பிரதேச சபை செயலாளரின் மனித நேயக் கவனத்துக்கு கொண்டுவரப்படவேண்டிய விடயமாக, 2025ஆம் ஆண்டு 7, 8 மற்றும் 9வது மாதங்களில் தனக்கான ஊதியம் வழங்கப்படாமை மனித உரிமைமீறலாகும் என சுகாதாரத் தொழிலாளி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட நிலைமையால், தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் “நீதி கிடைக்கும் வரை போராடுவேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பொத்துவில் பகுதியிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை கவனயீர்ப்பு நடைபவனியில் ஈடுபட்டார்.
மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று, தமக்கு ஏற்பட்ட அநீதி குறித்து கலந்துரையாடலை நடத்தவும் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர் எச்.ஏ. நிபான் தெரிவித்துள்ளார்.
- Thileepan – The Eternal Flame: A Historical, Political, and Global Analysis of the Tamil Struggle
- தமிழீழ தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பத்திரிகையாளர் சந்திப்பு.
- அகவை வாழ்த்து – நவம்பர் 11
- நினைவு வணக்கம் | 08 பிப்ரவரி
- நினைவு வணக்கம் – அக்டோபர் 20
- புகழ் வணக்கம் | திருமதி. மனோன்மணி குமாரவேலு
இந்த நபருக்கு உரிய தீர்வு கிடைக்குமா என அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.