முக்கிய செய்திகள்:
கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது UPS விமானம் 2976 விபத்துக்குள்ளானதை வீடியோ காட்டுகிறது.
கூடுதல் தகவலுக்கு காத்திருங்கள்.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் முதன்மையான விருப்பத் தேர்வாக கனடா இருக்கும்.

அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மாணவர்களாக இருப்பார்கள். கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 1.88 லட்சம் மாணவர்கள் அந்நாட்டிற்கு படிக்க சென்றனர். இது அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளை காட்டிலும் 2 மடங்கு அதிகம் ஆகும். இதற்கு, உலகத் தரமான கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவை முக்கிய காரணமாக அமைந்து இருந்தது.
ஆனால், தற்போது அந்நாட்டில் வீடுகள் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாதது மற்றும் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற குரல் அந்நாட்டில் வலுத்து வருகிறது.இதனையடுத்து விசா விதிமுறைகளை அந்நாடு கடுமையாக்கி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
தற்போது கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளதாக அரசு தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விசா விண்ணப்பங்களில் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
அதேபோல், கல்வி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் பெரும் சரிவைக் கண்டுள்ளது. ஆகஸ்ட் 2023 இல் 20,900 ஆக இருந்து ஆகஸ்ட் 2025 இல் 4,515 ஆகக் குறைந்துள்ளது.
கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கடந்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது, ”கனடா குடியேற்ற விதிமுறைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிகமான இந்திய மாணவர்கள் கனடாவில் படிக்க வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானின் மசார் – இ – ஷரீப் பகுதியில், இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.

அதிகாலை 3.30க்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 10 பேர் பலியாகினர்.
250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பூமிக்கு அடியில் 28 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. ஏற்கனவே, நேற்று 3.9 ரிக்கர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட பூகம்பத்தால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மசார் – இ – ஷரீப் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதால், பலி, காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் எதிரொலித்ததுடன், அண்டை நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையோர பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் நிலநடுக்கத்தால் கடும் சேதங்களை சந்தித்து வரும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. மீட்பு, நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஆப்கான் அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்சட்கா தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் 24 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

