3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணிக்கு ஆஸ்திரேலியா 237 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களம் இறங்கிய டிராவில் ஹெட் 29 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் மேத்யூ ஷார்ட் 30 ரன்னிலும், ரென்சா 56 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்தடுத்து, ஆஸி. வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் 46.4 ஓவரில், 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- உதவி குறைவால் அதிகரிக்கும் நெருக்கடி: எத்தியோப்பிய சமூகங்கள் கவலை வெளிப்படுத்துகின்றன
- 🐌 பிரான்ஸ் பண்ணையில் €90,000 மதிப்புள்ள நத்தைகள் திருட்டு
- Sydney Harbour Rock Ledge Jump Turns Tragic as 12‑Year‑Old Battles for Life After Suspected Bull Shark Attack
- 2025 உலக இராணுவ சக்தி தரவரிசை: புதிய சக்தி அமைப்பை வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்கள்
- ஐரோப்பாவின் எரிசக்தி நெருக்கடியும் புதிய உலகளாவிய அதிகார மாற்றமும்
- டவுனிங் ஸ்ட்ரீட்டில் உருவாகும் அரசியல் நெருக்கடி
இந்திய அணி வீரர் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
ஆஸி.நிர்ணயித்துள்ள 237 ரன்கள் என்ற இலக்கு நோக்கி இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடி, ஆறுதல் வெற்றியை பெறுவார்கள் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.