தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் வியாழக்கிழமை (18.09.2025) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமானப்படையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய மினுவாங்கொடையைச் சேர்ந்த 37 வயதுடைய புலனாய்வு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான விமானப்படை புலனாய்வு அதிகாரி விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான விமானப்படை புலனாய்வு அதிகாரியின் பையிலிருந்து 550 கிராம் எடையுடைய 24 கரட் தூய்மையான 40 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. – கவீந்திரன் கோடீஸ்வரன்
- இலங்கை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை இங்கிலாந்து துணைப் பிரதமர் சந்தித்தார்.
- இலங்கை காவல்துறை நாடு தழுவிய சோதனைகளை நடத்தி, ஒரே நாளில் 570 பேரை கைது செய்தது!
- இலங்கையில் வெளிநாட்டினருக்கான விசா காலம் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தனது உரையில், ’75 வருட சாபம்’ என்ற கருத்தை ஜனாதிபதி நிராகரித்தார்!
- ஹொரணையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.