நிலநடுக்க பாதிப்புகள், உயிரிழப்புகள் மற்றும் சுனாமி எச்சரிக்கைகள் பற்றிய எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம், பசிபிக் பெரும்பகுதியைச் சுற்றியுள்ள நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றம் போன்றவை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவின் சோனோராவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் வழக்கம் போல் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் உதவ, உள்துறை அமைச்சருக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம், சோனோரா மாநில கவர்னர் அல்போன்சோ இரங்கல் தெரிவித்தனர். திடீரென தீப்பற்றியதுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோற்றது.
AUSTRALIA 🏏 186/6 (20)
INDIA 🏏 185/5 (18.3)
IND won by 5 wickets (9 balls left)
T20 3 of 5 (Tied 1-1)
இந்த சூழலில், முக்கியமான மூன்றாவது போட்டி இன்று (நவ.,02) ஹோபர்ட், பெல்லிரைவ் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் (6), இங்லீஷ் (1), மார்ஷ் (11), ஓவன் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. ஆனால், மறுமுனையில் தனியொரு ஆளாக நிலைத்து நின்று விளையாடிய டிம் டேவிட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 38 பந்துகளில் 74 ரன் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
அதன்பிறகு, பேட்டிங் வந்த ஸ்டொய்னிஸ் மற்றும் ஷார்ட் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். ஸ்டொய்னிஸ் 39 பந்துகளில் 64 ரன் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும், துபே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணிக்கு துவக்கம் சுமாராக அமைந்தாலும், அபிஷேக் ஷர்மா (25), சூர்யகுமார் யாதவ் (24), திலக் வர்மா (29) ஆகியோர் தங்களின் பங்களிப்பை கொடுத்தனர். இறுதியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் அதிரடியாக விளையாடினார். 23 பந்துகளில் 49 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், இந்திய அணி 19.3 பந்தில் இலக்கை அடைந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில், 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
பிரிட்டனின் மன்னர் சார்லஸ் தனது தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். மேலும் அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண், பிரபல தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா பெண் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இளவரசர் ஆண்ட்ரூ, ‘அரச பட்டங்களை துறக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகள் மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே, பொது வாழ்க்கையில் இருந்து விலகவும் முடிவு செய்து உள்ளேன், என்றார்.
இந்நிலையில் தனது தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை மன்னர் சார்லஸ் தொடங்கி உள்ளார். மேலும் அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்யவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இளவரசர் ஆண்ட்ரூவின் உடை, படங்கள் மற்றும் கவுரவங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. இளவரசர் ஆண்ட்ரூ இப்போது ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார். அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர் மாற்று தனியார் தங்குமிடத்திற்கு செல்வார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல் உலகப் போரின் போது பிரான்சுக்குச் செல்லும் பயணத்தின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் எழுதிய ஒரு பாட்டிலில் இரண்டு செய்திகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 9 அன்று கடற்கரை சுத்தம் செய்யும் போது மேற்கு ஆஸ்திரேலியாவின் எஸ்பெரன்ஸ் அருகே வார்டன் கடற்கரையில் பிரவுன் குடும்பத்தினர் ஷ்வெப்ஸ் பாட்டிலைக் கண்டுபிடித்தனர். உள்ளே ஆகஸ்ட் 15, 1916 தேதியிட்ட 27 வயதான மால்கம் நெவில் மற்றும் 37 வயதான வில்லியம் ஹார்லி ஆகியோரிடமிருந்து வந்த பென்சில் கடிதங்கள் இருந்தன.
அவர்களது துருப்புக் கப்பலான HMAT A70 பல்லாரட், மூன்று நாட்களுக்கு முன்பு அடிலெய்டை விட்டு மேற்கு முன்னணிக்குச் சென்றது. ஒரு வருடம் கழித்து நெவில் போரில் கொல்லப்பட்டார்; ஹார்லி போரில் இருந்து தப்பினார், ஆனால் 1934 இல் புற்றுநோயால் இறந்தார், அவரது குடும்பத்தினர் அகழிகளில் விஷவாயு தாக்குதலுக்கு ஆளானதாக நம்பினர்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் வில்காவாட்டில் உள்ள தனது தாயாரிடம் தனது குறிப்பை வழங்குமாறு நெவில் கேட்டார். அவரது தாயார் இறந்துவிட்ட ஹார்லி, கண்டுபிடித்தவர் தனது சொந்தக் கடிதத்தை வைத்திருக்க முடியும் என்று கூறினார். “கண்டுபிடித்தவரும் நம்மைப் போலவே நலமாக இருக்கட்டும்” என்று அவர் எழுதினார். நெவில் தனது தாயிடம், “உண்மையான மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பதாக” கூறினார், மேலும், “கப்பல் பரபரப்பாகவும் உருளவும் செய்கிறது, ஆனால் நாங்கள் லாரியைப் போலவே மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றும் கூறினார்.
கடலோர அரிப்பு வெளிப்படுவதற்கு முன்பு, பாட்டில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மணல்மேடுகளில் புதைந்து கிடந்ததாக டெப் பிரவுன் நம்புகிறார். ஈரமாக இருந்தபோதிலும், எழுத்து தெளிவாக இருந்தது, இதனால் இரு வீரர்களின் குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடிந்தது.
அணுசக்தியால் இயங்கும் பியூரெவெஸ்ட்னிக் ஏவுகணையின் சோதனையை அறிவித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, புதன்கிழமை மாஸ்கோ அணுசக்தியால் இயங்கும் நீருக்கடியில் ட்ரோனான போஸிடானையும் சோதித்ததாகக் கூறியது. உக்ரைனில் போர் நிறுத்தத்திற்கு மாஸ்கோ தயக்கம் காட்டியதால் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்த நிலையில், ஒரு வாரத்தில் இரண்டாவது அணு ஆயுத சோதனை வந்துள்ளது.

