தம்முடைய கந்தகக்குரலால் தாயக கீதம் இசைத்த பாசறைப் பாணர், தமிழீழத் தாயகப்பற்றாளர், ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எறிகணை வரிகள் எழுதி தமிழர்களின் இதயங்களில் உறங்கிக்கொண்டிருந்த விடுதலை உணர்வை தட்டி எழுப்பிய புரட்சியாளர்..!
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை..!
என் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் பேரன்பு கொண்டு நேசித்து, நாம் தமிழர் மேடையை தம் இன்னிசையால் நிறைத்த
தமிழிசை ஏந்தல், விடுதலைப் பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
- ”தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை நீக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது.” – தர்மேந்திர பிரதான்.
- JOSEPH PARARAJASINGHAM: THE MEDIA PIONEER OF BATTICALOA AND A MARTYR OF TAMIL NATIONAL POLITICS
- தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரித்தானியா
- 20.11.1992 அன்று தமிழீழ கடடபரப்பில் வீராகவியமான “தமிழக மாவீரர்” கடற்புலி கப்டன் ஈழவேந்தன் (டில்லி)
- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 30ம் தேதி காரைக்குடியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
- உலகத் தமிழர்களின் வேர்களை வலுப்படுத்தும் அழைப்பு: குழந்தைகளை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருமாறு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
ஐயாவின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தாயகப்பற்றாளர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!




