தெருநாய் அச்சுறுத்தல் தொடர்பாக, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:

பெற்றோர் – ஆசிரியர் கூட்டத்தில், வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவுறுத்த வேண்டும்.
பள்ளி அறிவிப்பு பலகையிலும், காலை வழிபாட்டுக் கூட்டத்திலும், தெருநாய் அச்சுறுத்தல் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தெருநாய் கடித்தால், மாணவர்கள் தயக்கமின்றி ஆசிரியர், பெற்றோரிடம் தெரிவிக்கும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளிகளை சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள் தெருநாய்களுடன் விளையாடுவது, உணவளிப்பது உள்ளிட்ட செயல்களை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். ‘ரேபிஸ்’ நோய் தொற்று குறித்து, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள், இதற்காக ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமித்து, பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரித்து, தெருநாய்கள் நுழைய முடியாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
- திருவண்ணாமலையில் இளம் பெண்ணை தாய் கண்ணெதிரே பாலியல் பலாத்காரம் செய்த இரு காவலர்கள் கைது.
- “திமுக அரசு மத மோதலை உருவாக்க முயற்சிக்கிறது. ஸ்டாலின் அனைவருக்கும் முதலமைச்சரா?” – அண்ணாமலை கேள்வி
- தைப்பூசம் சிறப்பு விவாத மன்றம் | முருகன் அரசியல் யாருக்கு கை கொடுக்கும்?
- ”விஜயை பார்த்து திமுகவினர் பயப்படுகின்றனர்.” – அண்ணாமலை.
- அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை செய்வதற்காக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்திருந்த நிலையில், டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வரவில்லை.