உ.பி.,யில் உள்ள அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டுமான பணிக்கான நிதி திரட்டும் பிரசாரம் கடந்த, 2022ல் துவங்கியது.

கடந்த ஆண்டு ஜனவரி, 22ல் கோவில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில், நவ.,25ல் கோவில் கொடியேற்று விழா நடக்கிறது. இதையொட்டி, ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா நேற்று அளித்த பேட்டி:
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பொது மக்கள், 3,000 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தனர். கோவில் கட்டுமான பணிகள், 1,800 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், 1,500 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
- இந்திய தபால் துறை இன்று முதல் “வெளிநாடுகளுக்கு சிறிய பார்சல்களை அனுப்புவது” உள்ளிட்ட சில சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
- கொல்கத்தாவில் மெஸ்ஸி வருகை – 70 அடி சிலை திறப்பு, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்
- இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து: உலக பொருளாதாரத்தில் புதிய அத்தியாயம்
- இஸ்ரேல் உடனான இந்திய உறவு வலுவானது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கும்.
- பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானத்தில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு!
நவ.,25ல் நடக்கும் கொடியேற்ற நிகழ்வில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்றுவார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டுமான பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். இதில், 8,000 பக்தர்கள் பங்கேற்கின்றனர். – இவ்வாறு அவர் கூறினார்.