சென்னை – ஜோலார்பேட்டை தடத்தில், மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுதும் விரைவு ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள், சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை தடத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே விதிப்படி, ‘குரூப் ஏ’ வழித்தடத்தில், அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில், சென்ட்ரல் – அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்துக்கு முன்னுரிமை அளித்து, பணிகள் நடந்து வருகின்றன.
அதிக வளைவுகளை நீக்குவது, ரயில் பாதையை மேம்படுத்துவது, மிகவும் பழமையான ரயில்வே பாலங்களை நீக்குவது, ‘சிக்னல்’ தொழில்நுட்பம் மேம்படுத்துதல், தேவையான இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்.
- தமிழ்நாட்டில் தங்கம் விலை உயர்வு.
- தமிழகப் பொருளாதாரத்தில் பிற துறைகளின் வளர்ச்சியால், வேளாண் துறையின் பங்களிப்பும் குறைந்து கொண்டே செல்கிறது.
- இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் போராட்டம்!
- ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- ”பீஹார் மாநிலத்தை போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி தர்மத்தை பா.ஜ. கடைபிடிக்கும்.” – அண்ணாமலை.
- விகடன் எனும் எலியின் தொல்லை!
தற்போது, 50 சதவீத பணிகளை முடித்துள்ளோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் எஞ்சியுள்ள பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். – இவ்வாறு அவர்கள் கூறினர்.