தியாக தீபன் திலீபம் அவர்களது இறுதி நாள் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலானது புதன்கிழமை (24.09.2025) திருகோணமலையில் சம்பூர் ஆலங்குலம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தலை மாவட்டம் தழுவிய ரீதியில் 26.09.2025 ந் திகதியன்று நடாத்துவது தொடர்பாக குறித்த கலந்துரையாடலின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவிக்கையில் 1987ம் ஆண்டு இலங்கையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போது இந்திய அமைதி காக்கும் படையினரால் இலங்கையில் ஏற்பட்ட அட்டூழியங்களுக்கு எதிராக யாழ் நல்லூர் கந்தசாமி கோயில் முன்றலில் உண்ணா விரதம் இருந்து தனது உயிரை தமிழினத்துக்காக தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வை உணர்ச்சி பூர்வமாக முன்னெடுக்க இக் கலந்துரையாடலானது இதற்காக 26.09.2025 அன்று திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெறும் இதில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ஏற்பாட்டு குழு சார்பாக அழைக்கிறோம் என்றார்.
- இலங்கையின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஏர் இந்தியா விமானத்தில் மற்றொரு சிக்கல்; போயிங் 787 விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
- ஒபாமா தம்பதியரை குரங்குகளாக காட்டிய இனவெறி வீடியோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்க மறுக்கும் டிரம்ப்
- தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை 10.01.1974
- The De Facto State of Tamil Eelam: A Chronicle of Governance (Pre-2009)
- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிராக போராட்டம் – அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை