மொனராகலை – எத்திமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோத கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டதோடு, உலர்ந்த கஞ்சா என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதாகவும், பெருமளவு கஞ்சாச் செடிகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சியம்பலாண்டுவ விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (28) பகல் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 30,000 கஞ்சா செடிகளும், 1/4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 8,000 கஞ்சா செடிகளும், 1/4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 8,500 கஞ்சா செடிகளும் அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் உலர்ந்த கஞ்சாவும் இதன்போது கைப்பற்றப்பட்டது.
- “வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டு, மின்சார சபை ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது”. – பிரபாத் பிரியன்த.
- இலங்கைக்கு 104 புதிய FOTON மெட்ரோ பேருந்துகள் — பொது போக்குவரத்து வலுவூட்டும் புதிய கட்டம்
- சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைத் திருத்துமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
- 15 வயது சிறுமி காணாமல் போயுள்ளார்; இலங்கை காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!
- இலங்கைக்கான இன்றைய நாணய மாற்று விகிதம்.
- இலங்கை அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்!
இந்தச் சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக எத்திமலை பொலிஸாரும், சியம்பலாண்டுவ விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.