
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை (20.09.2025) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில்,
22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 276,600 ரூபாவாகவும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 299,000 ரூபாவாகவும் காணப்படுகிறது.
📩 Contact Us For questions about refunds or returns, reach out to our support team: Email: amizhthu.com@gmail.com Dismiss
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் வெள்ளிக்கிழமை (19.09.2025) இடம்பெற்றது.
“நமது நாடு, நமது மன்னார், நமது போராட்டத்தின் கோரிக்கைகள்” என்ற பதாகையில்
மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு இடத்திலும் கனிம மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது,
அமைக்கப்பட்ட ( தம்பபன்னி, நறுவிலிக்குளம் ) ஆகிய 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தை மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் வியாழக்கிழமை (18.09.2025) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமானப்படையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய மினுவாங்கொடையைச் சேர்ந்த 37 வயதுடைய புலனாய்வு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான விமானப்படை புலனாய்வு அதிகாரி விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான விமானப்படை புலனாய்வு அதிகாரியின் பையிலிருந்து 550 கிராம் எடையுடைய 24 கரட் தூய்மையான 40 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
சிலாபம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
சிலாபம் தொடக்கம் கொழும்பு, கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
கர்ப்பிணித் தாய்மார், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட அனைத்து குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதுடன் உகந்த முறையில் அவர்களுக்கான சுகாதார சேவை விரைவில் மேம்படுத்தப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

உலக நோயாளர் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய இவ்வருட உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு சுகாதார அமைச்சரின் தலைமையில் புதன்கிழமை (17) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. அந்த வகையில் இவ்வருடம் “பிறக்கும் குழந்தைகள் உட்பட நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சுகாதார சேவையை வழங்குவது“ என்னும் விசேட தொனிப்பொருளுக்கமைய உலக நோயாளர் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிகழ்வின் போது கலந்துக் கொண்ட சுகாதார அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
நோயாளர்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையை பாதுகாப்பான முறையில் வழங்க வேண்டும் என்பதற்காக 2019 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உலக நோயாளர் பாதுகாப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாப்பது சமூகம் என்ற ரீதியில் எம் அனைவரினதும் கடமையாகும்.
சுகாதார ஊழியர்களின் அர்பணிப்பின் பலனாக தற்போது சிசு மரண வீதம் குறைவடைந்துள்ளதுடன், நோயாளர் பராமரிப்பு சேவையும் உயர் தரத்தில் வழங்கப்படுகின்றது. சுகாதார சேவையை மாத்திரமல்லாது நோயாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. மேலும் கர்ப்பிணித் தாய்மார், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட அனைத்து குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதுடன் உகந்த முறையில் அவர்களுக்கான சுகாதார சேவை மேம்படுத்தப்படும்.
அதற்கமைய அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் தொடர்ச்சியாக பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் நேரடியாக வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
சிலாபம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ் வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (17) இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

அதேவேலை இலங்கை மின்சாரசபைக்கு முன்பாக ஒன்றுகூடிய மின்சாரசபை ஊழியர்கள் தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்மாதம் 4 ஆம் திகதி முதல் மின்சார சபை ஊழியர்கள் மேலதிக சேவைகளில் இருந்து விலகி சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக தற்போது நேற்றும் இன்றும் இருநாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக இலங்கை மின்சாரசபை அனைத்து தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள மின்சாரசபை தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 800 ஊழியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட மின்சாரசபை ஊழியர்கள் புதன்கிழமை (17) காலை 11.30 மணியளவில் இலங்கை மின்சாரசபைக்கு முன்பாக ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது மின்சாரசபை ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த சலுகை மற்றும் கொடுப்பனவை வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தனர்.
