Saturday, October 31, 2026
Home தமிழகம்சென்னையில் நேற்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்துள்ளது.

by Amizhthu

சென்னையில் நேற்று (பிப்ரவரி 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. கடந்த 2 தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் (பிப்ரவரி 05) தங்கம் விலை கிராமுக்கு, 580 ரூபாய் குறைந்து, 14,320 ரூபாய்க்கு விற்பனையானது.

சவரனுக்கு, 4,640 ரூபாய் சரிவடைந்து, 1,14,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்தது.

(பிப்ரவரி 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் ஒரு கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 259 ஆக விற்பனை ஆனது.

சவரனுக்கு 1,140 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோவுக்கு 20 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தங்கம், வெள்ளி விலை வார இறுதி நாளில் உயர்வை சந்தித்து இருக்கிறது.

You may also like

Leave a Reply