தமிழீழமே ஒரே தீர்வு என்று வலியுறுத்தி பிரித்தானிய மன்னர் மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கில் நகரும் தமிழர் படை
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன் ஆரம்பமான கரிநாள் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று கூடிய வண்ணம் உள்ளனர்.

சிறிலங்கா அரச தூதரகத்தின் முன் வானுயர ஒலித்திக்கொண்டிருந்த கொட்டொலிகள் மத்தியில் மாபெரும் போராட்டம் தற்போது பிரித்தானியப் பேர்ரசின் மன்னர் மாளிகை நோக்கி தமிழர் படைகள் எம்மினத்தின் தன்னாட்சிக்கான உரிமைக்குரலினை உரத்துக்கூறியபடி நகர்ந்துகொண்டிருக்கிறது..இப்போராட்டம் பிரித்தானிய மன்னர் மாளிகையை சென்றடையவுள்ளது.
மக்கள் வெள்ளமென அலையலையாக திரண்டு போராட்டப்பாதை எழுச்சி கொண்டுள்ளது.
- முதல் கிறிஸ்துமஸ் திருப்பலியில் “அச்சமின்றி சமாதானத்தைத் தேடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார் போப் லியோ — காசா மற்றும் உக்ரைன் குறித்து சிறப்பு அழைப்பு
- “திருவையாறு : 1000 பேர்”
- லெப். கேணல், புலேந்திரன் லெப்.கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் 38 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.
- மாவீரர் கவிதை – ஈழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை
- வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் 17 தமிழக மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
- ரஷ்யா தேர்தலில் தலையீடு செய்ய வேண்டாம் – ஹங்கேரியின் எதிர்க்கட்சித் தலைவர் பேட்டர் மஜ்யார் எச்சரிக்கை
தமிழர் தாயகத்தில் கரிநாளான இன்று எழுச்சிகொண்ட மக்கள் போராட்டங்களை சிறிலங்கா அரசு நசுக்க முற்பட்ட வேளையிலும் தடைகளை உடைத்து போராட்டங்கள் நடைபெற்றுள்ள சூழமைவில், பிரித்தானிய மன்னரை நோக்கிய இப்போராட்டமும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.







