லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா | 05.11.2026
ஜனநாயக கட்சியை சேர்ந்த சோஷியலிஸ்ட் என்று அறியப்படும் நித்யா ராமன், 45, முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை உறுப்பினராக பணியாற்றினார்
கேரள தமிழர் குடும்பத்தில் பிறந்த நித்யாவுக்கு 6 வயதாக இருக்கும்போது அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். ஹார்வார்டு பல்கலையில் பட்டம் பெற்ற அவர், மாசேசூட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.
படித்து முடித்து இந்தியா திரும்பிய அவர், சென்னையில் நகர நிர்வாகம் தொடர்பான நிறுவனத்தை தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினார். மீண்டும் அமெரிக்காவுக்கு சென்ற நித்யா, 2013ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறினார்.
தற்போதைய மேயரும், நீண்ட காலமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செல்வாக்குடன் இருப்பவருமான கரன் பாஸ் என்பவரை காட்டிலும் நித்யாவின் ஓட்டு முன்னணி வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓட்டு எண்ணிக்கை இன்னும் முடியவில்லை. எனினும், முன்னணி ஊடகங்கள் அனைத்தும் நித்யா ராமன் உறுதியாக வெற்றி பெறுவார் என்று செய்தி வெளியிட்டு வருகின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம், வரும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது. மேயராக தேர்வு செய்யப்பட்டால், நித்யா ராமன் தலைமையில் தான் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது