நாட்டில் எரிபொருள் விலைகள் இன்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐ.ஓ.சி. ஆகிய நிறுவனமும் இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, அனைத்து முக்கிய எரிபொருள் வகைகளின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய விலைகள் பின்வருமாறு:
ஒட்டோ டீசல் – ரூ. 79 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 382
சூப்பர் டீசல் – ரூ. 90 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 443
பெட்ரோல் ஒக்டேன் 92 – ரூ. 81 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 398
பெட்ரோல் ஒக்டேன் 95 – ரூ. 90 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 455
மண்ணெண்ணெய் – ரூ. 60 அதிகரிப்பு; புதிய விலை: ரூ. 255
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைகளின் இந்த திடீர் உயர்வு பொதுமக்களின் வாழ்வுச் செலவில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து கட்டணங்கள், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உள்ளிட்ட பல துறைகளிலும் இதன் தாக்கம் காணப்படக்கூடும்.
- இறையாண்மை கொண்ட போராளிகள்: மரபுவழி மேலாதிக்கத்தின் “பொற்காலம்” (1990–2001) (பகுதி 4)
- மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் நாள் அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது.
- தமிழர்களின் நிரந்தர வம்சம்: தொன்மை, மரபு மற்றும் ‘திராவிடவியல்’ என்ற நவீன வேடத்தின் மூலம் நிகழும் சதி
- ஒருபுறம், மத்திய கிழக்கு போர் நெருக்கடியால் ‘மகா வலி’; மறுபுறம், இலங்கை அரசாங்கத்தின் ‘மகா வலி’யையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.! – ரவிகரன் எம்.பி.
- இலங்கையின் அஞ்சல் துறை 2025 ஆம் ஆண்டில் 13.1 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது!
