Home செய்திகள்இலங்கைபுத்தளத்தில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளத்தில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

by Amizhthu

மொனராகலை மாவட்டத்தின் விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் புத்தளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குறித்த ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 84 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் தராசு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புத்தளம் பகுதியில் அண்மைக்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிகளவிலான ஹெரோயின் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மொனராகலை மாவட்ட விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00