Thursday, November 5, 2026

‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் பாஜ சார்பில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி போராடி வரும் இண்டி கூட்டணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் பாஜ சார்பில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இன்று ஹரியானாவின் கர்னல் பகுதியில் நடந்தப் பேரணியை உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்து, பேரணியாக சென்றார். மத்திய அமைச்சர் மனோஹர் லால் கட்டார், முதல்வர் நயப் சிங் சைனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக மேடையில் அமித் ஷா பேசியதாவது; ஜனநாயக நாட்டில் பார்லியில் விவாதம் நடத்தப்பட வேண்டும். ஆனால், காங்கிரஸ் அடங்கிய எதிர்க்கட்சியினர் பார்லியை முடக்கி வருகின்றனர். பார்லியை நடத்த விடாமல் குழப்பவாதி போல ராகுல் செயல்படுகிறார். காங்கிரஸ் ஒப்புக் கொண்டால், எஸ்ஐஆர் பற்றி விவாதிக்க பார்லி சிறப்பு அமர்வை நடத்தவும் தயாராக இருக்கிறோம்.

2024ம் ஆண்டுக்கு பிறகு நடந்த எந்தவொரு மாநில தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறவே இல்லை. பிரதமர் மோடி 3 முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறார். தொடர் தோல்விகளால் காங்கிரஸ் மனவிரக்தியில், தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுகிறது. சட்டவிரோதமாக ஊடுருவிய 3 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இது காங்கிரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை செய்யாவிட்டாலும், காங்கிரஸ் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment