தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களிலும், நாளை 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: வங்கக்கடலில், மியான்மர் கடலோர பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மியான்மரை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று (செப் 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* நீலகிரி
* கோவை
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நாளை (செப் 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* நீலகிரி
* கோவை
* தேனி
* தென்காசி
- முருகனை பாடுமாறு பணித்ததே தேசியத் தலைவர் தான் – கோவை கமலா
- எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
- “ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்,” – பழனிசாமி
- தற்போதைய தமிழக சட்டமன்றத் தேர்தல் சூழலில், திமுகவுக்குத் தகுதியான போட்டியாளர் யாரும் இல்லை. – முன்னாள் தமிழக முதலமைச்சர்
- சென்னை – புதுச்சேரி – கடலூர் வரை 179 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை
- மீளாத்துயரில் வருந்துகிறோம்!
செப்., 27ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கோவை
* நீலகிரி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.