நான்காவது தடவையாக நாட்டுப்பற்றாளர் தியாகத் தாய் அன்னை பூபதி அவர்களின் 38வது நினைவு சுமந்து தமிழ் பெண்கள் அமைப்பு நெதர்லாந்து சார்பில் சிறுவர் மற்றும் பெண்களுக்கான உள்ளரங்க விளையாட்டு நிகழ்வு லிம்பேக் மாநிலத்தில் 09.05.2026 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவீரர் கப்டன் கம்பனின் சகோதரி பொதுச்சுடரை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்றதுடன், இரவு 7.00 மணிக்கு “நம்புங்கள் தமிழீழம்” என்ற பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.