63
பாக்கு நீரிணை பகுதியில் இலங்கை கடற் பரப்புக்குள் மீன் பிடியில் ஈடுப்பட்ட 25 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (16-02-2025) காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
You Might Be Interested In
- “டிரம்ப் புதிய சுங்க அதிர்ச்சி: உலக சந்தைகள் அதிர்வில்”
- இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக இழுவைப் படகுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது!
- இங்கிலாந்து அரச குடும்பத்தினருடன் டினுபு சந்திப்பு: இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சி
- நீரிணையில் எரியும் நெருப்பு: எரிசக்தியும் போருமான உலகத்தின் விளிம்பு நிலை
- யேர்மனியில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்.
- தென் சூடானில் எம்.எஸ்.எப் மருத்துவமனை மீது வான்வழி தாக்குதல்: மனிதாபிமான சேவைகள் கடுமையாக பாதிப்பு
You Might Be Interested In