Home செய்திகள்இலங்கைபுதிய எரிபொருள் QR குறியீடு: இலங்கையின் வாகன உரிமையாளர்களின் பிரச்சனைகள் இன்று தீர்க்கப்பட்டன!

புதிய எரிபொருள் QR குறியீடு: இலங்கையின் வாகன உரிமையாளர்களின் பிரச்சனைகள் இன்று தீர்க்கப்பட்டன!

by Amizhthu

முன்னர் QR குறியீட்டைப் பெற்ற மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள் எவ்வித சிக்கலுமின்றி புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்கள் மாறியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களை கொள்வனவு செய்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் அத்தியாவசிய சேவைகள், விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, இன்றைய தினத்திற்குள்ளேயே அவற்றுக்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00