| தமிழ் நாட்காட்டி மே 2026 | |
|---|---|
| அமாவாசை | 18-மே-2026 திங்கட்கிழமை |
| பௌர்ணமி | 01-மே-2026 வெள்ளிக்கிழமை 31-மே-2026 ஞாயிறு |
| கார்த்திகை | 16-மே-2026 சனிக்கிழமை |
| சஷ்டி விரதம் | 22-மே-2026 வெள்ளிக்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 05-மே-2026 செவ்வாய்கிழமை |
| சதுர்த்தி | 20-மே-2026 புதன்கிழமை |
| பிரதோஷம் | 14-மே-2026 வியாழன் 28-மே-2026 வியாழன் |
| திருவோணம் | 09-மே-2026 சனிக்கிழமை |
| மாத சிவராத்திரி | 15-மே-2026 வெள்ளிக்கிழமை |
| ஏகாதசி | 13-மே-2026 புதன்கிழமை 27-மே-2026 புதன்கிழமை |
| அஷ்டமி | 09-மே-2026 சனிக்கிழமை 23-மே-2026 சனிக்கிழமை |
| நவமி | 10-மே-2026 ஞாயிறு 24-மே-2026 ஞாயிறு |
| அரசு விடுமுறை நாட்கள் | 01-மே-2026 வெள்ளிக்கிழமை மே தினம் 28-மே-2026 வியாழன் பக்ரீத் பண்டிகை |
| திருமண நாட்கள் | 08-மே-2026 வெள்ளிக்கிழமை தேய்பிறை 13-மே-2026 புதன்கிழமை தேய்பிறை 14-மே-2026 வியாழன் தேய்பிறை 18-மே-2026 திங்கட்கிழமை வளர்பிறை 28-மே-2026 வியாழன் வளர்பிறை 29-மே-2026 வெள்ளிக்கிழமை வளர்பிறை |
| திருவிழாக்கள் | 01-மே-2026 வெள்ளிக்கிழமை கள்ளழகர் வைகை எழுந்தருளல் 04-மே-2026 திங்கட்கிழமை அக்னி நட்சத்திரம் துவக்கம் 28-மே-2026 வியாழன் அக்னி நட்சத்திரம் முடிவு 28-மே-2026 வியாழன் பக்ரீத் பண்டிகை 30-மே-2026 சனிக்கிழமை வைகாசி விசாகம் |
இன்றைய ராசி பலன் 18 மே 2026 திங்கட்கிழமை
மேஷ ராசி அன்பர்களே,
மேஷ ராசி நேயர்களே, திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பர். பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும்.
ரிஷப ராசி நேயர்களே,
ரிஷப ராசி நேயர்களே, சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். யாரையும் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மிதுன ராசி அன்பர்களே,
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் நிதானமாக செயல்படவும். பழைய சிக்கலை தீர்க்க முடியும். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
கடக ராசி நேயர்களே,
கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் அனுசரித்து போகவும். உடல் நலத்தில் கவனம் தேவை. அநாவசியச் செலவுகளைத் குறைத்துக்கொள்ளவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சிம்ம ராசி நேயர்களே,
சிம்ம ராசி நேயர்களே, வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
கன்னி ராசி நேயர்களே,
கன்னி ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தொடங்க முடியும். ஆன்மீகத்தில் ஈடுபாடு வரும். செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்க பார்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
துலாம் ராசி நேயர்களே,
துலாம் ராசி நேயர்களே, குடும்ப செலவுகள் அதிகரிக்கும். முன் கோபத்தை குறைக்கவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே,
விருச்சிக ராசி நேயர்களே, எதிர்பார்த்த காரியங்கள் விரைவில் கைகூடி வரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
தனுசு ராசி நேயர்களே,
தனுசு ராசி நேயர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
மகர ராசி நேயர்களே,
மகர ராசி நேயர்களே, மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வரும். பிரியமானவர்கள் அன்புடன் பழகுவர். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கும்ப ராசி நேயர்களே,
கும்ப ராசி நேயர்களே, முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மீன ராசி நேயர்களே,
மீன ராசி நேயர்களே, குடும்பத்தாரின் ஒத்துழைப்பை பெற முடியும். விலகி சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 18-05-2026 To 24-05-2026

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தொலைதூரப் பிரயாணம் செய்ய நேரிடலாம். குடும்ப பெருமையை உயர்த்த வழி கிடைக்கும். ஞாபக மறதித் தொல்லை அடிக்கடி ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. நண்பர்கள் ஆலோசனைகள் தக்க சமயத்தில் உதவும். ஆன்மிக ரீதியான செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. கடன் பிரச்சனை படி படியாக குறைய தொடங்கும், மேற்கொண்டு கடன் வாங்கும் சூழல் இருக்காது. பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். உறவினர்களிடையே இருந்து வந்த மன கசப்பு நீங்கும். நினைத்த காரியங்கள் எளிதில் நடந்தேறும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, மனதில் உள்ள எண்ணங்களும், திட்டங்களும் நல்ல முறையில் செயல் வடிவம் பெரும். பொருளாதார நிலை சீரான வளர்ச்சி பெரும். சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். அண்டை அயலாருடன் கொண்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் மரியாதை உயரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உடல் உபாதைகள் நீங்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க முடியும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏதும் செய்யாமல் பார்த்துக்கொள்ளவும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். புது இடத்தில் உத்யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.
