
காலம் வருமென
கைகளை கட்டி
காத்திருந்த பெண்கள் அல்ல இவர்கள்,
எமக்கான காலத்தை
நாங்களே உருவாக்க
களம் நோக்கி நடந்தவர்கள்.
அடக்குமுறையின்
ஒவ்வொரு கட்டளைக்கும்
தலைகுனிய மறுத்து,
ஒவ்வொரு “ஆணைக்கும்”
எதிராக
ஒரு வரலாற்று
“இல்லை” என
நெஞ்சம் நிறுத்தியவர்கள்.
அடுப்படிக்குள் அடக்க
சமூகம் திட்டமிட்டபோது,
அக்னியாக மாறி
அரசியல் மேடையே
அதிர வைத்தவர்கள்.
“பெண் என்றால்
பொறுமை தான்
அடையாளம்”
என்ற பொய்யை,
இரத்தம் சிந்தி,
உண்மையால்
சிதைத்தவர்கள்.
- உருவெடுத்து வரும் யூரேசிய அச்சு: புடின் – சி ஜின்பிங் கூட்டணியும் மேற்கத்திய உலக ஒழுங்குடன் வேகமெடுக்கும் மோதலும்
- ரஷ்யாவின் புவிசார் அரசியல் எழுச்சி: மூலோபாய நீர்மூழ்கிகள், போர் விமான மேலாதிக்கம் மற்றும் பாரிய தொழிற்துறை அணிதிரட்டல்
- யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது.
- இலங்கை ரயில் ஓட்டுநர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
- பாதுகாப்பு கவலைகள் தீவிரம்: இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு வர முடியாது என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
- வாக்கு வாங்கும் போது ‘சகோதரன்’ பதவி வந்ததும் ‘பகையாளியா? | அநுரவிடம் ஏமாந்த தமிழினமே, விழித்தெழு!
அவர்கள் காலடி
மண்ணில் பதிந்ததல்ல—
ஆக்கிரமிப்பின் மார்பில்
பதிக்கப்பட்ட
தீர்ப்புகள்.
பயம் அவர்களை
தொடர வந்தபோது,
அவர்கள்
பயத்தையே
பின்னால் இழுத்துச்
சென்றார்கள்.
போராட்டம்
ஆண்களின் சொத்து அல்ல
என்று
வரலாற்றின் முகத்தில்
உச்சரித்த
பெண்கள் இவர்கள்.
மரணம் கூட
அவர்களை
மௌனப்படுத்த முடியவில்லை,
ஏனெனில்
ஒவ்வொரு வீழ்ச்சியும்
ஆயிரம் எழுச்சிகளாக
மாறியது.
அவர்கள் சுமந்தது
ஆயுதம் மட்டும் அல்ல—
ஒரு தேசத்தின்
மூச்சு,
ஒரு இனத்தின்
மரியாதை,
ஒரு மொழியின்
உயிர்.
பெண்ணியத்தை
போராட்டத்திலிருந்து
பிரிக்க நினைத்த
அனைத்து அரசியல்களுக்கும்
அவர்கள் பதில்—
புரட்சி தான்
எங்கள் அடையாளம்.
இவர்கள்
இறந்த பெண்கள் அல்ல,
இன்றும்
அடக்குமுறையை
தூக்கிலேற்றும்
வரலாற்றுச் சாட்சிகள்.


எழுதியவர்: ஈழத்து நிலவன்