Thursday, November 5, 2026

திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, வெளி சந்தையில் அதிக விலைக்கு வாங்குவதை நியாயப் படுத்த மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது.

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் மின்வெட்டு வந்துவிட்டது. அவர்களால் சரி செய்ய முடியவில்லை. இறந்தவர்களின் உடல் எரிக்க முடியாமல் மக்கள் புலம்புகின்றனர். திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, வெளி சந்தையில் அதிக விலைக்கு வாங்குவதை நியாயப் படுத்த மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது.

எப்போது பார்த்தாலும் இந்த ஆட்சியை விமர்சனம் செய்வது ஏன் என கேட்கின்றனர். ஆட்சியின் மீது விமர்சனம் இருந்தால் என்ன செய்ய முடியம்? நான் மட்டுமா விமர்சிக்கிறேன்? அனைத்து தலைவர்களும் விமர்சிக்கின்றனர். மக்கள் பேசுகின்றனர். அடிக்கும் கூத்தை பார்த்து யார் விமர்சிக்காமல் இருக்க முடியம்? பவர் சென்டர் இருக்காது என பதவியேற்பு விழாவில் விஜய் சொன்னார். ஆனால், அவரை டம்மியாக்கிவிட்டு கார்ப்பரேட் சென்டர்கள் ஆட்டி படைக்கின்றனர். தமிழகம் அனைத்து துறைகளிலும் அடிபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

போதைபொருள் நடமாட்டத்தை ஒழிப்போம் என சொல்லி மொத்தமாக மறைத்து வைத்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்கிறது. அதில், தவெகவினர் மாட்டுகின்றனர். இவர்களுக்கு குற்றவாளிகளை பிடிக்க துப்பில்லை என்றால் சிறையில் இருந்தும் குற்றவாளிகள் தப்புகின்றனர். 30 ஆண்டுக்கு பிறகு மொத்தமாக 17 குற்றவாளிகள் தப்பிய ஒடிய சாதனை தூய சக்தி விஜய் ஆட்சியில் நடக்கிறது. பைல் திறப்பேன் என சொல்லிவிட்டு சிறைகளை திறக்கின்றனர். பொருளாதார வளர்ச்சியில் டாப்பில் இருந்த தமிழகம் அடிமட்டத்திற்கு சென்றுவிட்டது. முதல்வர் வேலை என்பது அலுவலக வேலை அல்ல. காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டும் வேலை பார்ப்பது அல்ல. அதில் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்.

எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன் என முதல்வர் இருக்க முடியாது. அவருக்கு வேறு வாய்ப்பு இல்லை. பதில் சொல்வது கடமை. அவர் பேசுவதற்கு மாதம் ஒரு முறை இடைத்தேர்தல் நடத்த வேண்டுமா? எதைக் கேட்டாலும் திமுக என முதல்வர் சொல்கிறார். அவதூறு பரப்பி விஜய் ஆட்சியை பிடித்துள்ளார். தமிழக மக்களை இரண்டாவது முறை மீண்டும் ஏமாற முடியாது ஏமாற மாட்டார்கள் என நான் நம்புகிறேன். திருச்சியில் இடைத்தேர்தல் வருகிறது. இதனால் நேரு வீட்டில் ரெய்டு நடக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment