யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் ஞாயிற்றுக்கிழமை (05.10.2025) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு, கைகளில் கறுப்பு கொடிகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், பொதுமக்கள் மற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போக்குவரத்து மையங்கள் மீது தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள்; வளைகுடா பதற்றம் மேலும் தீவிரம்
- ஐரோப்பிய ஒன்றியம் €1 பில்லியன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஒப்புதல்: கூட்டுப் புதுமையை ஊக்குவிக்கும் முயற்சி
- பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதன்’க்கு இன்னும் “தடுப்புக்காவல் உத்தரவு” பிறப்பிக்கப்படவில்லை.
- அகவை வாழ்த்து | 17 பிப்ரவரி
- சாதியமும் – புலிகளும்
- நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்: ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணை!
