இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி (Admiral Dinesh K Tripathi), இலங்கைக்கு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்திற்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23, 2025) விஜயம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஆலயத்திற்கு சென்ற இந்திய கடற்படைத் தளபதியை ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக வரவேற்றனர். அங்கு நடைபெற்ற விசேட பூஜைகளில் அவர் கலந்துகொண்டார்.
ஆன்மீக ரீதியான இந்த விஜயத்தின்போது, ஆலய நிர்வாகத்தால் அட்மிரல் தினேஷ் கே திரிபாதிக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த விஜயம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
- மாகாண சபை முறையை அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- எரிபொருள் விலைப் நன்மை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் மக்களைச் சென்றடையலாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
- பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்ற சீனா தயாராக உள்ளது. – வெங் டொங்மின்.
- இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை: பேருந்து சேவைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாக்கு நீரிணை பகுதியில் மீன் பிடியில் ஈடுப்பட்ட 25 இந்திய மீனவர்கள் இன்று காலை கைது!
- மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2025 செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.