| தமிழ் நாட்காட்டி ஜூன் 2026 | |
|---|---|
| அமாவாசை | 14-ஜூன்-2026 ஞாயிறு |
| பௌர்ணமி | 29-ஜூன்-2026 திங்கட்கிழமை |
| கார்த்திகை | 13-ஜூன்-2026 சனிக்கிழமை |
| சஷ்டி விரதம் | 20-ஜூன்-2026 சனிக்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 04-ஜூன்-2026 வியாழன் |
| சதுர்த்தி | 18-ஜூன்-2026 வியாழன் |
| பிரதோஷம் | 12-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை 27-ஜூன்-2026 சனிக்கிழமை |
| திருவோணம் | 05-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை |
| மாத சிவராத்திரி | 13-ஜூன்-2026 சனிக்கிழமை |
| ஏகாதசி | 11-ஜூன்-2026 வியாழன் 25-ஜூன்-2026 வியாழன் |
| அஷ்டமி | 08-ஜூன்-2026 திங்கட்கிழமை 22-ஜூன்-2026 திங்கட்கிழமை |
| நவமி | 09-ஜூன்-2026 செவ்வாய்கிழமை 23-ஜூன்-2026 செவ்வாய் |
| அரசு விடுமுறை நாட்கள் | 26-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகை |
| திருமண நாட்கள் | 04-ஜூன்-2026 வியாழன் தேய்பிறை 07-ஜூன்-2026 ஞாயிறு தேய்பிறை 17-ஜூன்-2026 புதன்கிழமை வளர்பிறை 18-ஜூன்-2026 வியாழன் வளர்பிறை 24-ஜூன்-2026 புதன்கிழமை வளர்பிறை 25-ஜூன்-2026 வியாழன் வளர்பிறை |
| திருவிழாக்கள் | 22-ஜூன்-2026 திங்கட்கிழமை ஆனி உத்திர தரிசனம் 26-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை மொஹரம் |
இன்றைய ராசி பலன் 15 ஜூன் 2026 திங்கட்கிழமை
மேஷ ராசி :
தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட குறியீடுகள் :
அதிர்ஷ்ட எண் : 1 & 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் & ஞாயிறு
ஏற்றமான திசைகள் : கிழக்கு, வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்
பரிகாரம் : செவ்வாய்க்கிழமை விரதங்களை மேற்கொள்வது நல்லது
நட்சத்திர பலன்கள்
அசுவினி : தெய்வ வழிபாடு சிறக்கும்
பரணி : யாரிடத்திலும் கோபம் கொள்ள வேண்டாம்.
கிருத்திகை 1 : ஆதரவு பெருகும் நாள்
ரிஷப ராசி:
குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டாம். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 6
அதிர்ஷ்ட நிறம் : மண் நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி
பரிகாரம் : குல தெய்வத்தை முறையாக வணங்கி வழிப்படவும்
நட்சத்திர பலன்கள்
கிருத்திகை 2,3,4 : அமைதியான சூழல் நிலவும்
ரோகிணி : எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளவும்
மிருகசீரிடம் 1,2 : தடைகள் விலகும் நாள்
மிதுன ராசி :
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். அன்றாட தேவைகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் & வெள்ளி.
ஏற்றமான திசைகள் : வடக்கு, மேற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : அன்னை மீனாட்சி
பரிகாரம் : புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகள் பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைத் தரும்.
நட்சத்திர பலன்கள்
மிருகசீரிடம் 3,4 : மகிழ்ச்சி கூடும் நாள்
திருவாதிரை : தேவைகள் அதிகரிக்கும் நாள்
புனர்பூசம் 1,2,3 : செலவுகளை குறைக்க பார்க்கவும்
கடக ராசி :
சாதுரியமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். அசதி, சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். பிரியமானவர்களின் வருகை இருக்கும். தொழில், வியபாரம் வளர்ச்சி பெரும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 2 &7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள் & வியாழன்.
ஏற்றமான திசைகள் : வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சந்திரசேகரர் (சிவபெருமான்)
பரிகாரம் : பௌர்ணமி தினங்களில் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்வது துரதிர்ஷ்டங்களைப் போக்கும்.
