மேற்கு வங்கத்தில், பச்சிம் வர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லுாரி இயங்கி வருகிறது. கண்காணிப்பு கேமரா இங்கு, ஒடிஷாவின் ஜல்லேஸ்வரைச் சேர்ந்த மாணவி, இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார். இவர், தன் ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் இரவு உணவருந்தி விட்டு, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், அந்த மாணவியின், ‘மொபைல் போனை’ பறித்ததுடன், 3,000 ரூபாய் தந்தால் மொபைல் போனை தருவதாக கூறினர். இதையடுத்து, பணத்தை எடுத்து வர மாணவியின் நண்பர் சென்ற நிலையில், மருத்துவ கல்லுாரி அருகே உள்ள வனப்பகுதிக்கு மாணவியை இழுத்து சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடினர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட் ட மாணவியின் நிலையை அறிந்த அவரது நண்பர், உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தகவலறிந்து வந்த மாணவியின் பெற்றோர், இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதன்படி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மருத்துவ கல்லுாரி அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தப்பியோடிய மூன்று பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த வழக்கில் இன்று (அக் 12) 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர் விபரங்களை போலீசார் வெளியிடவில்லை.
- “அமெரிக்காவின் வரி விதிப்பால் இறால் ஏற்றுமதியில் 25,000 கோடி இழப்பு” – சந்திரபாபு நாயுடு
- “இலவசங்களுக்கு நிதி இருக்கிறது, ஆனால் செவிலியர்களின் சம்பளத்திற்கு எதுவும் இல்லை ?” உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் நிதி முன்னுரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.
- இந்தியாவின் இன்றைய வானிலைச் செய்தி
- ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி வழக்கில், அனில் அம்பானிக்கு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
- கர்நாடகாவில் எஸ்பிஐ வங்கியில் 50 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.8 கோடி பணத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
- ‘வற்புறுத்தி ஆடைகளைக் கழற்றுவதும், மார்பகங்களைப் பிடிப்பதும் பாலியல் வன்கொடுமை முயற்சி’ என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.