அவரது அறிக்கை:
தி.மு.க., அரசு அமைந்த பின், ‘மகளிர் உரிமை திட்டம், மகளிர் விடியல் பயணம், தோழி விடுதிகள், புதுமைப்பெண் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மகளிருக்கான ஆட்சி நடந்து வருகிறது.
தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களால், தமிழக பெண்கள், வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்து உள்ளனர்.
பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும், சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்துச் சென்று சேர்ப்பதே, தி.மு.க., மகளிரணி பிரசாரத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, 2004ம் ஆண்டுக்கு பின், இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.
- போகி புகை மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு.
- தமிழகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொல்காப்பியம் பூங்காவை ஆய்வு செய்தார்.
- 22 காரட் தங்க நகைகளின் விலை, சவரன் ரூபாய் 1 லட்சத்தை தாண்டி, தமிழ்நாட்டில் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது.
- சென்னையில் இன்று (மார்ச் 18) 22 காரட் தங்க நகைகளின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 640 குறைந்தது.
‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பிரசாரத்திற்காக, வரும் 20, 21 மற்றும் 22ம் தேதிகளுக்குள் அனைத்து தொகுதிகளிலும் பயிற்சி கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும்.
இப்பயிற்சியை, சட்டசபை தொகுதி மகளிர் அணி பொறுப்பாளர்கள் வழங்குவர்.
வரும் 23ம் தேதி முதல், வீடு வீடாக பிரசாரம் துவங்கி, மார்ச் 8ம் தேதிக்குள், தி.மு.க., அரசின் மகளிர் நலத்திட்டங்கள் குறித்த சிறப்புகள், அனைத்து வீடு களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும். – வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.