அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை 7:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்கால், திருவாரூர் பகுதியில் தலா, 5 செ.மீ., நாகப்பட்டினத்தில் 4 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு, வேளாங்கண்ணி பகுதி யில் தலா, 3 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.
இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 24ம் தேதி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மேலும் வலுப்பெறக் கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில் சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. – இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், வேட்பாளர்கள் கோடிக்கணக்கான 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்துள்ளனர், அதனால் மக்களிடையே அதிக புழக்கம் இல்லை.
- வட தமிழகத்தை நோக்கி தித்வா புயல் நகர்கிறது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
- மலைப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இலவசமாக பஸ்சில் பயணிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- “கரூர் சென்ற தமிழக முதல்வர், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை?” – இபிஎஸ் கேள்வி?
- ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.