பரிகாரம்: தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்.

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். குடும்பத்துடன் தூர பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஒவ்வொரு விவகாரத்திலும் அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் தொடங்க முடியும். பெரியோர்கள் மீது நல்ல மரியாதை உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவும். வண்டி, வாகனங்கள் லாபத்தினைத் தரும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். புது வீட்டிற்கு மாற வேண்டிய சூழல் உருவாகும். கடன் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க முடியும். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் பணிசுமை கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிப்படவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, தன்னம்பிக்கையும் மன தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகளை ஏற்பட்டாலும், அதை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். மனதில் தோன்றும் நல்லெண்ணங்கள் உங்களது புகழை உயர்த்தும். தேக நலனில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். முன்பின் தெரியாத நபர்களுக்கு பொருளுதவி செய்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். பிரியமானவர்கள் பக்கபலமாக இருந்து செயல்படுவர். தான, தர்ம காரியங்களுக்கு நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும். நெருங்கிய உறவினர்களுடன் சுமுக உறவு காணப்படும். புதிய வீடு, மனை போன்றவற்றை வாங்கும் எண்ணம் மேலோங்கும். மற்றவர்களின் ஆலோசனைக்கு செவி சாய்பதை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்.

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, உங்களை சுற்றி இருப்பவர்களுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அகலும். குடும்பத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். முக்கிய காரியங்களை தாமதமின்றி முடிக்க முடியும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உடல் நலம் சீரான நிலையில் இருக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். சொத்து வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் வீண் செலவுகள் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பொறுமை அவசியம். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வீண் அலைச்சலால் சில சமயம் உடல் நலம் பாதிக்கலாம். முன்கூட்டியே திட்டமிட்டு காரியத்தில் ஈடுபடுவதன் மூலம் ஒரு சில இழப்புகளை தவிர்க்க இயலும். குடும்பத்தில் சலசலப்பான சூழல் நிலவும். பண விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. நண்பர்களிடம் கொடுக்கல் வாங்கலில் மனஸ்தாபம் வரலாம். வங்கி கடன் மூலம் புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த சில நல்ல விஷயங்கள் நடக்காமல் போகும். கணவன் மனைவிடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். மனக்குழப்பங்கள் படிப்படியாக குறையும். உத்யோக மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு எதிர்ப்பையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்க முடியும். உடன்பிறந்தோரால் ஒரு சில இழப்புகளை சந்திக்கக் கூடும். உறவினர்களோடு இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். எதிர்பாராத பிரயாணத்தால் சற்றே சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்து காணப்படும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். கணவன் மனைவி உறவில் நல்ல ஒற்றுமை இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் அனுசரணை அவசியம். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பர். புது தொழில் தொடங்கும் யோகம் அமையும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்.

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் நிலுவையில் உள்ள முக்கிய வேலைகள் முடிவடையும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பண வரவு குறைவாக இருந்தாலும் மன நிறைவு இருக்கும். பிரியமானவர்கள் சந்திப்பு நிகழும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை. புது வீடு மாற்றத்திற்கு நிறைய வாய்ப்புண்டு. உடன்பிறப்பு வகையில் சில மனக்கசப்புகள் வரலாம். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பாராத பொருள் விரையம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் சில நேரங்களில் விரோதமாக செயல்படலாம். பெற்றோர்களின் உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. அண்டை, அயலாரோடு மனஸ்தாபம் தோன்றலாம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : துர்கையை வழிபடவும்.

