ஸ்ட்ரேடஸ் என்பது கொரோனா வைரசின் புது வடிவமாகும். இந்த வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு, மருத்துவ ரீதியிலான பெயராக எக்ஸ்.எப்.ஜி., என கொடுக்கப்பட்டுள்ளது.இது, ஒரு கலப்பின வைரஸ் ஆகும். இது, நடப்பாண்டு ஜனவரியில் தென்கிழக்கு ஆசியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் இதை, ‘ கண்காணிக்கப்பட வேண்டிய உருமாறிய வைரஸ்’ என வகைப்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதன் முதலில் இவ்வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறைவான நோய் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சுகாதார ஆபத்து என்பது குறைவாகவே இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஏற்கனவே உடல்நல குறைபாடு உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சற்று கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.
தற்போது அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி, டெலாவேர், வெர்மான்ட், மிச்சிகன், விஸ்கான்சின், மினிசோட்டா மற்றும் வடக்கு, தெற்கு டகோட்டா போன்ற மாகாணங்களில் இந்த வைரஸ் தாக்குதல் வேகமாக அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- “தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதற்றம்: ஆளுநர் வெளியேறியதை ஸ்டாலின் கண்டனம், உரை ‘வாசிக்கப்பட்டதாகவே’ அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்”
- உலகளாவிய பதற்றப்புள்ளி: அமெரிக்க உதவி மேற்பார்வை தோல்விகள், ரஷ்ய தாக்குதல்கள் மற்றும் உக்ரைன் – அதற்கு அப்பாற்பட்ட புவிசார் அரசியல் மாற்றங்கள்
- சிட்னியில் இறுதி டெஸ்ட் வெற்றி – ஆஷஸ் தொடரை 4–1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது
- பதுளையில் 22,793 நுகர்வோர் குடிநீரைப் பெற முடியவில்லை; 51,916 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை; 76 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் சமந்த வித்யாரத்ன
- U.S. Capture of Nicolás Maduro Sparks Global Turmoil
- திமுக உறுப்பினர்களுக்கு பத்திரிகையாளர் அடையாள அட்டைகள்; அதிமுக புகார்