும் இல்லத்தை மிகவும் சிறப்பாக அமைக்க சுபன் கவனம் எடுத்திச்சு. அடிக்கடி சென்று பார்க்கும். கடைசியாகவும் பல வேலைகளைச் செய்யச் சொல்லிச்சு. ஆனால் பார்க்கத்தான் ஆள் இல்லாமல் போச்சு.”
பரஞ்சோதியின் நா தளதளத்தது.
“எதையும் ஆழமாகச் சிறப்பாகச் செய்யணும் எனச் சொல்லும்; செய்தும் காட்டும்.”
“தோரணம் கட்டிக்கொண்டு நின்றேன். சுபன் வந்ததைப் பார்த்தேன். ஏதோ பிழை பிடிக்கும். பின் தானே நின்று கட்டிக்காட்டும். நான் ஒழிச்சிடுவேன். ஆள் வந்திச்சு. பார்த்து விட்டு தோரணங்களை அவிட்டுக் கட்டிச்சு. பரஞ்சோதி எங்கே என்று கேட்டுது போனேன்.”
“தோரணம் கட்டினது சரியா” என்று கேட்டது. “சரிதான்” என்றேன்.
“ஒன்றிலை நாலு முசிச்சு கட்டி இருக்கிறீங்க, இன்னுமொன்றிலே மூன்று முடிச்சு போட்டிருக்கிறீங்க. எல்லாம் ஒரு சீராக இருந்த நல்லதுதானே” என்று சொல்லிச்சு.
“இப்படித்தான் எந்த விடயமென்றாலும், அது சின்ன விடயமென்றாலும் சரியாகச் செய்ய வேண்டும். எனச் சொல்லும்.”
“பிழை யாரும் விட்டா கண்டிக்கும். பிழைகளை தெளிவாக விளங்கப்படுத்து.”
“கண்டிச்சுப்போட்டு நல்லா அரவணைக்கும்.”
“கண்டிப்பும், அரவணைப்பும் அதை எப்போதும் குறிப்பிட மறந்திடாதீங்க” என்றான் பரஞ்சோதி.
“பண்டிக் கருக்கள் என்றால் சுபனுக்கு விருப்பம். தொதொல், மசுகெட் இருவும் விருப்பம்.”
“ஆள் நல்லா சமைக்கு. ஓய்வா இருந்தா சமைக்கும்; சமைச்சு எல்லோருக்கும் சாப்பிட கொடுக்கும்.”
ஒரு நாள் ஒரு ஐயாவை கூட்டி வந்தாங்க. அவர் சமையலிலே பெரிய ஆள் அதைச் செய்வார் இதைச் செய்வார் எண்டாங்க.
சுபன் விதவிதமாக ‘அது செய்வீங்களா இது செய்வீங்களா எனக் கேட்டுது. அவருக்கு ஒன்றுமே செய்யத் தெரிந்திருக்கலை. சுபன் தான் அவருக்கு செஞ்சுகாட்டும்.
அந்த ஐயாவும் சமையலும்………… அது பெரிய பகிடி
மழை பெஞ்சா இரவிலே நித்திரை இல்லை என்று தெரிஞ்சுக்கணும். சுபன் வேட்டைக்குப் போகும். நாங்க துவக்கி தூக்கினா மானுக்கோ, முயலுக்கோ தாங்க தப்பிக்கலாம் எனத் தெரியும்.
சுபன், ‘நீ போய் எடுத்து வா’ என்று சொல்லிவிட்டு சுடும். குறி தப்பாது.
குறி தவறாமல் சுடுவதில் மட்டுமில்லை, ஆயுதங்களில் சுபன் மிக கவனம். எத்தனையோ போராளிகளின் குருதிசிந்தி பெற்ற ஆயுதம்’ என்று அடிகடி சொல்லி, ஆயுதங்களை மிக கவனமாகக் கவனிக்கும்.
ஆயுதம் பேணுதல் எப்படி இருக்க வேணும் என்று நான் விளக்கத் தேவையில்லை. அது உங்களுக்குத் தெரியும் என்று சொல்லிவிட்டு பரஞ்சோதி.
கண்டிப்பும், அரவணைப்பும் அது முக்கியம் அதை மறந்திடாதேங்கோ என்றான்.
மடு ஏதிலிகள் தங்ககத்தை ஒழுங்குபடுத்த சுபன் கடுமையாக உழைத்தான்.
இப்படியான ஒரு சிக்கலை மன்னார் சந்தித்தது. இது தான் முதல் தடவை.
இருக்கும் குறைந்த வசதிகளுடன் தன்னால் இயலக் கூடியதை அவன் செய்தான்.