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் பட்டதை தைரியமாக பேசுவது நல்லது. ஓயாத அலைச்சல் காரணமாக உடலில் அசதியும், சோர்வும் ஏற்படும். இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது வந்துபோகும். எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். புதிய சொத்து வாங்கும் முயற்சிகள் வெற்றியடையும். தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உடல் உஷ்ணம் தொடர்பான தொந்தரவு இருக்கும். வாங்கிய கடனை அடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். காரிய தடை விலகும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். குடும்ப பிரச்னையை பேசி சரி செய்துகொள்ளவும். தெய்வ பிராத்தனைகள் நிறைவேற்றும் வாய்ப்புகள் கை கூடி வரும். உத்யோகத்தில் உங்க கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : குருபகவானை வணங்கி வழிபடவும்

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் கௌரவம் உயரும் படியான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. மனக்கவலைகள் குறையும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குடியிருக்கும் வீட்டை மாற்றும் எண்ணம் வரும். உடன்பிறந்தோர் உதவி கேட்டு வருவர். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் சீராகும். பிரியமானவர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் மெதுவாக செல்லவும். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்ல பலனை தரும். நெடுநாட்களாக மனதில் திட்டமிட்டு வைத்திருக்கும் காரியத்தினை சாதித்துக்கொள்ள முடியும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, நம்மை சுற்றி இருப்பவர்கள் யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். இக்கட்டான சூழலில் அமைதி காப்பது அவசியம். பொருள் வரவு தொடர்ந்தாலும், பொருளாதார சிக்கல்கள் தொடரும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் ஒரு படி அதிகமாக தான் இருக்கும். வீட்டு பெரியவர்களோடு மனஸ்தாபம் தோன்றி மறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழல் உருவாகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். கடன் விவகாரங்களில் அதிக கவனம் கொள்ளவும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்ப நபர்களிடம் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சகஜ நிலைக்கு திரும்ப முடியும். ஆன்மிகப் பிரயாணங்கள் மனதிற்கு அமைதியைத் தரும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
பரிகாரம் : வரசித்தி விநாயகரை வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பொருள் வரவு சீராக இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். குடும்ப ஆதரவை பெற முடியும். எந்த ஒரு காரியத்திலும் பிறரை நம்பாது நேரடியாக செயலில் இறங்குவது சிறப்பு. நண்பர்களின் ஆதரவு வழக்கம் போலவே இருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார சிரமங்கள் வெகுவாகக் குறைந்து சேமிப்பு உயர்வடையத் துவங்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். வாகனம் யோகம் உண்டு. தேவையில்லாத வீண் செலவுகளும் ஏற்படும். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : நவகிரகத்தை தினமும் 9 முறை சுற்றவும்.
மே மாத ராசி பலன்கள் 2026
| மே மாத ராசி பலன்கள் 2026 |
| மே மாத பலன்கள் – (2026 ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 18 முதல் வைகாசி மாதம் 17ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி (01-05-2026 முதல் 31-05-2026) வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ,அந்தரம், கோச்சாரம் இவைகள் அனைத்தும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே என்னுடைய அனுபவ பூர்வ உண்மை. கிரக நிலை மாற்றம் : 01.05.2026 – மேஷ புதன் 11.05.2026 – மேஷ செவ்வாய் 14.05.2026- மிதுன சுக்கிரன் 15.05.2026 – ரிஷபம் சூரியன் 26.05.2026 – கடக குரு ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார், PH.D Astrology (அலைபேசி: 09003019831) |
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாத தொடக்கம் ஆற்றலும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், முன் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிதாக ஏதாவது செய்ய ஆவல் எழும். பழைய பிரச்சனைகள் தீரும். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். மனம் மகிழும்படியான விஷயங்கள் நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்க தாமதமாகும். குடும்பத்தில் வெளி நபர்களால் இருந்த குழப்பம் நீங்கும். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத தடைகளும், பிரச்னைகளும் வந்தாலும் உடல் நிலையில் கவனம் தேவை. மனதிற்குள் சிறு சிறு சங்கடங்கள் வந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கவலைகள் அகலும். குடும்ப விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். பண வரவு சுமாராக இருக்கும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். கொடுத்த வாக்கை தவறாமல் காப்பாற்ற முடியும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்வருத்தங்கள் நீங்கும். எதிரிகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம், போன்றவற்றால் அதிக செலவுகள் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 & 30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் மங்களகரமானதாக இருக்கும். உங்கள் காரிய வெற்றிக்கு தேவையான அனைத்து உதவியும் கிடைக்கும். நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உங்களின் கடமைகளை திறம்பட செய்ய முடிக்க முடியும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். எந்த ஒரு காரியம் செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். குடும்பத்தில் முக்கிய விஷயங்களை திட்டமிட்டு செய்வது நல்லது. தீர்க்க முடியாத பிரச்னைகளை எளிதில் கூட எளிதில் தீர்க்க முடியும். போராட்டங்கள் பாராட்டுகளாக மாறும். சவாலான சூழலைச் சாதகமாக மாற்றும் மாதம். அடுத்தவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். குடும்ப விஷயங்களில் சிறு, சிறு பிரச்னைகள் இருந்தாலும் அது நாளடைவில் சரியாகும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குல தெய்வ வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். குடும்பத்தில் உள்ளவர்களால் சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. உடன்பிறப்புகளிடம் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பண நெருக்கடி ஓரளவு குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் பிரச்னைகள் வந்து நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் குறையும்.
