கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 2000 கடல் அட்டைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளையின் ‘இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண’ பிரிவின் பள்ளிக்குடா கடற்படை வரிசைப்படுத்தல் பிரிவினர் வியாழக்கிழமை 12 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்குடா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வண்டி ஒன்றைக் கடற்படையினர் வழிமறித்துச் சோதனை செய்தனர்.
இதன்போது, எவ்விதமான சட்டப்பூர்வ அனுமதியுமின்றி கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2000 கடல் அட்டைகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து, குறித்த வாகனத்துடன் மூன்று சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டனர்.
- கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் கேணல் சாள்ஸ். – ச.பொட்டு அம்மான்
- மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை’யின் 35வது ஆண்டு நிறைவு.
- மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு தீவகம்
- “புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- “இடிமுழக்கம்” 03.10.1995
- கொழும்பு – மட்டக்குளி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு, போதைப்பொருளுடன் மூவர் கைது!
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 முதல் 54 வயதுக்குட்பட்ட கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கெப் வண்டி என்பவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேகநபர்கள் கிளிநொச்சி மாவட்ட கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.