Home செய்திகள்தமிழீழம்சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உற்சாகத்துடன் தயாராகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உற்சாகத்துடன் தயாராகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

by Amizhthu

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபட்டிருப்பதையும் காணமுடிகின்றது.

வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்குடனும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த விசோட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பொதுமக்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்துவந்து சித்திரை புத்தாண்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது.

பொதுமக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைவாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை காணக்கூடியதாகவுள்ளது

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00