கடந்த 2021 தேர்தலில் 69 சதவீதம் ஓட்டுகளை பெற்று வென்ற உதயநிதி, இந்த தேர்தலில் 45 சதவீதம் ஓட்டுகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு அரசியலுக்குள் வந்தவர் உதயநிதி. வந்தவுடன் அவருக்கு எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே அமைச்சர் பதவியும் வந்தது. சிறிது காலத்திலேயே துணை முதல்வர் பதவியும் தரப்பட்டது.
ஆனால், அந்த பதவியின் கண்ணியத்துக்கு தக்கபடி நடந்து கொள்ளாமல், வாய்க்கு வந்ததை பேசி மக்களின் வெறுப்புக்கு ஆளானார் உதயநிதி. கடந்த 2021 தேர்தலில் புதுமுகமான அவருக்கு 93,285 பேர் ஓட்டளித்துள்ளனர். இது, பதிவான 1,35,344 ஓட்டுகளில் 69 சதவீதம்.
ஆனால், இந்த தேர்தலில் அவருக்கு கிடைத்த ஓட்டுகள் 62,992 மட்டுமே. இது, மொத்தம் பதிவான 1,40,098 ஓட்டுகளில் 45 சதவீதம் ஆகும். முந்தைய தேர்தலில் பதிவான ஓட்டுகளை விட, உதயநிதிக்கு 24 சதவீதம் ஓட்டுகள் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் தொடரும் மழை
- தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- “ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்,” – பழனிசாமி
- திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
- அரியக்குடி அரசுப் பள்ளி மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய மினி செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி சாதனை படைத்தனர்.
- “கருத்து வேறுபாடு ஜனநாயகத்தின் அடிப்படை.” – இந்திய துணை ஜனாதிபதி




