வவுனியாவில் ஏற்ப்பட்ட வெள்ளப்பேரிடர் காரணமாக 1118 குடும்பங்களை சேர்ந்த 3598 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 47இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 599 குடும்பங்களை சேர்ந்த 1997 பேர் 21 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிரதேச செயலகபிரிவில் 191 குடும்பங்களை சேர்ந்த 605பேர் 8 முகாம்களிலும், வவுனியா வடக்கில் 172 குடும்பங்களை சேர்ந்த 519 பேர் 10முகாம்களிலும், வவுனியா தெற்கில் 156 குடும்பங்களை சேர்ந்த477 பேர்8 முகாம்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சமைத்த உணவுகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு,பிரதேச செயலகம்,ஏனைய தனவந்தர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை வெள்ளம் வடியாத தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் அதிகமான மக்கள் தங்களது உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
அதிக நீர்வரத்து காரணமாக மாவட்டத்தில் உள்ள83 குளங்களில் சேதம் ஏற்ப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
- ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த செர்னோபில் பாதுகாப்பு கவசம்
- கோயம்புத்தூரை தொழில்நுட்ப நெய்தல் துறையின் புதிய உலக மேடையாக மாற்றும் தமிழ்நாடு–மெஸ்ஸே பிராங்க்ஃபர்ட் கூட்டணி
- Netflix Warner Bros. Discovery-யை கைப்பற்றியது: ஹாலிவுட் உலகில் பெரும் அதிர்ச்சி
- உயிர்காக்க உதவிடுவோம்
- இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்த பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை!
- புதிய எரிபொருள் QR குறியீடு: இலங்கையின் வாகன உரிமையாளர்களின் பிரச்சனைகள் இன்று தீர்க்கப்பட்டன!
நேற்று மாலையின் பின்னர் வவுனியாவில் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது. இதனால் தடைப்பட்டிருந்த பிரதான வீதிகள் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.