தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வாழ்த்துக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்ரேல் பிரதமரின் பிறந்த நாளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து, இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் அன்பு நண்பரே, உங்கள் (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு) தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்கள் பிறந்தநாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை வாழ்த்துகிறேன். வரும் ஆண்டுகளில் இந்தியா – இஸ்ரேல் இடையே உறவு செழிக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: எனது நண்பர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்.
- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை பிரிட்டன், கனடா உள்ளிட்ட ஆறு நாடுகள் கூட்டாக சமர்ப்பித்துள்ளன.
- மக்ரோனை எப்ஸ்டீன் வழக்கில் சிக்கவைத்ததாகக் காட்ட ரஷ்ய ஆதரவு கொண்ட தவறான பிரச்சாரம் வெளிச்சம்
- விஜயின் குரூர துணிச்சல் ! | முதல்வர் பதவின் மீதான வெறி !
- மாத்தூர் கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும் ! முனைவர் செந்தில்நாதன்
- மருமகனால் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் கண்டுபிடிப்பு!
- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறுத்தை கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது.
தீபத்திருநாள் உங்கள் சிறந்த தேசத்திற்கு நம்பிக்கை, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். இஸ்ரேலும் இந்தியாவும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.