வீரப்பெண்ணாகவும் தமிழ்ப் பெண்ணினத்தின் விடுதலைக்கு வழிகாட்டியாகவும் சாதனை படைத்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியத்தில் 12.10.2025 14:30 மணிக்கு இந் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழத் தேசிய கீதத்துடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர்வணக்கம் சுடர்வணக்கத்தைத் தொடர்ந்து பிரதான உரையுடன் சூரியப்புதல்வி பாகம்-2 இசைப் பேழை வெளியீடு செய்யப்பட்டது.
இசைப் பேழையின் பாடல்களுடன் பாடலின் விளக்க உரைகளும் மகளிர் உறுப்பினர்களால் உரையாற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து 2ம் லெப்.மாலதி அவர்களின் வரலாறு சார்ந்த சிறப்புரைகளும் எழுச்சிப்பாடல்கள், கவிதை,பேச்சு என பல நிகழ்வுகளுடன் ஈழத்தமிழர்கள் நிறைந்த மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.
தமிழீழத் தேசியக் கொடி கையேந்தலைத் தொடர்ந்து “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தமிழரின் தாரகமந்திரத்துடன் வீரவணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.
- The Sinhala nation has killed our dove of peace
- அமெரிக்கா–கிரீன்லாந்து பதற்றம் தீவிரம்: டிரம்ப் கட்டுப்பாட்டு முயற்சி மேலும் கடுமை
- இலங்கை ஜனாதிபதி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சிறந்த ஒருங்கிணைப்பு பராமரிக்கப்பட வேண்டும்.
- அமெரிக்க தாக்குதலும் மடுரோவை கடத்தலும்: உலக ஒழுங்கை பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணம் என ஆப்பிரிக்க நாடுகள் எச்சரிக்கை
- வடகிழக்கு சிரியாவில் ரத்தப்பாசறை நிறுத்தம்: கடும் மோதல்களுக்கு பின் அரசு–SDF இடையே சமரச ஒப்பந்தம்
- கியூபெக் தமிழ் பெண்கள் அமைப்பு நடத்தும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2025