இந்தியாவில் பயிற்சி முடித்து திரும்பிய சுபன், லெப்.கேணல் விக்டரோடு நின்று மன்னாரில் செயற்பட்டான். 1986 இன் நடுப்பகுதியில் மன்னாரில் நடந்த ஒரு சண்டையில் காயமடைந்து, சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற சுபன். அதன் பின் தலைவரோடு மூன்று ஆண்டுகள் நின்றான்.
02.04.1987 காங்கேசன்துறை தங்ககத்தில் சிறிலங்கா படைகளுடனான மோதலில் காயமடைந்தான்.
தலைவர் பிரபாகரனைத் தேடி, மணலாற்றுக் காட்டில் இந்தியப் படையினர் ‘செக்மேற்’ 1, 11, 111 என்ற இராணுவ நடவடிக்கைகளைச் செய்தபோது, அந்தச் சண்டைகளில் நின்றான்.
15.04.1989 அன்று வெளி ஓயாவில் சிங்களப்படையை மறைந்து தாக்கிய நிகழ்ச்சியில் முதன்மைப் பங்கு வகித்தான்.
1989 நடுப்பகுதியில் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றான்.
சுபன் பொறுப்பேற்று சிறிது காலத்தில், மேஜர் சுட்டியின் தலைமையில் மன்னார் மருத்துவமனையில் இந்தியப் படையின் சிறிய தங்ககம் மீதான தாக்குதல் நடந்தது. அத்தாக்குதலில் 24 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர்.
நாலு ‘பிறண்’ இலகு இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
1990 இன் ஆரம்பத்தில், கிளிநொச்சிக் காட்டுப் பகுதியில் இருந்த ஈ.என்.டி.எல்.எவ் துரோகக் கும்பலின் முகாம்மீது நடாத்தப்பட்ட பெரிய தாக்குதலில், சுபன் ஒரு பகுதி பொறுப்பாக இருந்தான்.
தமிழீழ – சிறிலங்காப் போர் மீண்டும் வெடித்த பின் தலைமன்னார் பழைய பாலம் படைத்தங்ககம் (15.06.1990), கயுவத்தை தங்ககம் (21.06.1990) என்பன முற்றாக தாக்கி அழிக்கப்பட்டன.
கயுவுத்தையில் இருந்த பவல் வாகனம் ஒன்று கையகப்படுத்தப்பட்டது.
சிலாவத்துறை, ஆனையிறவு படைத் தங்ககங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சுபன் கலந்துகொண்ட முக்கிய தாக்குதல்களாகும்.
சுபனின் காலத்தில் வஞ்சியன் குளத்திலும் (29.04.1991) வேப்பங்குலத்திலும் (30.03.1992) நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல்கள் புகழ்பெற்ற தாக்குதல்களாகும்.
வஞ்சியன் குளத்தில் 60 இற்கும் மேற்பட்ட படையினரும், வேப்பங்குளத்தில் 24 படையினரும் கொல்லப்பட்டனர். இவற்றில் இருந்து முறையே 50 இற்கும் 30 இற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டன.
தமிழீழத்தில் மிகப் பெரிய அளவில் காவல் உலா வந்த படையினர் மீது அதிரடித் தாக்குதால் நடத்தப்பட்டு அடிப்படை அணி முற்றாக அழிக்கப்பட்ட நிகழ்ச்சி வஞ்சியன் குலத்தாக்குதல் ஆகும்.
“வாங்கலை இறங்கு துறையில் வந்து அடிப்பம் (09.10.1990) என்று எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. அங்கு தாக்குவிட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்குள் வெளியே வேண்டும். அத்தாக்குதலில் 6 படையினர் கொல்லபட்டனர்.
பூநகரித் தாக்குதல் பற்றி (25.09.1992) நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க. இரண்டரை மைல் இராணுவ வேலியை அழித்து, 62 காவலரண்களை தகர்த்தோம். 25 படையினர் கொல்லப்பட்டாங்க. 30க்கு மேல் ஆயுதங்கள் கைப்பற்றினோம். அதில்தான்….. ஆள் காயப்பட்டுவிட்டது என்றுதான் சொன்னாங்க. உடம்பைத்தான் கொண்டுவந்தாங்க.
எந்தத் தாக்குதல் எண்டாலும் கடைசி வேவுக்கு சுபன் வரும். வந்து பார்த்து யார் யார் எங்கு நிலையெடுக்க வேண்டும். என்ன செய்யவேண்டும். என்று சொல்லும்.
அதன் பிறகுதான் தாக்குதல் நடக்கும். ஆள் பக்கத்திலே நிக்குது எண்டாலே ஒரே உற்சாகமாக இருக்கும்.
“அண்ணே, செய்ய முடியாது, என்று ஒன்றும் இல்லை” என்று சுபன் அடிக்கடி சொல்லும்.
சுபனின் அகரமுதலில் ‘முடியாது என்று ஒன்று இல்லை’.
– களத்தில்
