இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி (Admiral Dinesh K Tripathi), இலங்கைக்கு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்திற்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23, 2025) விஜயம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஆலயத்திற்கு சென்ற இந்திய கடற்படைத் தளபதியை ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக வரவேற்றனர். அங்கு நடைபெற்ற விசேட பூஜைகளில் அவர் கலந்துகொண்டார்.
ஆன்மீக ரீதியான இந்த விஜயத்தின்போது, ஆலய நிர்வாகத்தால் அட்மிரல் தினேஷ் கே திரிபாதிக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த விஜயம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
- தேசிய நிறுவனங்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்ட தற்போதைய அரசாங்கம், இன்று மின்சார வாரியத்தின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது.
- இலங்கை மின் கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மூடி மறைக்கும் நாடகமா?
- கற்பிட்டி பகுதியில் 38 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டன.
- இலங்கை பாராளுமன்றம் இன்று கூடுகிறது
- மசாஜ் சென்டர் போல வேடமிட்டு நடத்தப்பட்ட விபச்சார விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் நான்கு பேர் கைது!
- இலங்கை வானிலை அறிக்கை
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2025 செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.