மெக்சிகோவின் சோனோராவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் வழக்கம் போல் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் உதவ, உள்துறை அமைச்சருக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம், சோனோரா மாநில கவர்னர் அல்போன்சோ இரங்கல் தெரிவித்தனர். திடீரென தீப்பற்றியதுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
- உலக கேமிங் துறை 197 பில்லியன் டாலரை எட்டியது — கணினி மற்றும் மொபைல் விளையாட்டுகள் முன்னிலை
- அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்து கியூபா உறுதியான நிலைப்பாடு
- அமெரிக்கா–மடுரோ பிடிப்பு சர்ச்சை: சர்வதேச சட்ட எச்சரிக்கைகளுடன் வெனிசுலா மேலும் அதிர்ச்சி நிலைக்கு
- ஐரோப்பாவின் சக்திவாய்ந்த ‘Ariane 64’ ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டது; அமேசானின் செயற்கைக்கோள்கள் விண்ணில்
- இரானில் ஆட்சிமாற்றம் ‘நடக்கக்கூடிய சிறந்த விஷயம்’ என டிரம்ப் கருத்து; மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவப் பங்கு அதிகரிப்பு
- மத்திய கிழக்கு: ஒரு கத்தியின் முனையில்