நட்சத்திர பலன்கள்
புனர்பூசம் 4 : காரிய வெற்றி உண்டாகும் நாள்
பூசம் : உற்சாகம் பிறக்கும் நாள்
ஆயில்யம் : புது நபர்களின் வருகை இருக்கும்
சிம்ம ராசி :
முக்கிய வேலைகளை போராடி முடிக்க வேண்டிவரும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். கேரண்டர் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 1 & 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு & செவ்வாய்
ஏற்றமான திசைகள்: கிழக்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ நரசிம்மர்
பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வணங்குவது அதிக நன்மையை தரும்.
நட்சத்திர பலன்கள்
மகம் : வேலைகளை போராடி முடிக்க வேண்டிவரும்
பூரம் : ஆதரவு பெருகும் நாள்
உத்திரம் 1 : கேரண்டர் கையெழுத்தை தவிர்க்கவும்
கன்னி ராசி :
பொருளாதார நிலையில் உயர்வு இருக்கும். சொந்த பந்தங்களின் வருகை உற்சாகம் தரும். மறைமுக தொல்லைகள் நீங்கும். தொழில், வியபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 6
அதிர்ஷ்ட நிறம் கடற்படை நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் & வெள்ளி
ஏற்றமான திசைகள் : வடக்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீமன் நாராயணன்
பரிகாரம் : பறவைகளுக்குத் தினமும் ஊறவைத்த பச்சைப் பயறு தானமாக வழங்கலாம்.
நட்சத்திர பலன்கள்
உத்திரம் 2,3,4 : பொருளாதார நிலை உயரும்
அஸ்தம் : சொந்தங்கள் வருகை தருவர்
சித்திரை1,2 : தொல்லைகள் குறைந்து நிலைமை சீரடையும்
துலாம் ராசி :
எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துப் போகும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 6 & 8
அதிர்ஷ்ட நிறம் : லாவெண்டர்
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி & புதன்,
ஏற்றமான திசைகள் : மேற்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ ரங்கநாதர்
பரிகாரம் : ஏழைப் பெண்களுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்வது நன்மை தரும்.
நட்சத்திர பலன்கள்
சித்திரை 3,4 : நிதானமாக செயல்பட வேண்டிய நாள்
ஸ்வாதி : பண விவகாரத்தில் கவனம் தேவை
விசாகம் 1,2,3 : தம்பதினற்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்
விருச்சிக ராசி:
எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிட வேண்டாம். பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 9
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் & ஞாயிறு
ஏற்றமான திசைகள் : வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சண்முகர் (முருகன்)
பரிகாரம் : மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, பசுவின் பால், தயிர், சர்க்கரை தானம் செய்வது நற்பலனைத் தரும்.
நட்சத்திர பலன்கள்
விசாகம் 4 : நினைத்தது நிறைவேறும் நாள்
அனுஷம் : தேவையற்ற பிரச்சனையில் தலையிட வேண்டாம்
கேட்டை : பயணங்களை குறைத்துக்கொள்ளவும்
தனுசு ராசி:
மனதில் உற்சாகமும் சந்தோசமும் அதிகரிக்கும். புது நட்பு வழியில் ஆதாயங்கள் உண்டு. வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன் & செவ்வாய்
ஏற்றமான திசைகள் : கிழக்கு, வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி
பரிகாரம் : வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்
நட்சத்திர பலன்கள்
மூலம் : புது உற்சாகம் பிறக்கும் நாள்
பூராடம் : புது நட்பால் ஆதாயம் உண்டு
உத்திராடம் 1 : வீண் விவாதங்களை தவிர்க்கவும்
மகரம் ராசி:
கடுமையான முயற்சியால் முன்னேற்றம் காண முடியும். ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். உறவினர்களால் சில மனசங்கடங்கள் வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 6 & 8
அதிர்ஷ்ட நிறம் : கருமை கலந்த பழுப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி & வெள்ளி
ஏற்றமான திசைகள் : தெற்கு, மேற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : காலபைரவர்
பரிகாரம் : நவகிரங்களை தினமும் 9 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பு
நட்சத்திர பலன்கள்
உத்திராடம் 2,3,4 : மிகவும் உயர்வான நாளாக இருக்கும்
திருவோணம் : வெளி உணவுகளை தவிர்க்கவும்
அவிட்டம் 1,2 : உறவினர்களால் சில மனவருத்தம் வரும்
கும்ப ராசி:
புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படும். உடல் நலம் சீராகும். நண்பர்கள் இக்கட்டான சூழலில் உதவுவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 4 & 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : யோக கணபதி
பரிகாரம் : சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது வாழ்வில் ஏற்றத்தைத் தரும்.
