ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேசியாவுக்கு புறப்பட்டார். அவரின் வருகையை எதிர்த்து, கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு, மலேசிய இஸ்லாமிய கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மலேசியாவில் அக்.26ம் தேதி முதல் அக்.28ம் தேதி வரை 3 நாட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஆசியான் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரேசில் அதிபர் டிசில்வா உள்ளிட்ட பல நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளும் மாநாட்டில் பங்கேற்கின்றன.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேசியா புறப்பட்டார். ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கும் அவர் பயணிக்க உள்ளார். அதிபராக பதவியேற்ற பிறகு., முதல் முறையாக மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு செல்கிறார். தமது 5 நாள் பயணத்தின் கடைசி நாளில் அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கிறார்.
இதனிடையே டிரம்பின் மலேசிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான மலேசிய இஸ்லாமிய கட்சியினர் திரண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், காசா விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாட்டைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
- தென் கொரியாவில் 61 ஆண்டுகளுக்கு முன் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றத்தில் போராடி ரத்து செய்ய வைத்துள்ளார் மூதாட்டி!
- சீனாவின் மூத்த இராணுவத் தலைமை தொடர்பாக விசாரணை அறிவிப்பு
- ஜப்பான் அதிவேக ரயில் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் — ஐரோப்பாவில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விகள் தொடர்கின்றன
- பலோசிஸ்தானில் ஒரே நாளில் பல்வேறு துப்பாக்கி–குண்டு தாக்குதல்கள்: பாகிஸ்தான் அதிர்ச்சி நிலையில்
- தென் கொரியா: வட கொரியா எல்லைக்கு ட்ரோன் பறப்பில் ஈடுபட்டதாக சந்தேகம் – மூன்று பொதுமக்களுக்கு வெளிநாட்டு பயணத் தடைகள்
- காபூல் மருத்துவமனை வெடிப்பு குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுப்பு