த.வெ.க., சார்பில் சென்னையில் நேற்று நடந்த மகளிர் தினவிழாவில் அவர் பேசியதாவது: விஜய், வட சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார். வில்லிவாக்கம் அல்லது பெரம்பூர் தொகுதியில் நிற்க வாய்ப்புள்ளது.
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒருவரும் சாலையில் நடக்க முடியாது. சிறுமி முதல் பார்க்கும் பெண்களை எல்லாம், தி.மு.க.,வினர் கையை பிடித்து இழுக்கின்றனர். இப்படிப்பட்ட கட்சியை உருவாக்கி விட்டு, முதல்வர் ஸ்டாலின் தினமும் கண்மூடி செல்கிறார்.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கையெழுத்திட்டதும் தைரியம் வந்துவிட்டது போல் இருக்கின்றனர். அது மதசார்பற்ற கூட்டணி இல்லை; கல்லாப்பெட்டி கூட்டணி.
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தால், நல்ல கட்சியாக இருக்கும். ஆளும் கட்சியாக வந்து விட்டால், கண்ணில் பார்ப்பதை எல்லாம் அடைய வேண்டும் என நினைக்கும். மத்திய அரசு விதிப்பது ஜி.எஸ்.டி., என்றால், தமிழகத்தில் ஸ்டாலின் சார் ‘டேக்ஸ்’, அதாவது எஸ்.எஸ்.டி.,
- தவெக வின் சாக்கடை அரசியல்!
- ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது’ – சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழக அரசியலில் புதிய அதிர்வலை: விஜய்யின் TVK மாற்றும் சமன்பாடுகள்
- வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது; பிப்ரவரி 21-22 தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- 2026 தேர்தல் வாக்குறுதிகளின் முதல் கட்டத்தை வெளியிட்ட AIADMK — குடும்ப உதவி, இலவச பேருந்து பயணம், வீட்டு திட்டங்கள் விரிவு
- ஜி.டி. நாயுடு மேம்பாலத் திறப்பு விழாவிற்கு ரூ. 2 கோடி செலவிடப்பட்டதா என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
தேர்தல் அறிவிப்புக்கு பின், விஜய் தெருத்தெருவாக செல்லும்போது, மக்களின் எழுச்சியை பார்க்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.