T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் ஞாயிற்றுக்கிழமை (01-02-2026) யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் , நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலும், துரையப்பா விளையாட்டு அரங்கிலும், யாழ்ப்பாணம் கோட்டையிலும், யாழ்ப்பாணம் நூலகத்திலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் கடந்த 21ஆம் திகதி அன்று உலகக் கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
- “மாவீரர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்.” – அருட்தந்தை மா.சத்திவேல்
- இலக்கை நோக்கி நகர்பவர்களிற்கு “மேதகு” சிந்தனை வழிகாட்டும்!
- சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- மாகாண சபைத் தேர்தல் தாமதம் தொடர்பாக இந்தியா தலையிட வேண்டும் என்று தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
- லெப்.கேணல் ஜீவன் | 06.12.2001
- நினைவு வணக்கம் | 14 பிப்ரவரி
அதனை தொடர்ந்து, உலகக் கிண்ணமானது இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றுயாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டது.