சென்னையில் வார தொடக்க நாளான இன்று (பிப்ரவரி 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து , ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) தங்கம் விலை கிராமுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 14,560 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,280 ரூபாய் அதிகரித்து, 1,16,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.நேற்று (பிப்ரவரி 15) தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 16) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 960 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
- கிராம பஞ்சாயத்துகளில் வரும் 11 ஆம் தேதி தடையற்ற இணைய சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்துள்ளது.
- 🔴ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி ?
- ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் பொருட்களின் விலையை குறைக்காமல், அதன் அடிப்படை விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு மீது அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
- சாஸ்திரா பல்கலைக்கழக வெளியேற்றத்தை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியது; தமிழக அரசு “உணர்வுபூர்வமாக” நடக்க வேண்டும் என அறிவுறுத்தல்
- OTT தளத்தில் வெளியாகியுள்ள இந்த “சல்லியர்கள்” படத்தை தமிழர்கள் அனைவரும் பார்த்து, பேச வைத்து, வெற்றியடையச் செய்வோம்.