தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்ததால், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.83 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. நேற்று முன்தினம் (செப் 20), தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 10,290 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, 82,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (செப் 21) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.82,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,360க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 நெருங்கியது.
தொடர்ந்து, சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை பிற்பகலில் 30 டாலர்கள் அதிகரித்து 3,722.85 டாலராக அதிகரித்தது.
- இலங்கையில் அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன
- டில்லி வந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே ஒரு முக்கிய தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.
- பெப். 4 சிறீலங்காவின் சுதந்திரநாள் – ஈழத் தமிழ்மக்களின் கரிநாள்! – சுவிஸ்
- திலீபன் – திலீபம்: தமிழின விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று, அரசியல், உலகளாவிய கோட்பாடு
- லண்டன், பிரஸல்ஸ், பெர்லின் விமான நிலையங்களில் நடந்த சைபர் தாக்குதல் காரணமாக, விமான போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது.
இதன் காரணமாக, பிற்பகலிலும் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.83,440க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,430க்கு விற்பனையாகிறது.
இதன்மூலம், தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.83 ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.1,120 அதிகரித்துள்ளது. இது ஆபரண பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.