போஸிடான் என்று அழைக்கப்படும் புதிய அணுசக்தியால் இயங்கும் மற்றும் அணுசக்தியால் இயங்கும் நீருக்கடியில் ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை அறிவித்தார்.
“இதை இடைமறிக்க முடியாத” ஒரு புதிய ஆயுதம் என்று வர்ணித்த புடின், அந்த ட்ரோன் ஏற்கனவே “டூம்ஸ்டே மெஷின்” என்று அழைக்கப்பட்டுள்ளது என்றார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் காயமடைந்த வீரர்களைச் சந்தித்த மாஸ்கோ மருத்துவமனையில் பேசிய புடின், செவ்வாயன்று முதல் முறையாக அணுசக்தியில் இயங்கும் போது போஸிடான் ட்ரோன் சோதனை செய்யப்பட்டதாகக் கூறினார். இது “வேகம் மற்றும் ஆழத்தில் ஒப்பிடமுடியாதது” என்றும் அவர் விவரித்தார்.
போஸிடானுக்கு சக்தி அளிக்கும் அணு உலை, நீர்மூழ்கிக் கப்பல்களில் உள்ள அணு உலைகளை விட “100 மடங்கு சிறியது” என்றும், அதன் அணு ஆயுதத்தின் சக்தி “எங்கள் மிகவும் மேம்பட்ட சர்மாட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை விட கணிசமாக அதிகமாக உள்ளது” என்றும் ரஷ்ய ஜனாதிபதி கூறினார்.
“முதல் முறையாக, ஒரு கேரியர் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு ஏவுகணை இயந்திரம் மூலம் அதை ஏவ முடிந்தது மட்டுமல்லாமல், இந்த சாதனம் ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கடந்த அணுசக்தி அலகையும் ஏவ முடிந்தது,” என்று புடின் கூறினார்.
அத்தகைய சோதனை நடந்ததற்கான சுயாதீனமான உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
போஸிடான் என்றால் என்ன?
கிரெம்ளினுடன் இணைந்த ஊடக நிறுவனங்கள், போஸிடான் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றன.
நேட்டோவில் “கன்யான்” என்று அழைக்கப்பட்டது, முன்னர் மாஸ்கோவால் “ஸ்டேட்டஸ்-6” என்று பெயரிடப்பட்டது, இந்த ட்ரோன் 20 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் விட்டம் மற்றும் 100 டன் எடை கொண்டது என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அணுசக்தி வரம்பற்ற வரம்பைக் கொடுப்பதால், ட்ரோனின் வேகமும் ஆழமும் அதைக் கண்டுபிடிப்பதை கடினமாக்குகிறது என்று மாஸ்கோ கூறுகிறது.
போஸிடானின் சக்தி “மிகவும் நம்பிக்கைக்குரிய சர்மாட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை” விட அதிகமாக இருந்தது, இது SS-X-29 அல்லது சாத்தான் II என்று அழைக்கப்படுகிறது.
போஸிடான் ஆறு புதிய ஆயுதங்களில் ஒன்றாகும் – இது “சூப்பர் ஆயுதங்கள்” என்று அழைக்கப்படுகிறது – ரஷ்ய ஜனாதிபதி தனது 2018 நாட்டு அரசு உரையில் குறிப்பிட்டார்.
போஸிடான் கடற்கரைகளுக்கு அருகில் வெடித்து சக்திவாய்ந்த கதிரியக்க சுனாமியை கட்டவிழ்த்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31ம் தேதி மற்றும் நவம்பர் 1ல் நடக்க உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா செல்லும் டிரம்ப் அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று (அக்.30ல்)சந்தித்து பேச உள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரம் மற்றும் வர்த்தக போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-ஜப்பான் உறவு அவசியம் என சமூகவலைதளத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தன் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். பின்னர் புதிய பிரதமராக சனே டகாய்ச்சி தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் பிரதமராக பதவியேற்றார். ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் சனே டகாய்ச்சி பெற்றுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற டகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி உடன் தொலைபேசியில் பேசினேன். பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜப்பான் உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு உள்ளிட்டவைக்கு இந்தியா-ஜப்பான் உறவுகள் மிக முக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இஸ்ரேல் – காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது.

தற்போது, போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாக கூறி, தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
அதன்படி காசாவில் பல்வேறு இடங்களில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் அக்டோபர் 2023ல் தொடங்கியதில் இருந்து காசாவில் 68,527 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். பின்னர் அதிபர் டிரம்ப் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது மீண்டும் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்க தொடங்கி இருக்கிறது.