நட்சத்திர பலன்கள்
அவிட்டம் 3,4 : புதியவைகளை கற்றுக் கொள்ள முடியும்
சதயம் : உடல் நலம் சீராக இருந்து வரும்
பூரட்டாதி 1,2,3 : நட்பு வழியில் உதவி கிடைக்கும்.
மீன ராசி :
பொதுநல காரியங்களில் ஈடுபாடு வரும். தடைபட்டு வந்த காரியங்கள் விரைவில் முடிவடையும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் புஷ்பராகம்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன் & திங்கள்
ஏற்றமான திசைகள்: வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தத்தாத்ரேயர்
பரிகாரம் : மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வழிபாடு செய்வது சிறப்பு.
நட்சத்திர பலன்கள்
பூரட்டாதி 4 : சமூக சேவையில் ஆர்வம் வரும்
உத்திரட்டாதி : தடைப்பட்ட காரியம் முடிவடையும்
ரேவதி : சுற்றத்தாரின் ஆதரவு பெருகும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 15-06-2026 To 21-06-2026

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலனபடி, பயண அலைச்சல்கள் அதிகம் இருந்தாலும், ஆதாயமும் கிடைக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வீட்டில் உறவினர் வருகையால் வீடு களைகட்டும். சாதூர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும். குடும்பத்துடன் விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன் போடும் முன் யோசிக்கவும். குடும்ப பாரம் காரணமாக அமைதி குறையலாம். பெரியோர்களின் தலையீட்டால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் வேலைபளு குறையும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பது நல்லது. மேலும் சில பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டாலும், எடுக்கும் காரியங்களில் திறமையாக செயல்படுவீர்கள். குடும்ப வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் முக்கிய விஷயங்களை எல்லாரிடமும் கலந்து ஆலோசிப்பீர்கள். திருமணத்தில் இந்த தடை நீங்கும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். நீண்ட நாட்களாக படுத்தி வந்த உடல்நிலை சீராகும். மனதில் தெம்பு பிறக்கும்.அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். தொழில், வியாபாரம் விருத்தி பெரும்.
பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எல்லோரிடமும் சமமாகப் பழகும் குணம் உங்களிடம் இருக்கும். முழு நம்பிக்கையுடன் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். குடும்ப நபர்களிடம் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவும். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். பயணங்களின் போது உங்கள் உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். புதிய முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். உறவுகளிடம் சுமூகமான நிலை நீடிக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய விஷயங்களில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். உத்யோகத்தில் பணிகளை திருப்திகரமாக செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
பரிகாரம் : குல தெய்வத்தை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தையில் பொறுமையும், நிதானத்தையும் பின்பற்றுவது நன்மை தரும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பழகும் போது பணிவு அவசியம். குடும்ப வருமானம் போதுமானதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வாகன யோகம் உண்டு. கணவன் மனைவிடையே மகிழ்ச்சி நீடிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். சில எதிர்பாராத சூழ்நிலை கடன் வாங்க தூண்டும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். சிக்கலான பிரச்னைகளில் கூட நல்ல முடிவு கிடைக்கும். உத்யோகத்தில் நிறைய சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.
பரிகாரம் : வாராகியை வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களிடம் உள்ள திறமை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் பெரிய அளவில் செலவுகள் வந்தாலும் திறமையாக சமாளிக்க முடியும். வீட்டில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கைமாற்றாக வெளியே கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். காரிய அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன பயணங்களில் மிகுந்த கவனம் தேவை. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம் : சூரிய பகவானை வழிபடவும்

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் இருந்து வந்த மனக்கவலைகள் நீங்கி புதிய உற்சாகம் பிறக்கும். அடுத்தவர்கள் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். உடல் நலம் சீராகும். குடும்ப விஷயங்களில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபம் சரியாகும். எந்த காரியத்தையும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். குடும்பத்தில் விட்டுப்போன சந்தோஷங்கள் திரும்ப வரும். கணவன் மனைவிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : மகாலக்ஷ்மியை வணங்கி வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் வெகுவாக குறையும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். முடிந்தவரை அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிரியமானவர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்ப்பது நல்லது. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெரியோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் ஏதும் வர வாய்ப்பு இல்லை. புதிய முயற்சிகள் எதையும் தற்சமயம் வேண்டாம். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதியவர்களின் நட்பு சந்தோஷத்தை கொடுக்கும். குடும்ப வருமானம் சீராக இருந்துவரும். ஓயாத அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் சுமூக நிலை காணப்படும். உடல் நலம் சீராக இருக்கும். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். உறவினர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வாகனங்களால் செலவுகள் ஏற்படும். உத்யோகம் மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, ஆலய வழிபாடு மன அமைதியை தரும். சொந்த பந்தங்களால் ஒரு சில நன்மைகள் உண்டு. வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். தன வரவு சுமாராக இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத கவலை விலக ஆரம்பிக்கும். புது நட்பால் நன்மைகள் உண்டு. பயணங்களில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலையில் இருக்கும்.
பரிகாரம் : குருபகவானை வணங்கி வழிபடவும்

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ளும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். தாராள பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் நலம் பலம் பெரும். பண சம்பந்தமான விஷயங்களில் கண்டிப்புடன் இருக்கவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். நண்பர்கள் வழியில் அனுகூலமான கிடைக்கும். உடன்பிறப்பு வழியில் சில சங்கடங்கள் வர வாய்ப்புண்டு. கடன் பிரச்சனை பாதியாக குறையும். ஆன்மீக சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.
ரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன்படி, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் கவனமாக பழகவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை அதிகரித்தால் மகிழ்ச்சி கூடும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும். உடல் நிலை சீராக இருக்கும். நண்பர்கள் மூலம் சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிய பொருள் வாங்க சிறிது தாமதம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக நடக்காத காரியம் ஒன்று நடந்து முடியும். உத்தியோகத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : ஸ்ரீ சாய்பாபாவை வழிபடவும்

மீன ராசி அன்பர்களே
மீன ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிரமம் இருக்கும். மனதில் குழப்பங்களும், கவலைகளும் இருந்துகொண்டே இருக்கும். உணவு கட்டுப்பாடு மூலம் உடல் நலத்தை பாதுகாக்க முடியும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் இருக்கும். உறவினர்கள் வழியில் ஏதாவது பிரச்சனைகள் வரலாம். விருப்பமான நபரை சந்திக்க மகிழ முடியும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பண பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இருப்பினும் வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. தடைபட்டு வந்த திருமண காரியம் சட்டென்று கைக்கூடும். உத்யோகத்தில் பணிகளை நிறைவாக செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும்
ஜூன் மாத ராசி பலன்கள் 2026
| ஜூன் மாத ராசி பலன்கள் 2026 |
| ஜூன் மாத ராசி பலன்கள் – (2026) (பராபவ வருடம் வைகாசி மாதம் 18ம் தேதி முதல் ஆனி மாதம் 16ம் தேதி வரை ) வாக்கிய பஞ்சாங்கப்படி 01-06-2026 முதல் 30-06-2026 வரை பலன்கள் கணித்து எழுதப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ராசிக்கும் தனித் தனியே கிரக நிலையின் அடிப்படையில் எழுதப்பட்ட பொது பலன்கள் ஆகும். மேலும் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். கிரக நிலை மாற்றம் 08-06-2026 – கடக சுக்கிரன் 15-06-2026 – மிதுன சூரியன் 20-06-2026 – ரிஷப செவ்வாய் 22-06-2026 – கடக புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் ஜோதிடர் A.வினோத் குமார் P.hd Astrology (அலைபேசி: 09003019831) |
மேஷ ராசி அன்பர்களே
அஸ்வினி 1, 2, 3, 4 பாதம், பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1ம் பாதம் முடிய)
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற இறக்கமாகவே உள்ளது. உங்கள் பேச்சில் நிதானமும், செய்யும் செயல்களில் கவனமும் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒரு சில காரியங்கள் நடக்கலாம் குல தெய்வ வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் காரிய வெற்றிக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். கடன் தொல்லைகள் சில நேரங்களில் மனதை பாதிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடும் கவனமும் தேவை. சுப காரியங்கள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்க முடியும். குடும்பத்துடன் கலந்து ஆலோசிப்பது எல்லா விஷயத்திற்கும் நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
சந்திராஷ்டமம் : 1,26,27,28,29 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
(கார்த்திகை 2, 3, 4, ரோகினி 1, 2, 3, 4, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் முடிய)
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் நிதானமாக முடிவு எடுப்பது நல்லதும். தினமும் தியானம் செய்வது மனதிற்கும், உடலுக்கும் நல்லது. மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த காரியங்களை கூட எளிதில் முடிக்க முடியும். குடும்பத்தில் பொருள் விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயங்களாகவே இருக்கும். தடைபட்ட காரியங்கள் கூட மாறி கை கொடுக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைத்து சுகமும் நிம்மதியும் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திட்டமிடாத பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். வழக்கில் இருந்த இழுபறி நிலை நீடிக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 1,2,3,4 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே
(மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை 1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 முடிய)
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமாகவே உள்ளது. பல சிக்கலான விஷயங்களை கூட சாதுர்யமாக பேசி முடிக்க முடியும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெற்றோர்களின் ஆலோசனை முக்கியமான நேரத்தில் கிடைக்கும். வெளியிடத்தில் கடன் வாங்கி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நிலை பொறுத்தவரை சின்ன சின்ன பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் ஏற்படும். பயணத்தில் மூலம் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 4,5,6 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
(புனர்பூசம் 4ம் பாதம் முடிய, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள் முடிய)
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல நல்லதும், கெட்டதும் கலந்தே நடக்கும். உங்களது செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். பண வரவு அவ்வப்போது இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உடன்பிறப்பிடம் சுமூகமான உறவு இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். கொடுக்கல், வாங்கலில் சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் எந்த குறையும் இல்லாமல் இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். உங்கள் மேல் சுமத்தப்பட்ட வீண் பழி நீங்கும். உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும், தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 6,7,8,9 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே
(மகம் 1, 2, 3, 4, பாதங்கள், பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1ம் பாதம் முடிய )
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். வர வேண்டிய பண கூட சற்று தாமதித்து பின் கைக்கு வரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் நிறைய மாற்றங்களை சந்திக்க வேண்டிவரும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் திகரிக்கும். பொருளாதார சிக்கல்களை திறமையாக சமாளிக்க முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். உடல் நலம் சீர்பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களால் சில பிரச்சனைகள் வரும். உங்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கும். வெளியில் கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் திருப்தி தரும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 9,10,11 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம் 1, 2, 3, 4, சித்திரை 1, 2 பாதங்கள் முடிய )
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த காரியத்தை செய்தாலும் பல முறை யோசித்து செய்வது உத்தமம். குடும்பத்தில் ஆதரவு பெருகும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். சொந்த பந்தங்களிடே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அடுத்தவர் பிரச்னையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை மனஉறுதியடன் போராடி வெற்றி பெற முடியும். உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனை கேட்பது பல வகையில் உதவியாக இருக்கும். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். மனக்குழப்பம் தோன்றி மறையும். பெரிய மனிர்தர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோக பணியில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி இருக்கும்.
சந்திராஷ்டமம் : 11,12,13 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 முடிய )
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பல திருப்பு முனையான விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் தொலைத்து போன சந்தோஷம் மீண்டும் வரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வராது என்று நினைத்த பொருள் கைக்கு வரும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். உங்கள் பிடிவாத குணத்தை விட்டு விடுவது எல்லா வகையிலும் நல்லது. குடும்பத்தில் எல்லாரிடமும் மற்றவர்களிடம் முக்கிய விஷயத்தில் அனுசரித்து செல்வது நல்லது. பணம் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். பேச்சில் நிதானம் அவசியம் தேவை. புதிய வீடு வாங்கும் முயற்சிகள் தாமதம் ஆகும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சந்திராஷ்டமம் : 13,14,15 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
(விசாகம் 4ம் பாதம் முடிய, பனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 பாதங்கள் முடிய )
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல சிக்கல்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் தானாகவே வரும். குடும்பத்தில் பல அவசர முடிவுகளால் பிரச்சனைகள் கொடுக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம். வீட்டை புதிப்பிக்கவோ, வீடு மாற்றி செல்லவோ வாய்ப்பு வரும். பல பிரச்சனைக்கு நடுவே பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். வரவுக்கு மீறிய செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு அவசியம். வீடு, வாகனங்களுக்கான செலவு அதிகரிக்கும். குடும்பத்துடன் பயணிக்க விருப்பம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கற இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்பிருக்கிறது. கடன் வாங்கும் என்னத்தை கை விடுவது நல்லது. உடல் நலம் தொடர்பாக மருத்துவ செலவு ஏற்படலாம். திட்டமிட்ட பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே
(மூலம் 1, 2, 3, 4 பாதம், பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1ம் பாதம் முடிய )
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் தொடக்கத்தில் மனக்குழப்பத்துடன் காணப்பட்டாலும், பிற்பாதியில் நல்ல திருப்பம் உண்டாகும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் நாளடைவில் சீராகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி போடவும். வண்டி, வாகனம் வாங்கும் எண்ணத்தை சிறிது காலம் தள்ளி வைக்கவும். தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.பணம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகரிக்கும். எங்கும், எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 பாதங்கள் முடிய)
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியம் விரைவில் முடியும். எதிர்பாராத பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் வரவுகளும், செலவுகளும் சரிசமமாக இருக்கும். உங்களிடம் புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். ஒரு காரியம் செய்யும் முன் தீர யோசித்து செய்வது நல்லது. யாருக்காகவும், எப்போதும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பொதுப்பிரச்சனைகளை எதிர்கொள்வதில் அதிக கவனம் தேவைப்படும். எதிர்பாராத சில செலவுகளால் வெளியில் கடன் வாங்கி செலவு வேண்டிய சூழ்நிலை உருவாகும். பாலிய நண்பர்களின் நிறைய ஆலோசனை கிடைக்கும். முக்கிய காரியங்களை நீங்களே செய்து முடிப்பது நல்லது. வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.புதிய தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 19,20,21 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் முடிய )
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல சௌபாக்கியங்களை பெற முடியும். மனதில் புத்துணர்ச்சியும். தெம்பும் பிறக்கும். சற்றும் எதிர்பாராத பணவரவும், அதிர்ஷ்டங்களும் வந்து சேரும். புத்தி சாதூர்யத்தால் எதையும் சாதிக்க முடியும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பிறக்கும். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பிரியமானவர்கள் வழியில் ஏதாவது மனகசப்பு ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாருக்கும் எந்த உத்திரவாதமும் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
சந்திராஷ்டமம் : 21,22,23,24 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 பாதங்கள் முடிய )
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் விருப்பத்தினை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். முயற்சி செய்யும் எல்ல காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது. எதிர்ப்புகளை சமாளிக்கும் மனவலிமை உருவாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகமும் அவர்களால் நிறைய ஆதாயமும் உண்டு. தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். எதிரிகளின் பலம் குறையும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். கடன் பிரச்சனைகள் தீரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடா வேண்டாம். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சந்திராஷ்டமம் : 24,25,26 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்