மின்சாரசபை ஊழியர்களின் சலுகைகளையும் உரிமைகளையும் இரத்து செய்யாதே, மின்சார சபை ஊழியர்களின் முன்மொழிவு ஆவனத்தில் கைச்சாத்திடு, அனுர மின்சார சபையை தனியார் நிறுவனங்களுக்கு விற்றார், அரசாங்கத்தினர் தேர்தலுக்கு முன்னர் பொய்யான வாக்குறுதிகளை மாத்திரமே எமக்கு வழங்கினர் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் கோசமிட்டும் ஆர்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் நூற்றுக்கனக்கான போராட்டக்கார்கள் மின்சாரசபைக்கு முன்பாக கூடியிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்கார்கள் முன்னோக்கிச் செல்வதை தடுப்பதற்காகவும், பாதுகாப்பு கருதியும் பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது இலங்கை மின்சாரசபை சுதந்திர ஊழியர் சங்க செயலாளர் பிரபாத் பிரியந்த குறிப்பிடுகையில்,
கடந்த 4 ஆம் திகதி 24 முன்மொழிவுகளுடன் மின்சாரசபை தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட கடிதத்துக்கு அரச தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதில்களும் வழங்கப்பட வில்லை. அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆட்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் அது உண்மையல்ல அவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் 72 இலட்ச மின் பாவனையாளர்களும், 21 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்சார ஊழியர்களும் நெருக்கடிக்கு ஆளாக்ககூடும்.
உழைக்கும் வர்க்கத்தின் அரசாங்கம் என ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் வகையில் செயற்படுகின்றனர். அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் செயலை ஒருபோதும் எம்மால் ஏற்கமுடியாது. நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்து மின்சாரசபை ஊழியர்களின் வரப்பிரசாதங்களை இரத்து செய்துள்ளனர். எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கு பதிலளிக்காதுவிடின் எமது தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட தயாராக உள்ளோம் என்றார்.
பரிசோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய போது அதனை அரசாங்கம் உதாசீனப்படுத்தியது. ஆனால் இன்று அவ்வாறு விடுவிக்கப்பட்ட இரு கொள்கலன்களில் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்ட எஞ்சிய கொள்கலன்களில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல் மக்கள் அச்சத்திலிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை மறந்து விட்டது. மாறாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து அடக்குமுறைகளும், ஜனநாயக மீறல்களுமே இடம்பெற்று வருகின்றன. இவற்றை விடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய எந்தவொரு முக்கிய நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை. விவசாயிகள் முதல் சகல துறையினரும் இன்று வீதிகளிலேயே இருக்கின்றனர்.
வெகு விரைவில் நாட்டிலுள்ள மாணவர்கள் குப்பி விளக்கின் வெளிச்சத்தில் கல்வி கற்கும் மோசமான நிலைமை ஏற்படுமா என்ற அச்சம் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பெருமிதமாகப் பேசிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்துக்கு நாட்டு மக்களுக்கு சோறும் உப்பும் கூட திறம்பட வழங்க முடியவில்லை.
பரிசோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய போது அதனை அரசாங்கம் உதாசீனப்படுத்தியது. ஆனால் இன்று அவ்வாறு விடுவிக்கப்பட்ட இரு கொள்கலன்களில் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது இரு கொள்கலன்களின் உள்ள பொருட்கள் என்ன என்பது மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் எஞ்சியவற்றில் எவ்வாறான ஆபத்தான பொருட்கள் உள்ளன என்பது அரசாங்கத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம். காமினி திஸாநாயக்க, ரணசிங்க பிரேமதாச, ஜே.ஆர்.ஜயவர்தன போன்ற முன்னாள் ஜனாதிபதிகள் மக்களுக்காக முன்னெடுத்த வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில், பஸ் தரிப்பிடமொன்றை புதுப்பிப்பது பெரிய விடயமல்ல.
அது வரவேற்கக் கூடிய விடயம் எனினும், அதனை விட மக்களுக்கு பல முக்கிய தேவைகள் உள்ளன என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்துகின்றோம். பஸ் தரிப்பிடத்தை புதுப்பிப்பதற்கு முன்னர் மாதந்தோரும் இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முதலில் எடுக்கப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு அரசாங்கம் எந்தளவு முக்கியத்துவமளித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
கட்டுவாப்பிட்டி தேவாலயத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்படுவார் எனக் கூறினார். ஆனால் குறைந்தபட்சம் ஒரு சந்தேகநபரேனும் இந்த ஆட்சி காலத்தில் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அந்த பதவியை வகிப்பது பொறுத்தமற்றது என்பதை அருட்தந்தை சிறில் காமினி வலியுறுத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியில் நாம் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்த போதிலும், சபாநாயகரால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் எந்தளவுக்கு வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றார்.
