அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஐ.நா. தலைமையகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ பேசுகையில், ”டிரம்பின் கட்டளைகளை மீறுங்கள். மனிதகுலத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்.

பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் உலகளாவிய ஆயுதப் படை உருவாக வேண்டும். இந்தப் படை அமெரிக்காவை விட பெரியதாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார். முன்னதாக, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசுகையில், ”காசாவில் இஸ்ரேலின் போரை கடுமையாக குஸ்டாவோ பெட்ரோ எதிர்த்தார்.
அவர் ” காசாவில் இனப்படுகொலைக்கு அமெரிக்கா உடந்தையாக இருக்கிறது. கரீபியன் கடலில் போதைப்பொருள் படகுகள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார். இவர் டிரம்பிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால் கொலம்பியா அதிபர் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோவின் பொறுப்பற்ற கருத்துக்களால் அவரது விசாவை நாங்கள் ரத்து செய்துள்ளோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 1983-இன் பெருநெருப்பும் கிளர்ச்சி இயக்கத்தின் மாற்றமும் (பாகம் 2)
- டவுனிங் ஸ்ட்ரீட்டில் உருவாகும் அரசியல் நெருக்கடி
- மூதூர் மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் ஐரோப்பாவின் பாதுகாப்பு கவலைகளை தீவிரப்படுத்துகிறது
- மாதவரம் பால் பண்ணையில் உற்பத்தி முடக்கம்! ஆவின் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்: “கல்ஃப் நாடுகளுக்கு எதிரான ஈரானின் ‘கடுமையான தாக்குதல்கள்’ உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்”