சந்திராஷ்டமம் : 5,6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உடல் சோர்வால் சிரமப்படக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் புது விஷயங்களை செயல்படுத்தும் எண்ணம் வரும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் மன உறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். புத்திசாதூரியம் மூலம் நிறைய சாதிக்க முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் பாராட்டு கிடைக்கும். உடல் சோர்வு, அசதி நீங்கும். வீடு, மனை வாங்குவதில் சிறிய தடை இருக்கும். பெற்றோர்களின் ஆலோசனை கிடைக்கும். புது கடன் வாங்கி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நிலையில் கவனம் தேவை. வாகன பராமரிப்பு செலவுகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். உடன்பிறப்புகளின் ஆதரவு பெருகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பெண்களால் சில தொந்தரவுகள் வரும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் ஏற்படும். திட்டமிட்ட பயணங்களை தவிர்க்கவும். வாகனம் வாங்குவதை சற்று தள்ளி வைக்கவும். புதிய முடிவுகளையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் சிறப்பான ஒரு மாதமாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். நீண்ட கால பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நிதி நிலைமை சீராக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். வீட்டு தேவைகளுக்கு கூடுதலாக செய்ய வேண்டிவரும். முக்கிய காரியங்களில் இருந்த தடை நீங்கும். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை திறமையாக சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு, சிறு தடைகள் வந்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உடன்பிறப்புகளிடம் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் உங்களிடம் அடிபணிந்து போவர். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மற்றவர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து உயரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் பல தடங்கலுக்கு பின் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் இருந்து வந்த சஞ்சலம் நீங்கி மன மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கை வலுவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைத்தாலும், செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். குடும்ப நலனுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவை எடுக்க அடுத்தவரின் ஆலோசனையை கேட்பது நல்லது. பொருளாதார சிக்கல் இருந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறு, சிறு தடை பிரச்னைகள் வந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்யவும். உடன் பிறப்புக்கள் உதவிகரமாக இருப்பர். உறவினர்களால் சின்ன சின்ன மனக்கஷ்டங்கள் வந்து போகும். தெய்வ அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் விலகிச் செல்வர். நாள் பட்ட பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். புது நண்பர்களால் ஆதாயம் இருக்கும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உங்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். வேலையில் வெற்றியையும் காண முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் நிதி நிலை வழக்கத்தை விட நன்றாகவே இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். புது முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் ஒரு சிலர் உங்களுக்கு எதிராக செயல்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரியமானவர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்வதால் மனக்குறைகள் நீங்கும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் அதிகம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். நண்பர்கள் மத்தியில் நல்ல மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறலாம். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். புதிய நபர்களால் நன்மை உண்டு. ஆன்மீக பெரியோரின் ஆசி கிட்டும். உடன்பிறப்புகளால் நன்மை உண்டு. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உறவினர்களிடையே சின்ன மன கசப்புக்கள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது அவசியம். பழைய வீட்டை சீரமைக்க வேண்டியிருக்கும். திட்டமிட்ட காரியத்தை தாமதின்றி முடிக்க முடியும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உத்யோகம் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பல திருப்புமுனைகள் நிறைந்து இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். புதிய மாற்றங்களைக் காணக்கூடும். மாத தொடக்கம் சற்று மெதுவாக இருந்தாலும், போக போக ஆற்றலும், உற்சாகமும் அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா செல்லும் எண்ணம் இருக்கும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை குடும்ப மருத்துவரிடம் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பிடிவாத குணத்தை ஒதுக்கி வைப்பது எல்லா வகையிலும் நல்லது. குடும்பத்தில் தொலைத்து போன சந்தோஷம் மீண்டும் வரும். மன தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து போகவும். உறவினர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் விட்டுக்கொடுத்து போவது நன்மை தரும். குடும்பத்தில் சிறு பிரச்னைகள் வந்தாலும் மகிழ்ச்சி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் பக்கபலமாக. புது வாகனம் வாங்குவதில் உள்ள தடைகள் அகலும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வராமல் நின்று போன பணம் கைக்கு வரும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உங்களை சுற்றி நிறைய விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். கூட்டு தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் இழுபறியில் இருந்த பல காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். புதிய முயற்சிகள் பலிதமாகும். வருமானமும், செலவுகளும் நிலையாக இருக்கும். அதாவது வந்த வேகத்தில் பணம் செலவாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நிறைய செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மறைமுக எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்கவும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்திற்குள் மனக்கசப்புகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஒரு சில முக்கிய விஷயங்களை நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வீடு, மனை சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். நண்பர்களிடம் மனக்குறைகளை சொல்ல முடியும். விஐபிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதரவும் கிடைக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வேண்டிவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர இயலும். சொந்த பந்தங்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். உங்கள் சாதுரியமான பேச்சால் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும். குடும்ப விவகாரங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை மன உறுதியடன் போராடி வெற்றி பெற முடியும். உத்யோகத்தில் பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். சந்திராஷ்டமம் : 18,19,20 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் வாழ்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வழி கிடைக்கும். புதிய வருமான வழிகளை கண்டறிய முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமை வலுவடையும். குடும்பத்தில் தன வரவுக்கு வாய்ப்புண்டு. திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தை பற்றிய கவலை அதிகம் இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மனக்குறைகளை மற்றவர்களிடம் சொல்வதால் மன பாரம் குறையும். பணம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உற்றார், உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவர். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். மனதில் இருந்த குழப்பநிலை மாறி மனதில் ஒரு தெளிவு ஏற்படும். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறைகொள்ளவும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. எதிர்பாப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளி வைக்கவும். பெற்றோர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வாகனம் வாங்கும் முயற்சிகள் தடைப்படும். கடன் தொந்தரவு பெரியளவில் இருக்காது. எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் காலதாமதின்றி சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 20,21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லாம் சாதகமாக அமையும். வீடு தேடி நல்ல வாய்ப்புகள் வரும். மனம் மகிழும் செய்தி ஒன்று வரும். புது வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் வரும். குடும்ப வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் காண முடியும். இம்மாதத்தில் கோபத்தையும், பிடிவாதத்தையும் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் அது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். தியானத்தால் மனம் அமைதி பெரும். குடும்பத்தில் பிரச்சனைகள் நாளடைவில் சீராகும். விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். எத்தனை தடைவந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெற முடியும். வீடு, வாகன சேர்க்கை ஏற்படும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலனை பெற முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எதிர்த்து நின்றவர்கள் நண்பர்களாக மாறுவர். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்பத்தில் சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் பக்குவம் இருக்கும். உத்யோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சில தடைகளை சந்தித்தாலும், மாத இறுதியில் நிலைமை மேம்படும்.
சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும். உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த முடியும். திறமைகள் மேம்படும். மன கவலை நீடித்தாலும், தன்னம்பிக்கையால் அனைத்தையும் திறம்பட சமாளிப்பீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உங்களை சுற்றி இருந்த எதிர்ப்புகள் முழுமையாக நீங்கும். குடும்ப பிரச்சனைகள் தலைதூக்கும். புத்தி சாதூர்யத்தால் எந்த ஒரு தடைகள் வந்தாலும் அதை சமாளிக்க முடியும். குடும்பத்தில் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் முடிவுகளை கலந்தாலோசித்து எடுப்பது நன்மை தரும். உடன்பிறப்புகளால் சில பண விரையம் ஏற்படும். புது முயற்சிகளில் ஒரு சில தடைகள் வரலாம். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். உற்றார், உறவினர்களால் சில பண நெருக்கடிகள் வர வாய்ப்புண்டு. உடல் நலம் சீராகும். குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் சந்தர்ப்பங்கள் வரும். மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் கூடும். கணவன் மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனையை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். புது வீடு, மனை வாங்குவதில் ஆர்வம் கூடும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் யோகமான மாதமாக அமையும், தலையெழுத்தை மாற்றும் முக்கிய மாற்றங்கள் நிகழலாம். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும், சேமிக்கவும் முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உஷ்ணம் தொடர்பான தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு. பெற்றோரின் வழிகாட்டுதலும் கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் ஏற்பட்ட கசப்பான விஷயங்கள் மறையும். மேலும் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவார். சற்றும் எதிர்பார்க்காத செலவுகள் அதிகம் வரும். உடல் உபாதைகள் நீங்கும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் சிலர் உதவியை கேட்டு வருவர். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். முக்கிய பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். பணவரவு சிறிது தாமதத்திற்கு பின் கைக்கு வரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். புதிதாக அறிமுகமானவர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து போகவும். கணவன் மனைவிக்குள் சுமுகமான சூழல் நிலவும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வெளியில் கடன் வாங்கி செலவு வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். பொதுப் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 27,28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.