For nine long months, Suhail, a young man, was detained under the draconian Prevention of Terrorism Act (PTA) without any proven charges. Recently, the courts declared him innocent and released him, as no evidence of terrorism could be established. Yet, throughout this period, he bore the stigma of being labeled a “terrorist” under a law that is notorious for being used as a political and ethnic weapon.

On the other hand, former Health Minister Keheliya Rambukwella was accused of importing fake medicines into the country—medicines that shockingly contained bacteria and plain water instead of life-saving compounds. These medicines directly endangered public lives, and yet, Rambukwella was released on bail under ordinary criminal law.
This exposes a burning question:
● How many lives were lost because of these fake medicines? Nobody knows.
● Is playing with people’s lives on such a scale not an act of terrorism?
● Why was Rambukwella not charged under the Prevention of Terrorism Act?
Had it been a Tamil or Muslim minister caught in a scandal of this magnitude, there is no doubt they would have been instantly branded as “terrorists” and jailed under the PTA.
✦. The Double Standards of Justice
This is not a new phenomenon. In Sri Lanka, Sinhala chauvinist politicians enjoy the protection of one set of laws, while Tamils and Muslims are subjected to an entirely different, harsher set.
● Former Minister Pillayan was imprisoned under the PTA.
● Yet Rambukwella, whose actions endangered thousands of lives, walks free on bail.
This is the living proof of two justices, two laws operating within the same country.
✦. Political Interpretation
The Prevention of Terrorism Act, introduced as a tool to counter terrorism, has in reality functioned as:
● A weapon to silence Tamils and Muslims
● A means to crush political opposition
● A legal mechanism of ethnic discrimination
Those caught under this law are overwhelmingly from minority communities, while Sinhala politicians are shielded by softer applications of the legal system. This reflects the deep-rooted bias of Sri Lanka’s judiciary.
✦. Conclusion:
Today, the contrast is clear:
● Suhail, an innocent man, was unjustly branded a terrorist and detained for months without proof.
● Rambukwella, responsible for importing deadly fake medicines, walks free on bail.
This proves beyond doubt that two laws operate in one nation:
● One law for Sinhala chauvinists
● Another law for Tamils and Muslims
This is the true face of “justice” in Sri Lanka.


Written by: Eelaththu Nilavan
A writer on Tamil history, politics, freedom, and justice
17/09/2025
முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்கள் கினிகத்தேன பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கினிகத்தேன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கினிகத்தேன – பிளக்வோட்டர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான இளைஞர்கள் மூவரும் முச்சக்கரவண்டியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களான இளைஞர்களிடமிருந்து, பொதிகளாக்கப்பட்ட ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மூவரும் இன்று புதன்கிழமை (17.09.2025) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை கொழும்புக்கு நேரடியாக உதவியதாக இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு பாதுகாப்பு மண்டலத்தின் தளபதியாகவும், கடற்படையின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளருமாக பணியாற்றிய டி.கே.பி.தசநாயக்க, சமூக ஊடக நேர்காணலில், இதனை குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களின்போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 26 கப்பல்கள் இருந்தபோதும், அதில் 12 கப்பல்கள், இந்திய கடற்படையின் உதவியுடன் அழிக்கப்பட்டன என்றும் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் வகையில், தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்ய அல்லது புதிய சட்டத்தை உருவாக்க ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசியலமைப்பின் 3ஆவது மற்றும் 4ஆவது உறுப்புரைகளின்படி, மக்கள் இறைமை அதிகாரம் தேர்தல் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போதைய தேர்தல் சட்டங்களின்படி, இலங்கையில் வசிக்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்துள்ள குடிமக்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் போன்ற பல ஆசிய நாடுகள், வெளிநாடுகளில் வாழும் தங்கள் குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க சட்டங்களை வகுத்துள்ளன. அதைப் போலவே இலங்கையிலும் இந்தச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
அதற்கமைய வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டத்தை திருத்தம் செய்ய அல்லது புதிய சட்டத்தைத் தயாரிப்பதற்கான விடயங்களை ஆராய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்படும்.
இந்தக் குழுவில் தேர்தல்கள் ஆணைக்குழு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பொதுநிருவாக, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொடர்புடைய ஏனைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் இடம்பெறுவர் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.